தகவல்களை ஞாபகம் வைத்து கொள்வதில் துவங்கி நம் வாழ்க்கை எவ்வாறெல்லாம் மாறியிருக்கின்றது என்பதை விளக்கும் படங்களை ஸ்லைடர்களில் பாருங்கள்..
ஸ்மார்ட்போன்
நாள் ஒன்றைக்கு நம்மில் பலரும் சுமார் 150 முறையாவது ஸ்மார்ட்போன் மற்றும் ஸ்மார்ட் கருவிகளை பார்ப்பதாக சமீபத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.
குளிக்கும் போது கூட தொழில்நுட்பம் மற்றும் கேஜெட்களை நாம் விளக்கி வைப்பதில்லை. இலை எவ்வேரமும் நம்முடன் தான் இருக்கின்றது.
இன்று பெரும்பாலானோரும் ஆப்பிள் மோகம் கொண்டுள்ளனர், கையில் காசு இல்லாவிட்டாலும் கடன் வாங்கியாவது ஆப்பிள் கருவிகளை வாங்கி விடுகின்றோம்.
இன்று சாப்பிடுவதை விட அதனினை புகைப்படம் எடுத்து சமூகவலைதளம் மூலம் பலருக்கும் தெரியப்படுத்திய பின் தான் அதனை உண்ண ஆரம்பிக்கின்றோம்.
முன்பு புகைப்படங்கள் நல்ல நினைவுகளை மறக்காமல் பதிவு செய்திட எடுத்து கொண்டோம், இன்று எங்கும் செல்பீ என்ற நிலை தான் இருக்கின்றது.
முன்பு போல் இன்று நாம் எதையும் முறையாக ரசிப்பது கிடையாது, இதில் நேரலை நிகழ்வுகளும் அடங்கும். எங்கு சென்றாலும் நிகழ்ச்சியை பார்க்காமல் அதனினை போனில் பதிவு செய்வதில் தான் அதிக ஆர்வம் காட்டுகின்றோம்.
புகைப்படம் பார்த்தவுடன் உங்களுக்கே புரிந்திருக்கும்.
இன்று நாம் பயன்படுத்தும் பல்வேறு செயலிகளிலும் பார்கோடு மற்றும் ஸ்கேனர்கள் தான் பயன்படுத்துகின்றோம்.
குடும்பத்தோடு அமர்ந்து உணவு சாப்பிடும் போது யாரும் உணவையோ, உறவினரையும் பார்ப்பதில்லை. அங்கும் எல்லோருக்கும் ஸ்மார்ட் திரை தான் தேவைப்படுகின்றது.
மற்றவர்களுடன் நேரில் பார்த்து உரையாடுவதை தவிர்த்து எல்லாமே சமூகவலைதளம் என்றாகிவிட்டது. எந்நேரமும் சாட்டிங் மட்டுமே போதும் என்ற நினைப்பில் மக்கள் மூழ்கி கிடக்கின்றனர்.
முன்னதாக செய்திதாள்களை காலை உணவு உட்கொள்ளும் போதோ அல்லது அதற்கு முன்போ வாசித்தனர், ஆனால் ஒரு விஷயம் நடந்த சில நிமிடங்களில் அது அனைவருக்கும் தெரிந்து விடுகின்றது.
12
இண்டர்நெட் அல்லது ஸ்மார்ட் கருவிகளுக்கு அனுமதி இல்லா இடங்களில் மட்டுமே மக்கள் மகிழ்ச்சியாக இறுக்கின்றனர்.
இரவு உறங்கும் போதும் நம் கட்டிலின் தலையணை கீழ் ஸ்மார்ட்போன் இடம் பிடித்து விட்டது. நிம்மதியாய் உறங்கும் போதும் தலையின் கீழ் ஸ்மார்ட்போன் இருப்பதோடு இரவில் எந்நேரத்தில் சத்தம் கேட்டாலும் உடனே அதனினை பார்த்த பின் தான் மீண்டும் உறங்குகின்றோம்.
எந்நேரமும் ஸ்மார்ட்போன், லேப்டாப், சமூகவலைதளம் போன்றவைகளில் மூழ்கி இருப்பதால் சரியான நேரத்திற்கு யாரும் உறங்குவதுமில்லை.
எப்போதும் குறுந்தகவல் மற்றும் சாட்டிங் செய்ய குவர்டி கீபேட்கள் நம்மை அடிமைப்படுத்தி வைத்திருக்கின்றன.
கருத்துரையிடுக Facebook Disqus