0
 
இதுவொரு புத்தம் புதிய தொழில்நுட்ப வயது, இந்த காலகட்டத்தில் நின்றுகொண்டு, கடந்த காலத்தையும் அதன் முன்னோடித்தனமான விடயங்களையும், எப்போதுமே ஒரு வகையான மங்கலான பார்வையில் தான் நாம் பார்க்கிறோம். அதை சற்று கூர்ந்து கவனித்தால் சில விடயங்களை நம் கற்பனைகள் ஏற்றுக்கொள்ளாது..!

அவ்வாறாக, நமக்கு முன்பு வாழ்ந்த மனித இனம், அதாவது நமது முன்னோர்கள் - சாத்தியமே இல்லாத விடயங்களை அசாதரணமாய் சாத்தியப்படுத்தியுள்ளனர், சாதித்துள்ளனர் என்பது தான் நிதர்சனம். அதற்கான எடுத்துக் காடுகள் தான் இவைகள்..!

மேம்பட்ட அறிவியல் #01
பூமராங் - காலத்தால் முற்பட்ட சுழல்காட்டி தன்மை..!

பழமை :
மனித இனத்தின் பழமையான பறக்கும் கண்டுபிடிப்புகளுக்குள் ஒன்று தான் - பூமராங். 10,000 ஆண்டுகளுக்கு முன்பு ஆஸ்திரேலிய பழங்குடியினர்கள் பயன்படுத்தியதாக கூறப்படும் இது சுமார் 23,000 ஆண்டுகள் பழமையானதாக இருக்கும் என்றும் மதிப்பிடப்பட்டுள்ளது..!

முயற்சி மற்றும் தோல்வி :
கணித சூத்திரங்கள் மணலில் வரையப்பட்டு பல வகையான முயற்சிகள் மற்றும் தோல்விகளுக்கு பின்பு பூமராங் கள் உருவாக்கம் பெற்றிருக்கலாம் என்று நம்பப்படுகிறது. அதாவது அடுத்த 1000 ஆண்டுகளுக்கு புரிந்து கொள்ள முடியாத தொழில்நுட்பங்கள் மூலம் உருவாக்கம் பெற்றது தான் பூமாராங்கள்..!

மேம்பட்ட அறிவியல் #02
பிராஸ் - பண்டைய கிருமிநாசினி

கலவைகள் :
செம்பு மற்றும் அதன் உலோக கலவைகள் சிலவற்றால் பல பயங்கரமாக கொலைகார கிருமிகள் மற்றும் பாக்டீரியாக்களை அழிக்கும் திறன் கொண்டிருந்ததை பழங்குடியினர்கள் கண்டுபிடித்து பயன்படுத்தியுள்ளனர்.

புதுத்தன்மை :
வட அமெரிக்ர்கள் தண்ணீர், பால் மற்றும் மது எப்போதும் புதுத்தன்மை கொண்டிருக்க அதில் செம்பு மற்றும் வெள்ளி நாணயங்களை ஈட்டு வைக்கும் பழக்கம் தான் இதற்கு பெரிய ஆதராமாக கருதப்படுகிறது.

மேம்பட்ட அறிவியல் #03
கான்க்ரீட் - ரோமர்களுக்கு தான் முதலில் சாத்தியமானது..!

இரசாயன எதிர்வினை :
வேதியல் உருவாகிடாத காலகட்டத்திலேயே ரோமானியர்கள் கான்கிரீட் என்று தற்போது அழைக்கப்படும் ஒரு இரசாயன எதிர்வினையை உருவாக்கியுள்ளனர்.

குவிமாடம் :
ரோமானியர்களின் சில மாபெரும் கான்கிரீட் குவிமாடம் ஆனது தற்கால தொழில்நுட்பத்திற்கு கூட இணையின்றி நிற்கிறது என்பது தான் நிதர்சனம்.!

மேம்பட்ட அறிவியல் #04
சீன நிலநடுக்கம் கண்டுபிடிப்பான் - சீஸ்மோகிராஃப்

கி.பி 132 :
உலகின் முதல் நிலநடுக்கம் கண்டறியும் கருவியானது கி.பி 132-ல் என்ற சாங் யெங்க் எனப்படும் சீன கண்டுபிடிப்பாளர் ஒருவரின் மூலம் உருவாக்கம் பெற்றுள்ளது.

