0
மார்க்கெட்டிங் வேலை செய்பவர் ஒருவர் ஆறேழு மாசமா ஒரு டாக்டரிடம் வந்து போயிட்டு இருந்தாரு...!

டாக்டர் பொண்ணு அவர் சின்சியாரிட்டியை
பார்த்து லவ் பண்ண ஆரம்பிச்சுட்டா... 
இந்த விசயம் டாக்டருக்கு தெரிஞ்சு போச்சு.,

டாக்டர் "என் பொண்ண ஒரு பிச்சைகாரனுக்கு 
கல்யாணம் பண்ணி தந்தாலும் தருவேன்... ஆனால்,
ஒரு மார்கெட்டிங் வேலை செய்பவனுக்கு கல்யாணம் பண்ணி தரமாட்டேனு" 
சொல்லிட்டாரு... 
😰
டாக்டர் பொண்ணுக்கு தோஷம் இருக்கு அவளை 
யார் கல்யாணம் பண்ணினாலும் ஒரே மாசத்துல 
செத்துடுவாங்க...😛 
😔
டாக்டர் அவர் பொண்ணை ஒரு டாக்டருக்கு 
கல்யாணம் பண்ணி வைக்கிறாரு...!

அந்த டாக்டர் ஒரே மாசத்துல செத்துடுறான்...!!
செத்தான்டா சேகரு...!!

அப்புறம் இன்ஜினியருக்கு மேரேஜ் பண்ணி வைக்கிறார்...!
அந்த இன்ஜினியரும் செத்து போயிடுறான்...!!

அடுத்ததா, ஒரு
ஆசிரியருக்கு மேரேஜ் பண்ணி வைக்கிறார்.
அந்த ஆசிரியரும் செத்து போயிடுறான்...!! 
😱
என்னடா இது நம்ம பொண்ணு வாழ்க்கை இப்பிடி 
ஆகிடுச்சேன்னு ரொம்ப ஃபீல் பண்ணி., சரி அந்த மார்க்கெட்டிங் வேலை செய்பவனுக்கே மேரேஜ் பண்ணி வச்சுடலாம்னு முடிவு பண்ணி...

அவர் கால்ல விழுந்து, கெஞ்சி, கூத்தாடி
மேரேஜ் பண்ணி வச்சுட்டாரு...!😀

எல்லோரும் மாா்க்கெட்டிங் வேலை பாா்ப்பவன் ஒரு மாசத்துல செத்துடுவான்னு எதிர்பார்த்துட்டு இருந்தாங்க...!!

ஒரு மாதம் ஆச்சு, மூன்று மாதம் ஆச்சு, 
ஒரு வருஷம் ஆச்சு ஆனால் அவன் சாகவில்லை...!!!???

எல்லோருக்கும் பொிய ஆச்சரியம்...!

செத்து போன அந்த டாக்டர், இன்ஜினியர், ஆசிரியரும்
சேர்ந்து எமன்கிட்ட முறையிடுறாங்க...😰 
😰😰.
அந்த பொண்ணு ஜாதகப்படி அவளை கட்டிகிட்டவன் ஒரே மாசத்துல செத்துருவான்னு தானே இருக்கு...!?

அதனாலதான் நாங்க எல்லோரும் இங்க இருக்கோம்...!?

ஆனால் அவனுக்கு ஒன்னும் ஆகவில்லையே எப்படி...!!!???
எமதா்மா, இது நியாயமா...

அதற்கு எமன் சொல்றாரு, 
அந்த டாக்டர பிடிக்க அவரோட ஹாஸ்பிடல்ல 
வெயிட் பண்ணிட்டு இருப்பேன், 
டாக்டர் வந்த உடனே பிடிச்சுட்டு வந்துடுவேன்.

இன்ஜினியரை பிடிக்க அவரோட ஆபிஸ்ல வெயிட் 
பண்ணிட்டு இருப்பேன்.. 

இன்ஜினியர் வந்த உடனே அவரை பிடிச்சுட்டு 
வந்துடுவேன்..

அதே மாதிரி ஸ்கூல்ல வெயிட் பண்ணி ஆசிரியரை 
பிடிச்சிடுவேன்,

ஆனா, இந்த மார்க்கெட்டிங் வேலை பாக்குற பயபுள்ள இருக்கே...!? அய்யோ...அய்யோ... ( எமனே அழறாரு😭😭)

அவனோட டூர் ப்ளான்ல, சிவகாசினூ போட்டிருந்தான்...
அதை நம்பி நான் சிவகாசில வெயிட் பண்ணிட்டு 
இருந்தேன். ஆனா அவன் தென்காசில வொர்க் பண்ணிட்டு 
இருந்தான்...

சரின்னு விட்டுட்டேன், அடுத்த நாள் காரைக்குடி போட்டிருந்தாப்ல
நான் காரைக்குடில வெயிட் பண்ணிட்டு இருந்தேன்,
ஆனா சாயல்குடில வொர்க் பண்ணிட்டு இருக்காப்ல... இப்படியே, பல மாதங்கள் கடந்து விட்டன...இன்னும் இந்த கதை முடிய மாட்டேங்குது...😭 
😭😭
டாக்டர், இன்ஜினியர், ஆசிரியர் போல ஈசியா 
பிடிச்சுடலாம்னு நினைச்சேன், ஆனால் இந்த 
எமனுக்கே எட்டு போ ட்டு அதோட நிக்காம, பதினொன்னு போட்டு காட்றான்யா...!? 
எமனே தேம்பி தேம்பி அழ ஆரம்பிச்சுட்டாரு...😭😭😭
எமனை மட்டுமில்லை., 

எவனையும் சமாளிப்பான் இந்த மார்கெட்டிங் வேலை பாா்ப்பவன்...!
அப்புறம், மார்க்கெட்டிங் வேலை பாா்க்கிறதுன்னா சும்மாவா...!

கருத்துரையிடுக Disqus

 
Top