0
உலகில் ஏலியன் எனப்படும் வேற்றுகிரக வாசிகள் இருப்பது குறித்து ஒவ்வொருவருக்கும் வெவ்வேறு கருத்துக்கள் இருக்கலாம். ஆனால் இவை சார்ந்த ஆய்வு பணிகளில் எந்நேரமும் ஈடுப்பட்டு வரும் ஆய்வாளர்கள் ஏலியன்கள் உலகில் நிச்சயம் இருக்கின்றது என்றும் இது குறித்த தகவல்களை அவ்வப்போது வெளியிட்டு வருகின்றனர்.


 7hWjC3V.jpg

தகவல்

தற்சமயம் ஏலியன்கள் இருப்பதை தாண்டி, அவை டைம் டிராவல் எனப்படும் கால பயணம் மேற்கொள்கின்றன என்ற தகவல் இணையத்தில் வேகமாக பரவி வருகின்றது.

 bCw2Fg2.jpg

பச்சை விளக்கு

அதன் படி சர்வதேச விண்வெளி மையத்தில் இருந்து பச்சை நிற வெளிச்சமானது மிகவும் பிரகாசமாக இருந்தது சர்வதேச விண்வெளி மையத்தின் நேரலையில் நாசா பதிவு செய்துள்ளது.

 KRRAv0r.jpg

தொலைவு

இந்த வெளிச்சமானது பல மைல் தூரத்தில் இருந்து தென்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 77RrAtW.jpg

சதியாலோசனை கோட்பாடு

 விண்வெளியில் புதிய சந்தேகத்தை கிளப்பியுள்ள இந்த நிகழ்விற்கு சதியாலோசனை கோட்பாட்டாளர் ஒருவர் விளக்கம் அளித்துள்ளார்.

 Rkplvnb.jpg

கால பயணம்

 அதில் அவர், 'இந்த வெளிச்சம் யுஎஃப்ஒ ஒன்று கடல் அல்லது வார்ம் ஹோல் கருவியில் இருந்து வெளியாகி இருக்கலாம்' என தெரிவித்துள்ளார்.

 iRs5U70.jpg

மர்ம பொருள்

 இந்த மர்ம பொருள் மற்றும் பிரகாசமான வெளிச்சமானது பிரபல யுஎஃப்ஒ ஆர்வலர் ஸ்காட் வாரிங் என்பவர் கண்டறிந்தார் என கூறப்படுகின்றது.

 zKIgujf.jpg

கருத்து

 'சில நொடிகளே பார்க்க முடிந்த இந்த வெளிச்சமானது கடலில் இருந்து வந்திருக்க வேண்டும்' என வாரிங் தெரிவித்துள்ளார்.

 0dB42Ee.jpg

வார்ம் ஹோல்

இது பெரும்பாலும் வார்ம் ஹோல்' ஆக இருந்திருக்க வேண்டும். வார்ம் ஹோல் என்பது நீண்ட தூரம் பயணிக்க உதவும் நீண்ட சுரங்கம் போன்றதாகும்.

 BMHVuwu.jpg

கால பயணம்

வார்ம் ஹோல் சில நொடிகளில் மறைந்து விட்டதால் இவைகளை பயன்படுத்தி ஏலியன்கள் கால பயணம் மேற்கொண்டிருக்கலாம் என வாரிங் தெரிவித்துள்ளார்.

 l0fHjFA.jpg

நாசா

இது குறித்து நாசா கூறும் போது இவை அடிக்கடி நடக்கும் சம்பவம் தான். இவை பெரும்பாலும் விண்வெளி மையத்தின் கண்ணாடிகளின் பிம்பங்கள் அல்லது ஏதேனும் விண்கலத்தில் இருந்து வெளியான வெளிச்சமாக இருக்கலாம் என தெரிவித்துள்ளது.

கருத்துரையிடுக Disqus

 
Top