0
கிட்டத்தட்ட உலகின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள பகுதிகளில் இருந்தும், யாரோ ஒருவரின் மூலம் கண்டுபிடிக்கப்படும் பொருட்கள் ஆனது விளக்கம் இல்லாத புதிர்களை உள்ளடக்கிய ஒரு பொருளாகவே நீடிப்பது ஒன்றும் புதிதல்ல. ஏகப்பட்ட எடுத்துக்காட்டுகள் உள்ளன..!அம்மாதிரியாக, புதையுண்டு மீட்கப்பெற்ற பொருள்களில் சில, புதிர்களை மட்டுமில்லாது மாபெரும் குழப்பங்களையும் சர்ச்சைகளையும் கிளப்ப கூடியதாய் இருக்கும்.

அப்படியான ஒரு சர்ச்சைக்குறிய விடயம் தான் கண்டுபிடிக்கப்பட்டுள்ள சில விசித்திரமான மண்டை ஓடுகள்..! 

9zVhgxe.jpg

மனித தோற்றம்.?

கண்டுபிடிக்கபட்ட மர்மமான மண்டை ஓடுகள் ஆனது, மனித தோற்றம் கொண்டவைகளா..? இல்லையா.? என்று சந்தேகவாதிகளுக்கும், சதியாலோசனை கோட்பாட்டாளர்கள் மத்தியிலும் விவாதங்களை கிளப்பியுள்ளன. 

YVzCv8J.jpg

வேற்று கிரகவாச வருகை :

மண்டை ஓடுகள், மனித இனத்தோடு ஒற்றுப்போகவில்லை என்பதால், பூமி கிரகம் வேற்று கிரகவாசிகள் வருகைகளையும் சந்தித்துள்ளது என்பதற்கான பலமான ஆதாரமாக இது கருதப்படுகிறது. 

7IkgZPU.jpg

தி பாராகஸ் ஸ்கல்ஸ் :

பெருவியன், பராகஸ் பாலைவனத்தின் கடுமையான தரையின்கீழ் ஒரு சிக்கலான மற்றும் அதிநவீனமான இடுகாட்டில் இருந்து 1928-ஆம் ஆண்டு இந்த மண்டை ஓடுகள் வெளிப்படுத்தப்பட்டன.

mP8ZJoq.jpg

மூதாதையர் :

இந்த மண்டை ஓடுகளை கண்டுப்பிடித்த ஆய்வாளர் டெல்லோ, இவைகள் நமது மூதாதையர் கால மனித இனம் எப்படி இருந்தது என்பதை நிரூபிக்கும் எஞ்சியுள்ள ஒரு தொகுப்பு என்று கூறியுள்ளார். 

YIg4Nti.jpg

3000 ஆண்டுகள் :

கண்டுப்பிடிக்கபட்ட 300க்கும் மேற்பட்ட மண்டைஓடுகள் குறைந்தது 3000 ஆண்டுகள் பழமை வாய்ந்ததாக இருக்கும் என்றும் பெருவியன் ஆராய்ச்சியாளர்கள் கணித்துள்ளனர்.

4xydLid.jpg

டிஎன்ஏ பரிசோதனை :

டிஎன்ஏ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட மண்டை ஓடுகள் மனித பரிணாம வளர்ச்சிக்கு மிகவும் புதிரான மற்றும் நம்பமுடியாத முடிவுகளை வழங்கியுள்ளதாகவும் தெரிகிறது. 

fd3RD5k.jpg

நியாண்டர்தல்ஸ் :

பாராகஸ் மண்டை ஓடுகள் சாதாரண மனித மண்டை ஓடுகளை விட 25% பெரியதாகவும், 60% கனமானதாகவும் இருகின்றன. ஹோமோசாபியன்ஸ், நியாண்டர்தல்ஸ் போன்ற ஆதிகால மனிதர்களை விட மிகவும் விசித்திரமான, மனித-இனம் போன்று உள்ள ஒரு இனத்தின் மண்டை ஓடுகள் என்பது மட்டும் உறுதி..! 

