உலகின் மிகவும் ' மர்மம் ' நிறைந்த பகுதியாக அறியப்படும் ' ஏரியா 51 ' இல்
அப்படி என்ன தான் இருக்கின்றது. அங்கு என்ன தான் நடக்கின்றது என்ற
கேள்விகளுக்கு இன்று வரை அதிகாரப்பூர்வமான, தெளிவான பதில் இல்லை.
இங்கு அடிக்கடி அடையாளம் தெரியாத ' பறக்கும் பொருள் ' வந்து செல்கின்றது. இப்பகுதியில்
' ஏலியன்களின் ' நடமாட்டம்
இருக்கின்றது என ஒருப்பக்கமும், மற்றொரு தரப்பினர் இங்கு ராணுவ சோதனை
மையம் இயங்கி வருகின்றது என்றும் பலத்தரப்பட்ட கருத்துகள் நிலவுகின்றன.
இங்கு ' ஏரியா 51 ' குறித்து பலருக்கும் தெரியாத சில தகவல்களை தான் தொகுத்திருக்கின்றோம்..
பெயர்
' ஏரியா 51 ' பகுதியின் உண்மை பெயர் நெவேடா டெஸ்ட் அன்டு டிரெயய்னிங் ரேன்ஜ் ஆகும். இப்பகுதியில் ' இரண்டாம் உலக போரின் ' போது அணு ஆயுத சோதனை செய்யப்பட்டது.
பலகை
இப்பகுதியில் 1 முதல் 30 வரை பெயர் பலகைகள் இருக்கின்றன. தற்சமயம் ' ஏரியா 51 ' என அழைக்கப்படும் இடத்தில் 15 ஆம் எண் இருந்தது என்றும் பின்னாளில் இது ' ஏரியா 51 ' என அழைக்கப்பட்டு வருவதாக கூறப்படுகின்றது.
அழைப்பு
1997 ஆம் ஆண்டு கோஸ்ட் டூ கோஸ்ட் ஏம் ரேடியோ நிகழ்ச்சிக்கு ஒரு ' மர்ம ' அழைப்பு வந்தது. அழைத்தவர் தான் ' ஏரியா 51 ' பகுதியின் முன்னாள் ஊழியர் என தெரிவித்தார்.
துண்டிப்பு
தனக்கு உதவி
வேண்டும் என்றும், தான் இருக்கும் இடம் தெரியவில்லை என்றும், யாரோ தன்னை
அழைத்து செல்வதாக கூறிய அவரது அழைப்பு சிக்னல் கோளாரால் திடீரென
துண்டித்துவிட்டது.
சுரங்கம்
' ஏரியா 51 ' பகுதியாக
நமக்கு தெரிவது ஐஸ்பெர்க் நுனி மட்டுமே, இதனுள் நிலத்துக்கு அடியில்
எராளமான சுரங்கங்களும், பல்வேறு வசதிகளும் இருக்கின்றது.
பாப் லஸார், எஸ்-4
' ஏரியா 51 ' சார்ந்த ' மர்மங்களில் ' இவரும் இடம்பெற்றுள்ளார். பாப் லஸார் என அழைக்கப்படும் இவர் 1989 ஆம் ஆண்டு முதல் ' ஏரியா 51 ' சோதனை பகுதியின் எஸ்-4 பிரிவில் பணியாற்றி வருவதாக கூறப்படுகின்றது.
ஏலியன் தொழில்நுட்பம்
எஸ்-4 பரிவில் பாப் ரிவர்ஸ் இன்ஜினியரிங் மற்றும் ' ஏலியன் ' ' தொழில்நுட்பம் ' சார்ந்த ஆய்வில் ஈடுப்பட்டிருந்ததாகவும் அச்சமயம் அவர் அங்கு அதிகப்படியான ' ஏலியன் '
' விண்கலங்களை 'பார்த்ததாகவும், இதுகுறித்து அவர் அதிகப்படியான தகவல்களை வழங்கியுள்ளதாகவும் கூறப்படுகின்றது.
இயக்கம்
மேலும் பாப் லஸார் அளித்த தகவல்களில் ' ஏலியன் ' ' விண்கலம் ' எவ்வாறு இயங்குகின்றது என்பது குறித்த தகவல்களும் அடங்கியிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
உன்னுன்பென்டியம்
அவ்வாறு அவர் வழங்கிய தகவல்களில் ஒரு வகை ' ஏலியன் ' ' விண்கலம் ' உன்னுன்பென்டியம்
என அழைக்கப்படுகின்றது. இது தனிம அட்டவணையில் இருக்கும் தற்காலிக பெயர்
என்பதும் குறிப்பிடத்தக்கது. அணு எண் 115 ஆக கொண்டுள்ள இதன் தற்காலிக
சின்னம் Uup.
விளைவு
இந்த அணு எண் 115 ஆனது எதிர்ப்பு ஈர்ப்பு விளைவுகளை ஏற்படுத்தும் திறன் கொண்டது என்றும் கூறப்படுகின்றது.
