0

ண்டு தோறும் தாக்கல் செய்யப்பட்டு, விமர்சனத்துக்கு உள்ளாகும் மத்திய பட்ஜெட் மீது இந்த ஆண்டும் விமர்சனம் எழவே செய்தது. வழக்கம்போல ‘நடுத்தர வர்க்கத்தினருக்கு இந்த பட்ஜெட்டில் எதுவுமில்லை’ என்கிற மனக்குறையை பரவலாகவே கேட்க முடிந்தது.
 
அதிலும் மாதச் சம்பளம் வாங்குகிறவர்கள், ‘இந்த பட்ஜெட்டில் எங்களுக்கு எதுவும் செய்யாமலே விட்டுவிட்டார்களே!’ என்று புலம்பித் தீர்த்துவிட்டனர். அவர்களுக்கு முக்கிய குறையாக அமைந்ததற்கு காரணம், வருமான வரி வரம்பு உயர்த்தப்படாததே!
 
வருமான வரி வரம்பில் மாற்றம் எதுவுமில்லை என்றாலும் இன்னொரு முக்கியமான விஷயம் இந்த பட்ஜெட்டில் நடந்திருக்கிறது. ரூ.5,00,000 வரையிலான வருமானத்துக்கு தற்போது வழங்கப்பட்டு வரும் வரி தள்ளுபடி (Tax rebate) ரூ.2,000-லிருந்து ரூ.5,000-ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இது  உள்ளபடியே மாதச் சம்பளம் வாங்குகிறவர்களுக்கு ஆறுதலான விஷயம்தான்.
 
இந்த ரூ.3,000 கூடுதல் வரி தள்ளுபடியானது, ரூ.30,000 வருமானத்துக்கான வரி கட்டுவதிலிருந்து ஒருவரைப் பாதுகாக்கும்.
 
ஒரு ஊழியர் மாதமொன்றுக்கு சம்பளமாக ரூ.41,666 வாங்கினால் தான் அவரது ஆண்டு வருமானம் ரூ.5,00,000 அடையும். எனவே, இவர்களுக்குத்தான் இந்த வரிச் சலுகை கிடைக்கும் என்று நினைக்கக் கூடாது. இதற்கு அதிகமாக மாதச் சம்பளம் வாங்குகிறவர்களுக்கும் இந்தச் சலுகை கிடைக்கும் என்பதே மகிழ்ச்சி அளிக்கும் நிஜம். எப்படி?
 
ஒருவருடைய வருமானம் எவ்வளவாக இருந்தாலும் பல்வேறு சலுகைகளைக் கழித்தபின் இறுதியாகக் கிடைக்கும் தொகைக்கு மட்டுமே வருமான வரி கட்ட வேண்டி இருக்கும் என்பது அடிப்படை உண்மை. அந்தச் சலுகைகள் என்னென்ன என்பதை தெரிந்துகொள்வது முக்கியம்.
 
முதலில், வருமானம் (Income) என கணக்கில் எடுத்துக் கொள்ளப்படாத வரவுகளை பார்ப்போம். கீழ்க்கண்ட நான்கு இனங்களுக்கு வழங்கப்படும் தொகைக்கு வருமான வரி பிடித்தம் கிடையாது. 
 
அ) இரண்டு ஆண்டு அல்லது நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை விடுப்பு கால சுற்றுலா (Leave Travel Allowance சுருக்கமாக, LTA) குடும்பத்துடன் செல்ல தரப்படும் தொகை.
 