டிராகன் :
ஒரு முக்கிய திசைகாட்டி புள்ளி கொண்டுள்ள அந்த பெரிய டிராகன் கொப்பரையானது, நிலநடுக்கத்தை அதன் உள்ளே போடப்படும் பந்தானது எந்த 8 டிராகன்களில் எந்த டிராகன் வாய் வழியாக வெளியே வருகிறது என்பதை வைத்து எங்கே நிலநடுக்கம் என்பதை கண்டறிய உதவும்படி வடிவமைக்கப் பெற்றுள்ளது.

மேம்பட்ட அறிவியல் #05
டா வின்சியின் எதிர்கால நகரம் - கிருமி கோட்பாடு

400 ஆண்டுகள் :
வரலாற்றின் மிகவும் நவீனமான மனிதர்களுள் டா வின்சியும் ஒருவர் என்பது நாம் அறிந்ததே, அதற்கு நிறைய எடுத்துக்காட்டுகள் உள்ளன அதில் ஒன்று தான் - டா வின்சியின் - அடுத்த 400 ஆண்டுகள் அல்லது அதற்கும் மேலான ஆண்டுகளுக்கு தகுந்த கொள்கைகளை அடிப்படையாகக் கொண்ட ஒரு நகரம்.

முன்னோடி :
துப்புரவு மற்றும் தூய்மை என பலவகையான அடிப்படைகளில் முன்னோடியாக திகழ்ந்ததால் அது 1800களில் கிருமி கோட்பாடு (The Germ theory) என்று உருமாறியது.

மேம்பட்ட அறிவியல் #06
டமஸ்கஸ் ஸ்டீல் - கார்பன் நானோகுழாய்கள்

கிமு 300 :
நானோகுழாய்கள், சூப்பர்பிளாஸ்டிக், மைக்ரோஅலாய் என்பதெல்லாம் அதிநவீன அறிவியல் ஆராய்ச்சி வார்த்தைகள் போல தெரிந்தாலும் உண்மையில் இவைகள் எல்லாம் கிமு 300-களிலேயே உருவாக்கம் பெற்று விட்டது.

சூப்பர் ஸ்டீல் :
மாவீரன் அலெக்சாண்டர் உட்பட பல அரசர்களின் தலையை வெட்ட பெர்சியர்கள் பயன்படுத்திய பண்டைய சூப்பர் ஸ்டீல் கத்திகள் தான் அதற்கு ஆதாரம் .

நானோவயர்ஸ் :
அம்மாதிரியான ஸ்டீலை பகுப்பாய்வு செய்ததின் மூலம் தற்கால மின்னணு மற்றும் நானோ தொழில்நுட் துறைகளில் பயன்படுத்தப்படும் நானோவயர்ஸ் மற்றும் கார்பன் நானோகுழாய்கள் அதில் சாத்தியப்பட்டுள்ளது கண்டறியப்பட்டுள்ளது.

மேம்பட்ட அறிவியல் #07
தி ரோபோடிக் போர்வீரன் -மனித உரு ரோபோக்கள்

உடற்கூறியல் :
மனித உடற்கூறியல் விரிவாக ஆய்வு செய்யப்பட்டு அதற்கு ஏற்ற வடிவமைப்பில்15-ஆம் நூற்றாண்டிலேயே ரோபோக்கள் உருவாக்கம் பெற்றது என்று கூறினால் நீங்கள் அதை நிச்சயம் நம்பித்தான் ஆக வேண்டும்.

திசைத்திருப்பி :
அந்த ரோபோக்கள் மனித தசைகள் மற்றும் தசை நாண்களை பின்பற்றும் கயிறுகள் மற்றும் திசைத்திருப்பிகளின் ஒரு தொடர் மூலம் இயக்கப்படும் கவசமாய் உருவாக்கம் ஆனது.

கருத்துரையிடுக Disqus

 
Top