0


ஸ்ம்ரிதி இராணியின் அனல்பறந்த உணர்ச்சிகரமான முக்கால்
மணிநேர உரை பார்லிமென்ட்டை முழுக்க கட்டிபோட்டு விட்டது.சின்ன சின்ன முனங்கல்கள் மட்டுமே எதிர்தரப்பில்..


பிஜேபியின் எதிர்கால அரசியலில் நிச்சயம் ஸ்மிரிதி ஜொலிப்பார் இந்தி முழுமையாக புரியவில்லைஎன்றாலும் இடையிடையே எட்டி பார்த்த ஆங்கலத்திலும் முக்கால் மணி நேரம் புரியாதபாஷையில் ஒருவர் பேசுவதை கேட்கும் பொழுதே தெரிந்து விட்டது உரையின் ஆளுமை--




நான் ஸ்ம்ரிதி இராணி என்னுடைய சாதியை யாராலும் சொல்ல முடியுமா என்று கம்பீரமாக சபையை பார்த்து கேட்டுநான் என்னுடைய கடமையை செய்தேன் .இதற்காக யாரிடமும் மன்னிப்பு கேட்க வேண்டிய அவசியமில்லை என்று எதிர் தரப்பை பார்த்து கேட்ட தோரணைக்கு சல்யூட்.


ஸ்ம்ரிதியின் உரையில் சில...


இதே தெலுங்கானாவில் தெலுங்கானா மாநிலம் கேட்டு
போராடி எத்தனை மாணவர்கள்தற்கொலை செய்தார்கள்..


600
மாணவர்கள் காங்கிரஸ் ஆட்சியில் இறந்துள்ளார்கள் பேருக்கா வது ஒரு தடவையாவது எந்த காலேஜ்குள்ளேவாவது போய் எட்டி பார்த்து மாணவர்களை சந்த்தித்தது உண்டா..


ஆனால் ரோஹித் வெமுலாவின் தற்கொலைக்கு இரண்டு தடவை போய் விடிய விடிய துக்கம் விசாரிச்ச ராகுலின் நோக்கம் அரசியல்தானே என்ற.. ஸ்ம்ரிதியின் கேள்விக்கு காங்கிரஸ் கூடாரம் கப்சிப்.


ரோஹித் வெமுலாவையும் பிற மாணவர்களையும் இடை நீக்கம் செய்து நடவடிக்கை எடுத்த நிர்வாககுழுவின் அனைத்து
உறுப்பினர்களும் காங்கிரஸ் ஆட்சியில் நியமிக்கபட்டவர்கள்.



நாங்கள் காலேஜ் நிர்வாகத்தில் எந்த தலையீடும் செய்ததில்லை
என்ற ஸ்ம்ரிதியின் சீறலுக்கு காங்கிரஸ் மவுனம்..


அந்த பையனின் உயிரை காப்பாற்ற ஏன் எந்த டாக்டரையும்
கூப்பிடவில்லை .


அந்த பையன்தூக்கில் தொங்கினதாக சொல்லப்படும் அன்று சாயந்திரத்தில் இருந்து மறுநாள் காலை போலிஸ் வரும் வரை இவர்கள் ஹாஸ்டலில் இருந்து அந்த பையனை தூக்கி கொண்டு எந்த ஹாஸ்பிட்டலுக்கும் செல்ல வில்லை.


என்ற ஸ்ம்ரிதியின் கேள்வியில் உள்ளநியாயத்திற்கு
விரைவில் பதில் கிடைக்கும்.


துர்கா பூஜை அன்று நாடு போற்றும் தெய்வம் துர்காதேவியை செக்ஸ் வொர்கர் என்றும் மகிசாசுரனை வாழ்த்தியும் ஜேஎன்யூ மாணவர் கூட்டம் போட்ட கோசங்களை கொல்கத்தா தெருக்க ளில் வைத்து விவாதிக்க ராகுல் தயாரா?


என்று கேட்டபொழுது ஸ்ம்ரிதியின் குரலில் தொனித்த வேதனையை பார்க்கும் பொழுது மனசு வலித்தது.


யாகூப்மேமனுக்கு தூக்கு தண்டனை விதித்த சுப்ரீம்கோர்ட் ஜட்ஜ்ஒரு இந்து பாசிஸ்ட் அப்சல்குருவை தூக்கிலிடவைத்த ஜனாதிபதிவிமர்சித்து ஒட்டிய போஸ்டர்களை வைத்து இதுவா நீங்கள் விரும்பும் பேச்சுரிமை.


இதுவா மாணவர்கள் உரிமை என்று கோபபட்டு பேசும் பொழுது நெஞ்சு கொதித்தது.


ஒரு கட்டத்தில் இந்த தேசத்திற்கு வாழ்வேன் இந்த தேசத்திற்காகசாவேன்..கங்கைநீரில் என்னுடைய அஸ்தி கரையும்வரை இந்த தேசதத்திற்காக என்னுடைய துடிப்பு அடங்காது பாரத் மாதா கீ...ஜே,


என்று உணர்ச்சியுடன் சொல்லும்போது அவர் கண்களில் மின்னிய பெருமையை பார்க்கும் பொழுது என்னுடைய கண்களில் தண்ணீர் வந்தது...

கருத்துரையிடுக Disqus

 
Top