1977-ஆம்
ஆண்டு, ஆகஸ்ட் 15 ஆம் தேதி, ஈடி (ET)எனப்படும் எக்ஸ்ட்ரா டெர்ரெஸ்ட்ரியல்
(Extra Terrestrial) வானியலாளர் ஜெர்ரி ஏமன் (Jerry Ehman), வேற்று கிரக
நாகரீகத்தில் இருந்து ஏதேனும் சிக்னல் கிடைக்குமா என்று 'பிக் இயர்
தொலைநோக்கி' ஒன்றின் மூலம் வானத்தை அலசிக் கொண்டிருந்தார். சரியாக இரவு
10.16 மணிக்கு, அவருக்கு மிகவும் விச்திரமான சிக்னல் ஒன்று கிடைத்தது - அது
தான் 'வாவ்' சிக்னல் (Wow Signal)..!
எண்ணற்ற
அறிவியல் புனைக்கதைகளை கொண்ட விடயங்களில் 'வாவ்' சிக்னலும் ஒன்று. ஆகினும்
கூட, இது தான் வேற்று கிரகவாசிகள் சார்ந்த ஆதாரங்களில் மிகவும் பலமான
ஒன்றாகும். இந்த பிரபஞ்சத்தில் நாம் 'தனியாக இல்லை' என்பதை நாம் நம்பியே ஆக
வேண்டும் என்று உணர்த்தும் வாவ் சிக்னல் உண்மையில் என்ன சொல்ல வருகிறது.?!
என்ன அர்த்தத்தை உள்ளடக்கியுள்ளது..!? - என்பதை யாராலும்
புரிந்துக்கொள்ளவே முடியவில்லை..!
வாவ் :
ஓஹியோ தேசிய
பல்கலைக்கழகத்தின் தொலைநோக்கி மூலம் வாவ் சிக்னலை கண்டறிந்த ஜெர்ரி முதல்
பல வானவியலாளர்கள், சுமார் 39 வருடங்களாக வாவ் சிக்னலில் இருந்து என்ன
புரிந்துக்கொள்ள முடியும், என்பதை கண்டுப்பிடிக்கவே இல்லை.
ச்சி சகிட்டரி :
சகிட்டாரியஸ்
விண்மீன் குழாமில் (constellation of Sagittarius) உள்ள 'ச்சி சகிட்டரி'
(Chi Sagittarii) என்ற 3 நட்சத்திர அமைப்புகளை நோக்கிய திசையில் தொலைநோக்கி
மூலம் ஆராயும் போதுதான் 'வாவ்' சிக்னல் கிடைக்கப்பெற்றது.
பின்னணி இரைச்சல் :
சுமார் 72
நொடிகள் நீளமுள்ள 72 ரேடியோ அலை வெடிப்பு சத்தத்தை அதாவது, ஒரு வலுவான
மற்றும் மிகவும் தொலைவான பின்னணி இரைச்சலின் சிக்னல் பதிவு செய்யப்பட்டது.
பிரிண்ட் அவுட் :
வானிலை ஆய்வு
கம்ப்யூட்டரில் இருந்து வெளியான அந்த சிக்னலின் பிரிண்ட் அவுட்டிலில்
மிகவும் அசாதாரணமான அந்த சிக்னல் ஆனது ஜெர்ரி மூலம் வட்டமிடப்பட்டு வாவ்
என்று குறிப்பும் எழுதப்பட்டது.
தொழில்நுட்ப திறன் :
கிடைக்கபெற்ற
இந்த சிக்னல் ஆனது ஒரு வகையான வானியல் தொழில்நுட்பமாகும், இதை கொண்டு
வேற்றுகிரகங்களை அடையக்கூடிய தொழில்நுட்ப திறன்களை நம்மால் உருவாக்கி கொள்ள
முடியும் என்று ஜெர்ரி அப்போதே கோட்பாடுகள் வகுத்தார்.
3 வரிசை :
கிடைத்த
சிக்னலில் "6EQUJ5" என்ற எழுத்துக்கள் ஒரு வரிசையிலும், "6" , "7"
ஆகியவைகள் வெவ்வேறு வரிசையிலும் ஜெர்ரியால் வட்டமிடப்பட்டு இருக்கின்றன.
சிக்னலின் வலிமை :
இதில் 1-9
வரையிலான எண்கள் குறியீடாகும், ஆங்கில எழுத்துகள் கிடைக்கப்பெற்ற சிக்னலின்
வலிமையை உணர்த்தின. இப்படி பல வகையான சிக்கலான முறைகளில் ஆய்வு
செய்தும்கூட 'வாவ்' சிக்னலின் விளக்கம் கண்டுபிடிக்கப்படவேயில்லை.
அண்ட நிகழ்வு :
தற்போது
முற்றிலும் வேறுபட்ட அண்ட நிகழ்வு பயன்படுத்தி (cosmic phenomenon) வாவ்
சிக்னல் உண்மையில் என்ன உள்ளடக்கம் கொண்டுள்ளது என்று
கண்டுப்பிடிக்கப்படும் முயற்சிகள் நடக்க இருக்கிறது.
அந்தோனியோ பாரிஸ் :
பீடர்ஸ்பர்க்
கல்லூரியின் பேராசிரியரும், அமெரிக்க பாதுகாப்புத் துறையின் முன்னாள்
ஆய்வாளர் ஆன அந்தோனியோ பாரிஸ் புதிய வகை அண்ட நிகழ்வு முயற்ச்சியை நிகழ்த்த
இருக்கிறார்.
சந்தேகம் :
அதுமட்டுமின்றி
வாவ் சிக்னல் கிடைக்கப்பெற உதவியதாக கூறப்படும் இரண்டு
"சந்தேகத்திற்கிடமான" வால்மீன்கள் (266P/Christensen and 335P/Gibbs)
முறையே 2006 மற்றும் 2008 ஆம் ஆண்டுதான் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
ஏற்றுக்கொள்ள முடியவில்லை :
இப்படியிருக்க
1977-ஆம் ஆண்டில் இப்படியான இரண்டு விண்மீன்கள் இருக்கிறது என்பது கூட
தெரியாமல், வாவ் சிக்னல் பதிவாக்கப்பட்டுள்ளது என்பதை ஏற்றுக்கொள்ள
முடியவில்லை என்றும் பாரிஸ் கருத்துக் கூறியுள்ளார்.
டெம்ப்ளேட் - அதிர்வெண் :
மேலும் அவர்,
தற்செயலாக வேற்றுகிரக வாசிகளை கண்டுப்பிடித்து விட முடியாது. ஆனால்,
அவர்கள் எந்த வகையான 'டெம்ப்ளேட்' (Template) பயன் படுத்துகிறார்கள்
மற்றும் அவர்கள் பயன்படுத்தும் அதிர்வெண் ஆகியவைகளை நெருக்கமான
அனுமானத்தில் கணித்தால் அவர்களை அடைய முடியும் என்றும் பாரிஸ் கருத்து
கூறியுள்ளார்.
நிரூபிக்கப்படும் :
பாரிஸ்
ஆய்வானது வாவ் சிக்னல் பற்றிய மர்மங்களை உடைக்கும் என்றும் மறுபக்கம் இந்த
சிக்னல் அறியப்படாத விண்மீன்கள் மூலம் உருவானது தான் என்று
நிரூபிக்கப்படும் என்றும் நம்பப்படுகிறது.
கருத்துரையிடுக Facebook Disqus