0

கூகுள் நிறுவனத்தின் இணை நிறுவனர் லேர்ரி பேஜ் தனது புதிய திட்டத்திற்கான பணிகளை துவங்கி விட்டார். இதற்காக மிகவும் ரகசியமாக பணியாற்றி வந்த போதும் இத்திட்டம் குறித்த தகவல்கள் கசிந்துள்ளன. தனது புதிய திட்டத்திற்காக லேர்ரி பேஜ் இரு ஸ்டார்ட்-அப் நிறுவனங்களில் ரகசியமாக முதலீடு செய்து வருகின்றார் என கூறப்படுகின்றது.

பறக்கும் கார்
பறக்கும் கார் தயாரிக்கும் பணிகளில் ஈடுப்பட்டு வரும் Zee.Aero (சீ.ஏரோ) எனும் நிறுவனத்திற்காக லேர்ரி பேஜ் இதுவரை மட்டும் சுமார் $100 மில்லியன் இந்திய மதிப்பில் ரூ. 6,697,923,643.67 முதலீடு செய்திருப்பது தெரிய வந்துள்ளது.

காப்புரிமை
சிறிய ரக பறக்கும் விமானங்களுக்கான காப்புரிமையை ee.Aero (சீ.ஏரோ) நிறுவனம் பதிவு செய்திருப்பதும் குறிப்பிடத்தக்கது.

பறக்கும் வாகனம்
2010 ஆம் ஆண்டு துவங்கப்பட்ட இந்நிறுவனம் மின்சார வாகனத்திற்கான காப்புரிமையை பெற்றிருப்பது, இந்நிறுவனம் பறக்கும் வாகனம் ஒன்றை தயாரித்து வருவதை வெளிப்படுத்துகின்றது.

அம்சங்கள்
இந்த வாகனம், பாதுகாப்பு, அமைதி, எளிமையான கட்டுப்பாடு, மற்றும் சிறிய ரக விமானம் போல் இருக்கும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

முதலீடு
Zee.Aero (சீ.ஏரோ) நிறுவனம் இல்லாமல் லார்ரி பேஜ் மற்றும் ஒர் பறக்கும் கார் தயாரிப்பு நிறுவனத்திலும் முதலீடு செய்து வருகின்றார் என கூறப்படுகின்றது.

கிட்டி ஹாக்
கிட்டி ஹாக் என பெயரிடப்பட்டுள்ள இந்நிறுவனம் குவாட்காப்டர் போன்ற வாகனத்தை உருவாக்கும் பணிகளில் ஈடுப்பட்டு வருவதாக கூறப்படுகின்றது.

அனுமதி
அமெரிக்காவின் நெவேடா மாகாணத்தில் மனிதர்களை ஒரு இடத்தில் இருந்து வேறு இடத்திற்கு போக்குவரத்து செய்யும் தானியங்கி டிரோன்களை சோதனை செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

பயன்பாடு
இஹாங் 184 தனிநபர் குவாட்காப்டர்கள் நெவேடா பகுதியில் விரைவில் பயன்பாட்டிற்கு வரலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

நிறுவனங்கள்
இவை இல்லாமல் ஏரோமொபைல் மற்றும் டெர்ராஃபுகியா போன்ற நிறுவனங்களும் பறக்கும் கார் தயாரிக்கும் பணிகளில் ஈடுப்பட்டு வருகின்றது.

போக்குவரத்து
தற்சமயம் சோதனை செய்யப்பட்டு வரும் பறக்கும் கார் திட்டங்களில் பல்வேறு மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டு வரும் ஆண்டுகளில் மனிதர்களை எளிமையாக பறக்கும் செய்யும்.

கருத்துரையிடுக Disqus

 
Top