0
29-1451374348-1.jpg
ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் - இருபதாம் நூற்றாண்டின் மிக முக்கியமான அறிவியலாளர். மேலும் குறிப்பிடத்தக்க பயன்பாட்டுக் கணிதத் திறமைகள் கொண்ட, ஒரு கோட்பாட்டு இயற்பியல் அறிஞர் என்பதும் குறிப்பிடத்தக்கது. தற்போதைய காலத்தில் ஐன்ஸ்டைன் என்ற பெயர் ஆனது அதிக புத்திக்கூர்மையுள்ள ஒருவரைக் குறிக்கும் சொல் என்றாகி விட்டது என்பது தான் நிதர்சனம், கூடவே அந்த மாமனிதரை பற்றி வெளி உலகத்திற்கு தெரியாத ஆயிரமாயிரம் ரகசியங்கள் உள்ளது என்பதும் நிதர்சனமே..!

அப்படியான, சில 'உண்மையான' ரகசியங்களைத்தான் கீழ்வரும் ஸ்லைடர்களில் தொகுத்துள்ளோம்..! R



01. முதல் திருமணம் :

"குடும்பத்தோடு மகிழ்ந்திரு..!" என்ற தன் கூற்றின் படியே, ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் தனது முறைப்பெண்ணை முதல் திருமணம் செய்து கொண்டார். 

29-1451374351-2.jpg

02. தொடர்பு :

முதல் மனைவியை தவிர்த்து எஸ்டெல்லா, மார்கரீட்டி, எதல்லே மற்றும் டோனி என்ற பெயர் கொண்ட இரண்டு பெண்கள் உடன் தொடர்பில் இருந்தார்..! 

29-1451374353-3.jpg

03. ஐடியாக்கள் :

ஆல்பர்ட் ஐன்ஸ்டைனின் ஐடியாக்கள் மிகவும் அசாத்தியமானவைகள் ஆகும். அவைகள் தான் தற்கால நவீன இயற்பியலின் இரண்டு தூண்களில் ஒன்றாக உள்ளது. (மற்றொன்று குவாண்டம் மெக்கானிக்ஸ் ஆகும்) 

29-1451374535-6a.jpg

04. யூதர் :

ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் - ஒரு யூதர் ஆவார், ஆகையால் உலகப்போர் மூண்ட போது ஜெர்மானியை விட்டு வெளியேறி அமெரிக்கா சென்று விட்டார். 

29-1451374356-4.jpg

கடிதம் :

அமெரிக்கா சென்ற ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் - "மிகவும் விபரீதமான புதுவகை ஆயிதம் உருவாக வாய்ப்பு உள்ளது" என்று எச்சரிக்கை கடிதம் ஒன்றை அப்போதைய அமெரிக்க அதிபருக்கு அனுப்பி வைத்தார். 

29-1451374361-4b.jpg

ஆதரவு :

ஆல்பர்ட் ஐன்ஸ்டைன், இரண்டாம் உலகப் போரில் அமெரிக்க நேச படைகளுக்கு ஆதரவு அளித்தாலும் அணுஆயுதத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. 

29-1451374364-5.jpg

05. மூளை :

மே 17-ஆம் தேதி 1955-ஆம் ஆண்டு இறந்து போன ஆல்பர்ட் ஐன்ஸ்டைனின் மூளை பாதுகாக்கப்பட்டு வருகிறது.

29-1451374366-5a.jpg

06. இஸ்ரேல் ஜனாதிபதி பதவி :

1952-ஆம் ஆண்டு நவம்பர் 09-ஆம் தேதி இஸ்ரேல் ஜனாதிபதி இறந்து போனதை தொடர்ந்து ஆல்பர்ட் ஐன்ஸ்டைனுக்கு ஜனாதிபதி பதவி வழங்கப்பட்டது. அதை அவர் நிராகரித்து விட்டார்.

29-1451374369-6.jpg

காரணம் :

ஜனாதிபதி பதவியை நிராகரிக்க அவர் சொன்ன காரணம் இது தான் "எனக்கு இயற்கை உளச்சார்பு சார்ந்த விடயம் மற்றும் மக்களை ஒழுங்காக சமாளிக்கும் சார்ந்த விடயங்களில் அனுபவம் இல்லை..!"

29-1451375721-7.jpg

07.பொம்மை :

தனது தங்கையை முதன்முதலில் காணும் போது அவளை பொம்மை என்று நினைத்துக் கொண்டு சக்கரங்கள் எங்கே என்று கேட்டாராம் ! 

29-1451375724-8.jpg

08.ஆர்வம் :

5 வயது இருக்கும் போது மிக மோசமான உடல்நிலையால் படுத்த படுக்கையாய் கிடக்கும் போது அவரின் தந்தை காட்டிய பாக்கெட் காம்பஸ் தான் ஐன்ஸ்டைனுக்கு அறிவியல் மீது ஆர்வம் வர காரணமாகும். 

29-1451375725-9.jpg

09.செயின் ஸ்மோக்கர் :

ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் எப்போதுமே சிகரெட் புகைக்கும் பழக்கம் கொண்டவர் ஆவார், அதாவது ஐன்ஸ்டைன் ஒரு செயின் ஸ்மோக்கர் ஆவார்.

கருத்துரையிடுக Disqus

 
Top