0
உலகின் பிரபல தொழில்நுட்ப நிறுவனங்களும், பல்வேறு சிறு நிறுவன கண்டுபிடிப்பாளர்களின் கருவிகளும் இந்தாண்டின் துவக்கத்திலேயே உலகை விழி பிதுங்க வைத்து விட்டது. சில தினங்களுக்கு முன் அமெரிக்காவில் நடைபெற்ற வாடிக்கையாளர் மின்சாதன விழாவில் அறிமுகம் செய்யப்பட்ட சில விசித்திர கருவிகளை பற்றி தான் இங்கு தொகுத்திருக்கின்றோம். 

சாதாரண கருவிகள் என்பதையும் தாண்டி பல அம்சங்களை வழங்க இவை தவறவில்லை என்பதோடு இதற்கும் கருவிகளா என அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தும் என்றே கூற வேண்டும். 

samsung-4-door-flex-refrigerator-with-fa

ஃபேமிலி ஹப் குளிர்சாதன பெட்டி

21.5 இன்ச் ஃபுல் எச்டி தொடு திரை ( டச் ஸ்கிரீன் ) கொண்டிருக்கும் இந்த குளிர்சாதன பெட்டியில் உணவு வகைகளை பதப்படுத்துவதை தாண்டி புகைப்படம், இசை மற்றும் டிவி உள்ளிட்ட கூடுதல் அம்சங்களும் வழங்கப்பட்டுள்ளது. மேலும் இதனுள் பொருத்தப்பட்டிருக்கும் கேமராக்கள் உள் இருக்கும் பொருட்களை திரையில் காண்பிக்கும். இதனால் ஒவ்வொரு முறையும் கதவை திறக்க வேண்டிய அவசியம் ஏற்படாது. மேலும் இது விரைவில் விற்பனைக்கு வரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

25-1453706027-02.jpg

ஸ்மார்ட்ஷூ

ஸ்மார்ட்போன், ஸ்மார்ட் டிவி போன்ற கருவிகளை தொடர்ந்து ஸ்மார்ட் பட்டியலில் இணைந்திருக்கின்றது காலணிகள். அந்த வகையில் டிஜிட்சோல் அறிமுகம் செய்திருக்கும் ஸ்மார்ட்ஷூ குளிர்காலங்களில் காலணியை வெப்பமாக வைத்திருக்கும் என்றும் தினசரி நடை பழக்க வழக்கங்களை ட்ராக் செய்து அதன் மூலம் உடலில் எரிக்கப்பட்ட கலோரிகளை கண்டறியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

25-1453706029-03.jpg

க்யூப் 

சுற்றுலா செல்லும் போது பயன்படக்கூடிய இந்த கருவி இரு வித பயன்பாடுகளை வழங்குகின்றது. அதன் படி கையில் எளிமையாக எடுத்து செல்ல கூடிய குளிர்சாதன பெட்டி மற்றும் 125 டெசிபள் சத்தம் கொண்ட ஸ்டீரியோ ஸ்பீக்கர் போன்று இதனை பயன்படுத்தலாம்.

25-1453706030-04.jpg

ஸ்கல்ப்ட் சிசெல் 

உடலில் உங்களது தசை எந்தளவு உறுதியாக இருக்கின்றது என்பதை அறிந்து கொள்ள வழி செய்யும் கையடக்க கருவி தான் ஸ்கல்ப்ட் சிசெல். இந்த சிறிய கருவியானது ஸ்மார்ட்போன் செயலியுடன் இணைந்து வேலை செய்கின்றது. 

25-1453706031-05.jpg

ரோலி சீபோர்டு ரைஸ்

பார்க்க பியானோ போன்று காட்சியளிக்கும் இந்த இசை கருவி முற்றிலும் ப்ரெஷர் சென்சிட்டிவ் சென்சார் பொருத்தப்பட்டுள்ளது. இதனால் வாசிப்பவர்கள் கொடுக்கும் அழுத்தத்திற்கு ஏற்ப இசையை மீட்ட முடியும். இந்த கருவி பெரும்பாலும் டிஜிட்டல் இசை கலைஞர்களுக்கு உதவியாக இருக்கும் படி வடிவமைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

25-1453706033-06.jpg

எக்ஸ் ஸ்கூட்டர் 

பார்க்க சிறிய மிதிவன்டு போன்று காட்சியளிக்கும் இந்த ஸ்கூட்டர் ஒரு முறை சார்ஜ் செய்தால் சுமார் 15 மைல் பயணிக்க முடியும் என்றும் அதிக பட்சமாக மணிக்கு சுமார் 17 மீட்டர் வரை வேகத்தில் செல்ல முடியும் என்றும் கூறப்பட்டுள்ளது. 

25-1453706034-07.jpg

இஹாங் 

டிரோன் மூலம் புகைப்படம் மற்றும் வீடியோ மட்டும் தான் எடுக்க முடியும் என்பதெல்லாம் மாறி, டிரோன் மூலம் பறக்கவும் முடியும் என்பதை உறுதி செய்திருக்கின்றது இஹாங் டிரோன். 4.5 அடி உயரம் இருக்கும் இந்த டிரோன் ஒருவரை சுமந்து கொண்டு தொடர்ச்சியாக 23 நிமிடங்களுக்கு வானில் பறக்க முடியும். அதிகபட்சம் மணிக்கு 60 மீட்டர் வரை வேகத்தில் பறதக்கும் என கூறப்படுகின்றது. இதன் மொத்த எடை 440 199.581 கிலோ மட்டும் தான் என்பதும் குறிப்பிடத்தக்கது.

கருத்துரையிடுக Disqus

 
Top