கண்டுபிடிப்பு
உலகில்
உன்னுன்பென்டியம் 2003 ஆம் ஆண்டு தான் முதலில் கண்டுபிடிக்கப்பட்டது. ஆனால்
லஸார் இதனை 14 ஆண்டுகளுக்கு முன்பே கண்டுபிடித்து விட்டதாகவும்
கூறப்படுகின்றது.
தகவல்
இதோடு ' ஏலியன்கள் ' எவ்வாறு 100,000ஆண்டுகளாக ' பூமிக்கு ' வந்து செல்கின்றது என்பதற்கான விளக்கத்தையும் லஸார் தெரிவித்துள்ளதாக கூறப்படுகின்றது.
இருப்பு
இந்த ' ஏலியன்களானது ' மிகவும் குளிர்ந்த கிரகத்தில் இருப்பதாகவும், இந்த ' கிரகம் ' ' பூமியில் ' இருந்து சுமார் 39 ஒளி ஆண்டுகள் தொலைவில் இருக்கின்றது என்றும் லஸார் தெரிவித்துள்ளார்.
டிகாபூ பீக்
' ஏரியா 51 ' பகுதியை நேரில் பார்க்க டிகாபூ பீக் செல்ல வேண்டும். இங்கிருந்து சுமார் 42 கிலோமீட்டர் தொலைவில் ' ஏரியா 51 ' அமைந்துள்ளது. இதனால் நேரில் பார்க்க நிச்சயம் தொலைநோக்கி தேவைப்படும்.
இரு இடங்கள்
முன்னதாக வைட் சைட்ஸ் மற்றும் ஃப்ரீடம் ரிட்ஜ் என இரு இடங்களில் இருந்து ' ஏரியா 51 ' பகுதியை பார்க்க முடிந்தது, ஆனால் இவை இரண்டும் பின்னாளில் அரசாங்கம் கைப்பற்றி கொண்டது.
பணியாளர்கள்
' ஏரியா 51 ' பகுதியில் பணியாற்றுபவர்களுக்கென தினமும் லாஸ் வேகாசில் இருந்து 20 விமானங்கள்
' ஏரியா 51 ' பகுதிக்கு விமானம் சென்று வருவதாக கூறப்படுகின்றது. தினமும் 1000 ஊழியர்கள் அங்கு சென்று வருவதாகவும் கூறப்படுகின்றது.
ஜானெட் (Janet)
வெள்ளை நிற விமாத்தின் நடுவே சிவப்பு கோடு இருக்கும். ஜேனெட் என அழைக்கப்படும் இந்த விமானம் மட்டும் தான் ' ஏரியா 51 ' பகுதியின் வானில் பறக்க அனுமதிக்கப்படுகின்றது. ராணுவ விமானங்களுக்கு கூட இங்கு பறக்க அனுமதி கிடையாது என்பதும் குறிப்பிடத்தக்கது.
விரிவாக்கம்
லாஸ் வேகாஸ் நகரில் ஜானெட் என்பது ஜாயின்ட் ஏர் நெட்வர்க் ஆஃப் எம்ப்ளாயீஸ் டிரான்ஸ்போர்டேஷன் என நம்பப்படுகின்றது.
உடை
விமானத்தில்
சென்று திரும்புவோர் யாரும் சீருடை அணிவதில்லை, அவர்கள் சாதாரண உடையில்
தான் காணப்படுகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
விண்வெளி
1974 ஆம் ஆண்டு அமெரிக்காவின் ஆளில்லா ' விண்வெளி ' ஓடமான ஸ்கைலேபில் இருந்து ' விண்வெளி ' வீரர்கள் ' ஏரியா 51 ' பகுதியை
புகைப்படம் எடுத்தனர். பலக்கட்ட பேச்சுவார்த்தைகளுக்கு பின் அந்த
புகைப்படம் வெளியிடப்பட்டது. ஆனால் 33 ஆண்டுகளுக்கு அந்த புகைப்படம்
யாராலும் கவனிக்கப்படவில்லை.
அனுமதி
1996 ஆம் ஆண்டு
திரைப்படமான இன்டிபென்டென்ஸ் டே குழுவினருக்கு வாகனம், ஆடை மற்றும் ராணுவ
தளங்களில் படப்படிப்பு நடத்த அனுமதி வழங்கு அமெரிக்க ராணுவம்
ஒப்புக்கொண்டது, ஆனால் ' ஏரியா 51 ' சார்ந்த குறிப்புகளை கதையில் பார்த்த பின் அனுமதி மறுக்கப்பட்டது.
க்ரூம் ஏரி
ராணுவ தளத்தின்
க்ரூம் ஏரி இருப்பது குறித்த தகவல்கள் பரவலாக பேசப்பட்ட போதும், அமெரிக்க
அரசு இது குறித்து எவ்வித தகவலும் வழங்காமல் இருந்தது.
குறிப்பு
கருத்துரையிடுக Facebook Disqus