0
.
மூன்று நாட்களுக்கு முன்னாடியே உறவினர்கள் வருவார்கள்
.
கல்யாணத்திற்கு தண்ணீர் அதிகம் தேவைப்படும் என்பதால் உறவின பெண்கள் பக்கத்து வீட்டு பெண்கள் உட்பட எல்லோரும் தண்ணீர் எடுக்க குடத்தை தூக்கி கொண்டு தண்ணீர் எடுக்க கிணற்றங்கரைக்கு செல்வார்கள்
.
அது அங்கு நடந்து கொண்டு இருக்கும் போது
.
ஆண்கள் அனைவரும் ஒரு குட்டி யானையை வாடகை எடுத்து கொண்டு கல்யாணத்துக்கு தேவையான காய்கறிகள். பலசரக்கு சாமான்கள் வாங்க செல்வார்கள்
.
அது அப்படி இருக்க ஒரு டெம்போவை வாடகை எடுத்து இளைஞர்கள் அனைவரும் கொலை வாழை வெட்ட செல்வார்கள் . சாதாரணமாக அல்ல ஓஓஓஓஓஓ என்று ஊழை இட்டு கொண்டே செல்வார்கள்
.
வாழை கொலை நாட்ட பட்ட உடன் பாத்திரம் பெஞ்ச் சேர் எடுத்து வர இன்னும் ஒரு ரவுண்ட் போவார்கள்
.
பாத்திரம் எடுத்து வந்து இறக்கும் போது வீட்டின் திண்ணையில் கட்டப்பட்ட பந்தல் அலங்காரங்களுடன் தயாராக இருக்கும்
.
அந்த நேரம் காய்கறி வாங்க சென்றவர்களும் வந்து சேர்வார்கள்
.
எல்லோரும் வந்து சேரும் நேரம் சரியாக மாலை 5 மணியாக இருக்கும்
.
உழைத்து கழைத்த அனைவருக்கும் நம் குடும்பத்தாரால் தரமான சாம்பார் உடன் கூடிய சாப்பாடு வழங்கபடும்
.
சாப்பிட்டு முடித்த பின்னர் அடுத்த நாள் சாப்பாட்டிற்க்கு வாங்கிவந்த காய்கறிகளை தனியாக பிரிப்பார்கள்
.
சாம்பாருக்கு தனியாக
.
அவியலுக்கு தனியாக
.
ரசத்திற்க்கு தனியாக
.
சமையல் நிபுனர் மேற்பார்வையில் காய்கறி வெட்டும் விழா தொடங்கும்
.
பெண்கள் சேர்ந்து மசாலா அரைப்பது பூண்டு அரைப்பது மிளகு பொடிப்பது வெங்காயம் நறுக்குவது உரலில் இடிப்பது அம்மியில் அரைப்பது போன்ற வேலைகளையும்
.
ஆண்கள் இதர காய்கறிகளை நறுக்குவார்கள் அப்போது ஓசை வரும்
.
தேங்காய் திருபுவன் கிருக் கிருக் என்றும்
.
கத்திரிக்காய் அறுப்பவன் டொக் டொக் என்றும்
.
முட்டை கொஸ் வெட்டுபவன் டொக் டொக் என்றும் பணிகளில் தீவிரமாக இருப்பார்கள்
.
இது ஒரு புறம் நடக்க சின்னஞ்சிறுசுக எல்லாம் சேந்து ஒழிஞ்சி விளையாடும்
.
அத குடும்ப காரன் பாத்துட்டு சொல்லுவான் இப்பவே உன் பயல பாத்தியா முற பொண்ணு பின்னாடி சுத்துறா அப்டீனு
.
அது எல்லாம் நடந்து கொண்டு இருக்க கல்லியாண மாப்புள தீவிர யோசனைல இருப்பாரு நாளைக்கு என்ன எல்லாம் நடக்க போகுதோ அப்டீனு
.
ஒரு வளியா கொட்டு மேளம் முளங்க டும் டும் அடிக்க கல்யாணத்த பண்ணி முடிச்சதும்
.
பொண்ணு மாப்ள யோட அப்பா ஒரு மூச்சி விடுவாங்க பாருங்க
.
ஆனா அவங்களுக்கு ஒண்ணே ஒண்ணு மட்டும் தெரியாது
.
கொண்டு வந்த பாத்திரத்த கழுவ அடுத்த நாள் ஒரு பய இருக்கமாட்டானக..

கருத்துரையிடுக Disqus

 
Top