0
Shot013.png


கம்ப்யூட்டரில் தமிழில் டைப் செய்திட, மைக்ரோசாப்ட் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில், நமக்கு மாறா நிலையில் கிடைப்பது 'லதா' என்ற பெயரில் கிடைக்கும் எழுத்துருதான். வேறு சில தமிழ் சாப்ட்வேர் மற்றும் ட்ரைவர்கள் வழங்குவோர், சில யூனிகோட் தமிழ் எழுத்துருக்களைத் தந்துள்ளனர். இவற்றில் பெரும்பாலானவை, அந்த சாப்ட்வேர் புரோகிராமுடன் மட்டுமே இயங்கும் தன்மை கொண்டவையாக உள்ளன.


தனிப்பட்ட டி.டி.எப். எழுத்துவகையாக, தமிழ் யூனிகோட் கட்டமைப்பில் பயன்படுத்த, அண்மையில் தமிழ்ப் புத்தாண்டு அன்று, விசுவல் மீடியா டெக்னாலஜிஸ் நிறுவனம், Uni Amma என்ற பெயரில், 15 வகை எழுத்துருக்களை வெளியிட்டுள்ளது. இணையத்தில், இவற்றை http://visualmediatech.com/fonts/ என்ற இணையதளத்தில் இருந்து தரவிறக்கம் செய்து கொள்ளலாம். மின் நூல், அஞ்சல்கள் வடிவமைப்பு மற்றும் குறுஞ்செயலிகள் என அனைத்திலும் இவற்றைப் பயன்படுத்தலாம் என்று இதனை வடிவமைத்த பொறியாளர், செல்வ முரளி அறிவித்துள்ளார். விரைவில் இன்னும் 100 எழுத்துருக்கள் வெளியாகும் எனவும் தெரிவித்துள்ளார்.


SIZE :808KB

DOWNLOAD LINK: 

http:filerio.in 

httpzippyshare.com

கருத்துரையிடுக Disqus

 
Top