0
எது பெஸ்ட்..? எது வேஸ்ட்.? என்பதை தேர்ந்தெடுப்பதில் நம் எல்லோருக்குமே குழப்பம் வர தான் செய்யும். அது போன்ற தருணங்களில் நம் அனைவரின் மண்டைக்குள்ளும் உதிக்கும் ஒரு ஐடியா தான் - டாப் 5 அல்லது டாப் 10. அப்படியாக டாப் ஸ்மார்ட்போன்கள், டாப் ஆப்ஸ்கள், அவ்வளவு ஏன் டாப் ஆன்லைன் வைரல்களை கூட நாம் கண்டிருப்போம். ஆனால், உலகின் மிக ஆபத்தான ஹேக்கர்களை பற்றி டாப் 10-தனை பார்த்திருக்க வாய்ப்பில்லை..!
 
 ஊள்ளூர் பணக்காரனின் பேங்க் அக்கவுண்ட் தொடங்கி உலக நாடுகளின் அதிபயங்கர ரகசியங்கள் என எலாவற்றையும் பாரபட்சம் பார்க்காமல் புகுந்து விளையாடும் உலகின் மிக ஆபத்தான டாப் 10 ஹேக்கர்களை பற்றிய தொகுப்பே இது, ஆனால், இவனுங்க முகத்த பார்த்தா அதுக்குலாம் சரிபட்டு வர மாட்டானுங்க என்பது போல தெரியும். ஆனால், கில்லாடிகள்..!
 
tEkfK0a.jpg
 
#10 கேரி மெக்கின்னான் (Gary McKinnon) :
 
 நாசாவின் ரகசியங்களையே ஹாக் செய்து கிளப்பி விட்ட கணினி அமைப்பு நிர்வாகி..!
 
 
 
nq6BGRq.jpg
 
#09 மைக்கேல் பேவன் மற்றும் ரிசார்ட் ப்யைஸ் (Michael Bevan and Richard Pryce) :
 
 சட்டவிரோதமாக, அமெரிக்க விமானப்படை , நாசாவின் நேட்டோ சேர்ந்த அணுகல் கணினிகளை ஹாக் செய்து உலகை அதிரவிட்ட இரட்டையர்கள்.!
 
YKaLFIl.jpg
 
#08 கெவின் மிட்னிக் (Kevin Mitnick) : 
 
பல வகையான கணினி அமைப்புகள் மற்றும் சர்வர்களை பல ஆண்டுகளாக ஹாக் செய்து மிரட்டி கொண்டிருக்கும் எவர்கிரீன் கில்லாடி இவர்..!
 
7ZWNhnt.jpg
 
#07 விளாதிமிர் லெவின் (Vladimir Levin) : 
 
1994-ல் சிட்டி வங்கி பிணைய அணுகலை ஹாக் செய்து வங்கி கணக்குகளில் இருந்து 10 மில்லியன் டாலர்கள் வரை திருடி மாபெரும் ஹாக் கொள்ளை சம்பவத்தை நிகழ்த்தியவர்.
 
1NzCruQ.jpg
 
#06 மைக்கேல் கல்சே (Michael Calce) :
 
 இவருக்கு மாபீயா பாய் என்றொரு செல்லப்பெயரும் உண்டு. பள்ளி காலங்களில் இருந்தே மிரட்டலான பல ஹாக் சம்பவங்களை நிகழ்த்தியுள்ளார்.
 
0jvw8wa.jpg
 
#05 ஜீன்சன் ஜேம்ஸ் (Jeanson James Ancheta) :
 
 சுமார் 50 ஆயிரம் இயந்திரங்கள் மற்றும் கருவிகளை வைத்து ஒரு ஹாக் சாம்பிராஜ்யதையே நடத்திய இவரை அமெரிக்காவின் எப்பிஐ-யை தான் கைதி செய்யப்பட்டார்.
 
cTaAZKp.jpg
 
#04 அட்ரைன் லாமோ (Adrian Lamo) : 
 
இவர் ஒரு மொபைல் ஹாக்கர் ஆவர், அதாவது ஒரு நடமாடும் ஹேக்கர் ஆவார். சின்ன சின்ன இணைய கஃபேக்கள், நூலகங்கள், இன்டர்நெட் கடைகளில் அமர்ந்து கொண்டு பெரிய பெரிய ஹாக் சம்பவங்களை நிகழ்த்துபவர்.
 
4FMF671.jpg
 
#03 ஓவன் வால்க்ர் (Owen Walker) : 
 
பல ஆண்டுகளாக பல்வேறு வலைத்தளங்கள் மற்றும் கணினி அமைப்புகளை ஹாக் செய்து தள்ளிக் கொண்டிருக்கும் இவரைஏகில் (AKILL) என்று பிரபலமாக அழைக்கின்றனர்.
 
tQ2hkZ1.jpg
 
#02 ஆல்பர்ட் கோன்சலெஸ் (Albert Gonzalez) : 
 
2005 - 2007 வரையிலாக நடந்த பல வகையான கிரெடிட் கார்ட் மற்றும் ஏடிஎம் எண்கள் திருட்டுக்கு இவர் தான் பொறுப்பு..!
 
oDXPhJu.jpg
 
#01 அஸ்த்ரா (Astra) : 
 
இவரின் நிஜ பெயர் என்ன..? இவர் பார்க்க எப்படி இருப்பார் என்ற எந்தவிதமான விவரமும் கிடையாது. ஆனால் உலகின் ஆபத்தான நம்பர் ஒன் ஹாக்கர் ஆன இவர் ஒரு 58 வயதுமிக்கவர் என்ற தகவல் மட்டும் உள்ளது..!

கருத்துரையிடுக Disqus

 
Top