படிப்பு முடிஞ்சுது… இனி, வேலை தேடி அலைய வேண்டியதுதான்’ என்று
கிளம்பிவிட்டீர்களா… ஒரு நிமிஷம்! நமக்கு வேலை தருவதற்காக ஒவ்வொரு
நிறுவனமும் நம்மிடம் இருந்து எதையெல்லாம் எதிர்பார்க்கும் என்பதை முதலில்
தெரிந்து வைத்துக்கொண்டால், சுலபமாக வேலையைக் கைப்பற்றலாம்.
நீங்கள் எந்த மொழியில் புலமை பெற்று இருக்கிறீர்கள் என்பதைத் தாண்டி, உங்கள் கருத்தை எந்த அளவில் தெளிவாக பிறரிடம் பகிர்கிறீர்கள் என்பது முக்கியம். அதேசமயம், எந்தத் துறையை தேர்வு செய்கிறீர்கள் என்பதைப் பொறுத்து மொழியும் முக்கியம்.
உங்கள் தாய்மொழி தவிர்த்து ஆங்கிலம், இந்தி போன்று ஏதேனும் ஒரு மொழியைக் கூடுதலாக தெரிந்து வைத்துக்கொண்டால், கால்சென்டர் போன்ற பணிகளுக்குச் செல்வதற்கு உதவியாக இருக்கும்.
எந்தத் துறையில் வேலை தேடுகிறீர்களோ அந்தத் துறையில் உள்ள செய்முறை சார்ந்த நுணுக்கங்களைத் தெரிந்து வைத்துக்கொள்வது நல்லது. மேலும் உங்கள் துறையுடன் தொடர்புடைய கோர்ஸ்களையும் படிக்கலாம்.
ஒவ்வொரு துறையிலும் இன்று அதிவேகமான மாற்றங்கள் நிகழ்ந்துகொண்டேதான் இருக்கின்றன. அந்த மாறுதல்களுக்கு அப்டேட் செய்துகொள்ளும் நபராக இருக்க வேண்டும் என்று நிறுவனங்கள் நிச்சயம் எதிர்பார்க்கும்.
இன்றைய காலகட்டத்தில் வேலை தரும் நிறுவனங்கள், கேண்டிடேட்களின் சமூகவலைதளங்களைப் பரிசோதிக்கின்றன. எனவே, சமூக வலைதளங்களில் சமூக கருத்துக்கு எதிர்மறையான எந்தக் கருத்தையும் பதிவு செய்யாதீர்கள்.
கல்லூரியில் படிக்கும்போது உங்களின் ப்ராஜெக்ட்டில் முழுக்கவனம் செலுத்துங்கள். நிறுவனங்கள் அதில் இருந்தும் கேள்விகள் கேட்க வாய்ப்பு உள்ளது.
எனவே, உங்கள் ப்ராஜெக்ட்டை வெளியாட்களிடம் கொடுத்துச் செய்ய சொல்வது, மற்றவர்களின் ப்ராஜெக்ட்டை காப்பி அடிப்பது போன்றவற்றைத் தவிர்த்துவிடுங்கள்.
ரெக்கமெண்டேஷன் என்ற ஆப்ஷனை முற்றிலும் தவிர்த்துவிடுங்கள். மற்றவர்கள் ரெக்கமெண்டேஷன் செய்யும்பட்சத்தில், உங்களுக்குத் திறமை இல்லை என்று நிறுவனத்தால் எடுத்துக்கொள்ளப்படும்.
யாரையும் நம்பாமல் உங்கள் திறமையை மட்டும் நம்பி செயல்படுங்கள்.
எல்லாவற்றுக்கும் மேலாக தன்னம்பிக்கையுடன் செயல்பட்டால்… நீங்களும் சிறப்பான நிறுவனத்தில், பிரகாசமான வேலையில் சேர்ந்து ஜொலிக்கலாம்.

கருத்துரையிடுக Facebook Disqus