ஆ) ஓய்வு பெறும் ஊழியர் களுக்கு தரப்படும் பணிக்கொடை (Death-cum Retirement Gratuity)
இ) ஓய்வு பெறும் நாளில் நிலுவையில் உள்ள ஈட்டிய விடுப்பை ஒப்படைத்து பெறும் பணம் 
ஈ) ஓய்வூதியத்தில் மூன்றில் ஒரு பங்கை தொகுப்பு (Commutation) செய்து பெறும் மொத்தத் தொகை
 
உ) வைப்பு நிதியில் (General Provident Fund) உள்ள சேமிப்பு இறுதி தொகை (Final withdrawal) (ஓய்வு பெற்றபின் தரப்படுவது)
 
ஊ) சிறப்பு சேமநிதி அசல், வட்டி மற்றும் அரசு மானியம் (ஓய்வு பெறும்போது தரப்படுவது)


இரண்டாவதாக, ஒட்டுமொத்த வருமானத்தைக் கணக்கிட்டபின் செக்‌ஷன் 16-ன் கீழ் கழித்துக் கொள்ளப்படும் இனங்கள் பின்வருமாறு:
 
அ) வீட்டு வாடகை, ஆ) வீட்டுக் கடன் மீதான வட்டி, இ) தொழில் வரி, ஈ) கேளிக்கைபடி (Entertainment Allowance), உ) மாற்றுத் திறனாளிகள் பராமரிப்பு செலவு, ஊ) பிரதமர் நிவாரண நிதி நன்கொடை, எ) முதலமைச்சர் நிவாரண நிதி நன்கொடை முதலியன.
 
மூன்றாவதாக, சேமிப்பு மற்றும் செலவு தொகைகளை கழித்துக் கொள்ளும் சலுகைகள். பி.எஃப்.க்காக செலுத்தப்படும் தொகை, இன்ஷூரன்ஸ் பிரீமியம், வரிச் சலுகை மியூச்சுவல் ஃபண்டுகள், வீட்டுக்கடன் அசல் திருப்புத் தொகை, இரு குழந்தைகளின் கல்விச் செலவு போன்றவை.
 
நான்காவதாக, வரி விதிக்கப்படாத வருமான வரம்பு அவரவர் வருமானத்துக்கேற்ப வரும் தொகைக்கும் வரி கிடையாது. அதாவது, 60 வயது உள்ள வருமானம் ஈட்டுபவர்கள் ரூ.2,50,000 வரையிலும், 60 வயது நிரம்பிய மூத்த குடிமக்களுக்கு ரூ.3,00,000 வரையிலும், 80 வயது தாண்டிய மூத்த குடிமக்களுக்கு ரூ.5,00,000 வரை வருமான வரி கிடையாது.

மேற்கண்ட இந்த நான்கு சலுகைகளுக்கான தொகைகள் ஒட்டுமொத்த வருமானத்தில் படிப்படியாக குறைக்கப்பட்டு, நிகர வருவாயாக வருவதே வருமான வரிக்கு உரிய தொகை (Taxable Income). இந்த தொகை ஐந்து லட்சத்துக்கு மிகாமல் இருப்பின் வரியில் ரூ.5,000 தள்ளுபடி தரப்படும் என்பதுதான் இப்போது அறிவிக்கப்பட்டு இருக்கும் சலுகை.

இந்த நான்கு பிரிவிலும் தரப்பட்டுள்ள சலுகைகளை எந்த அளவுக்கு பயன்படுத்திக் கொள்ள முடியுமோ (பார்க்க, முன்பக்கம் உள்ள மாதிரி வருமான வரி கணக்கீடு), அந்த அளவுக்கு பயன்படுத்திக் கொள்வதன் மூலம் (உதாரணமாக, வீட்டுக்கடன் பெறாத ஒருவர் அதன் மூலம் கிடைக்கும் பயனை அடைய முடியாது; அதே போல, உடற்குறையுள்ள மகனோ, மகளோ இல்லை எனில், அதற்கான பராமரிப்பு செலவைக் கணக்கில் காட்ட முடியாது!) மொத்த வருமானத்திலிருந்து வரி கட்டுவதற்கான வருமானத்தைக் குறைக்க முடியும். இந்த வருமானம் 5,00,000 ரூபாய்க்கு கீழ் இருந்தால்,  ரூ.5,000 வரி தள்ளுபடி கிடைப்பது நிச்சயம்!

கருத்துரையிடுக Disqus

 
Top