R8XI6Um.jpg

தி ரோடாப் ஸ்கல் :

கண்டுபிடிக்கப்பட்ட இந்த (ரோடாப் மண்டை ஓடு) புதைபடிவமும் மனித மண்டை ஓடுக்கு ஒப்புமை இல்லாத நேர்மறையான ஒரு மண்டை ஓடு ஆகும். 

qSGNDEk.jpg

குளறுபடியான உருவம் :

வெறும் 250 கிராம் எடை மட்டுமே கொண்டுள்ள இந்த குளறுபடியான உருவம் கொண்ட ரோடாப் மண்டை ஓட்டில் ஆறு புதிரான துவாரங்கள் உள்ளதாக ஏலியன் நம்பிக்கை யாளர்கள் தெரிவிக்கிறார்கள்.

fOOK773.jpg

ஆறு கண்கள் :

மண்டை ஓட்டின் உருவாக்கத்தின்படி, இந்த உயிரினத்திற்கு ஆறு கண்கள் வரை இருந்திருக்கலாம் அல்லது 'அறியப்படாத உறுப்புகள்' இருந்திருக்கலாம் என்று நம்பப்படுகிறது 

HxrTI2I.jpg

வாய் பகுதி :

மிகவும் மர்மமான அம்சங்கள் கொண்ட இந்த ரோடாப் மண்டை ஓட்டில் வாய் பகுதியே இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. 

kNBkXXK.jpg

தி ஸீலேண்ட் ஸ்கல் :

சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்ட இந்த ஸீலேண்ட் மண்டை ஓடானது 2010-ஆம் ஆண்டு முதன்முதலாக ஆய்வுக்கு உட்படுத்தப்பட்ட போதும், இது எந்த இனம் என்பது பற்றிய விளக்கம் வழங்க முடியாது என்ற பதில் தான் கிடைத்தது. 

XsRB6AS.jpg

1200 மற்றும் 1280 கி.மு :

பார்க்க பாலூட்டி இனம் போல காட்சியளிக்கும் இது 1200 மற்றும் 1280 கி.மு-க்கு இடையே வாழ்ந்திருக்கலாம் என்று கார்பன் கால அளவை முறைப்படி கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது.

Jxuo8UY.jpg

புல்லட் துளை:

மாஸ்கோவில் உள்ள உயிரிகளின் தொல்லுயிரியல் அருங்காட்சியகத்தில் இருக்கும் இந்த பைசன் மண்டை ஓட்டில் மிக வேகமான ஒரு துப்பாக்கி தாக்கம் மூலம் ஏற்பட்ட துளை காணப்படுகிறது. 

KIGyq9O.jpg

புல்லட் காலிபர் :

வரலாற்றுக்கு முந்தைய காலத்தை சேர்ந்த இந்த மண்டை ஓட்டில் உள்ள துளையானது, தற்போது நாம் பயன்படுத்தும் புல்லட் காலிபர் வடிவத்தை ஒற்று உள்ளது என்பது கூடுதல் அதிர்ச்சி. 

g8Ogqr4.jpg

30,000 ஆண்டுகளுக்கு முன்பு :

அதை விட அதிர்ச்சி என்னவென்றால், இந்த விலங்கானது கிழக்கு சைபீரியாவில் யகுசியா பகுதியில் சுமார் 30,000 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்துள்ளது என்பது தான்..! 

YHRnfH1.jpg

ரஷ்யன் ஏலியன் ஸ்கல்ஸ் :

ரஷ்ய செய்தித்தாள்களின்படி, மர்மமான இந்த மண்டை ஓடுகள் சில ஆண்டுகளுக்கு முன் மவுண்ட் போல்சோய் சாக் என்ற குகையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 

NZpzysB.jpg

தாடை பகுதி :

மனித உருவத்திற்கு சற்றும் ஒற்றுப் போகாத இந்த இனத்திற்கு இரண்டு கால்கள் இருக்கலாம் என்று கணிக்கப்பட்டுள்ளது, மற்றும் மண்டை ஓடுகளில் மூளைக்கான பகுதி மற்றும் தாடை பகுதிகள் இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

கருத்துரையிடுக Disqus

 
Top