0
உங்களுக்கு நல்லா கண்ணு தெரியுமா.?? ஒரு நாளைக்கு சுமார் 150 முறை ஸ்மார்ட்போன் திரையை பார்ப்பவர்களில் நீங்களும் ஒருவர் என்றால், நிச்சயமாக உங்கள் கண்கள் 'விலை கொடுத்தே' ஆக வேண்டும். ஸ்மார்ட்போனில் ஆரம்பித்து, லாப்-டாப், டேப்ளெட், இ-ரீடர் என எதுவாக இருப்பினும் சரி, எல்லை மீறினால் - கண்ணில் சோர்வு, அரிப்பு , உலர்ந்த தன்மை, மங்கலான பார்வை மற்றும் தலைவலி என - பிரச்சனைகள் உறுதி..! 

சில எளிய மற்றும் ஆரோக்கியமான டிஜிட்டல் கருவி பயன்பாட்டு பழக்கங்களை கடைப்பிடித்தால் உங்கள் கண்களையும் அதன் பார்வை திறனையும் நீண்ட காலம் சக்தி வாய்ந்ததாக நீட்டிக்கலாம், அதற்கான 7 டிப்ஸ்கள் 

Dh6lRTN.jpg

டிப்ஸ் #01 : 

அடிக்கடி இமைத்துக் கொண்டே இருங்கள்..! 

ஈரப்பதம் : 

அடிக்கடி உங்கள் கண்களை இமைப்பதால் ஒளிரும் உங்கள் கண்கள் ஈரப்பதமாகவே இருக்கும், அதனால், கண்களில் வறட்சி மற்றும் எரிச்சல் குறைக்கிறது. 

QuI07L6.jpg

டிப்ஸ் #02 : 

கண் கூசும் ஒளிவீச்சை தவிர்த்திடுங்கள்..! 

பிரதிபலிப்பு : 

ஸ்மார்ட்போனில் இருந்து கிளம்பும் எரிச்சலூட்டும் பிரதிபலிப்பு ஒளியானது கண்ணை கூசும், அதன் அளவை குறைக்க உங்கள் ஸ்மார்ட் போனில் கார்னிங் கொரில்லா கிளாஸ் அல்லது ஸ்க்ரீன் ப்ரோடக்டர் போன்றவைகளை பயன்படுத்தலாம்..! 

T6ERiP0.jpg

டிப்ஸ் #03 :

இடைவெளி எடுத்துக் கொள்ளுங்கள்..! 

veyZusC.jpg

20 நொடிகள் : 

அதாவது ஒவ்வொரு 20 நிமிடங்களுக்கும், 20 அடி தொலைவில் இருக்கும் பொருளை 20 நொடிகள் உற்று பாருங்கள் உங்கள் கண்களுக்கு அது தான் இடைவெளி, இதைதான் 20-20-20 ரூல் என்பார்கள். 

wSRp88t.jpg


டிப்ஸ் #04 : 

ப்ரைட்னஸ் சார்ந்த விடயத்தில் கவனம் செலுத்துங்கள்..!

திரை : 

உங்கள் ஸ்மார்ட்போன் திரையனாது மிக பிரகாசமாக இருந்தாலும் சரி, மிக இருட்டாக இருந்தாலும் சரி, அது உங்கள் கண்களுக்கு பிரச்சினைகளை ஏற்படுத்தும். ஆக, உங்கள் கண் பார்வைக்கு ஏற்றது போல 'ப்ரைட்னஸ் செட்' செய்து கொள்ளவது நல்லது..!

qMwe9KO.jpg

டிப்ஸ் #05 : 

டெக்ஸ்ட் சைஸ் மற்றும் காண்ட்ராஸ்ட்டில் மாற்றம் செய்யுங்கள்..! 

சிரமம் : 

பெரிய டெக்ஸ்ட் சைஸ் மற்றும் அதிகமான கான்ட்ராஸ்ட் உங்கள் கண்கள் சிரமப்படுவதை அதிக அளவில் குறைக்கும்..! 

4CM6Oez.jpg

டிப்ஸ் #06 :

ஸ்க்ரீன் எப்போதும் சுத்தமாக வைத்துக் கொள்ளுங்கள்..! 

அழுக்குத் தடம் : 

கவனச்சிதறலை ஏற்படுத்தும் தூசு, அழுக்கு, அழுக்குத் தடம் அல்லது கைரேகை என எதுவாக இருந்தாலும் சரி, அவைகளை அடிக்கடி துடைத்துவிட்டு உங்கள் ஸ்க்ரீனை சுத்தமாக வைத்திருப்பது உங்கள் கண் பார்வைக்கு நல்லது. 

7mkjIPS.jpg

டிப்ஸ் #07 : 

உங்களுக்கும் உங்கள் ஸ்மார்ட்போனுக்கும் இடையே தூரம் வேண்டும்..! 

தேவை : 

பெரும்பாலான மக்கள் தங்கள் முகத்தில் இருந்து மட்டும் சுமார் 8 அங்குல தூரத்தில் தான் தங்களது ஸ்மார்ட்போன்களை வைத்து பயன்படுத்துகிறார்களாம். இது மிகவும் மோசமான செயல்பாடாகும், குறைந்தது 16 - 18 அங்குலமாவது தேவை..!

கருத்துரையிடுக Disqus

 
Top