0
போக்கிமான் கோ, சமூக வலைத்தளங்களில் சில தினங்களாக அதிகம் விவாதிக்கப்படும் மிகை யதார்த்த (ஆக்மென்டெட் ரியால்டி ) வீடியோ கேம் ஆகும். நியான்டிக் எனும் நிறுவனம் வடிவமைத்துத் தயாரித்த போக்கிமான் கோ கேம் ஆண்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ் இயங்குதளங்களில் விளையாட முடியும்.

இந்த வீடியோ கேம் ஆஸ்திரேலியா, அமெரிக்கா, ஐரோப்பாவின் சில பகுதிகளில் மட்டும் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது. அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படவில்லை என்றாலும் நம்மவர்களில் பெரும்பாலானோர் இதனை விளையாடத் துவங்கி விட்டனர். ஆண்ட்ராய்டு ஏபிகே, போலி ஆப்பிள் ஐடி போன்றவை இந்தக் கேமினை விளையாட அனுமதிக்கின்றன.


போக்கிமான் கோ கேமானது ஆசியா மற்றும் ஐரோப்பின் எஞ்சிய பகுதிகளில் இன்னும் சில தினங்களில் வெளியிடப்படலாம் எனச் சமீபத்தில் வெளியான தகவல்கள் தெரிவிக்கின்றன.
வெளியீடு
போக்கிமான் கோ கேம் விளையாட முதலில் கூகுள் அல்லது ஆப்பிள் ஐடி மூலம் லாக்-இன் செய்ய வேண்டும். லாக்-இன் செய்ததும் போக்கிமான் உருவங்களில் ஒன்றைத் தேர்வு செய்து விளையாடத் துவங்கலாம்.
லாக்-இன்
போக்கிமான் கோ கேம் விளையாட அனைவரும் வீதிக்கு வர வேண்டும். திரையில் காணப்படும் மேப் மூலம் வெவ்வேறு பகுதிகளில் நடந்து போக்கிமான்களைக் கண்டுபிடிக்க வேண்டும். போக்கிமான்களை நெருங்கும் போது பாப்-அப் தோன்றி கருவி வைப்ரேட் ஆகும்.
விளையாட்டு
போக்கிமான் ஒன்றைக் கண்டறிந்தவுடன் திரையில் கிளிக் செய்ய வேண்டும். பின் மிகை யதார்த்த (ஆக்மென்டெட் ரியால்டி ) வடிவில் போக்கிமான் உங்கள் முன் தெரியும்.
போக்கிமான்
தற்சமயம் வரை சுமார் 50,00,000 பேர் போக்கிமான் கேம் விளையாடி எதிர்கால மிகை யதார்த்த (ஆக்மென்டெட் ரியால்டி ) தொழில்நுட்பத்தினை அனுபவத்து வருகின்றனர்.
பயனர்கள்
வாடிக்கையாளர்களின் கூகுள் கணக்குகளை முழுமையாகப் பயன்படுத்த அனுமதித்தால் மட்டுமே போக்கிமான் கோ விளையாட முடியும் என்பதால் சர்ச்சை கிளம்பியது. எனினும் நியான்டிக் நிறுவனம் இந்தப் பிரச்சனையைச் சரி செய்து வருவதாகவும், தற்சமயம் வரை பயனர்களின் மின்னஞ்சல் முகவரி மற்றும் இருப்பிடம் சார்ந்த தகவல்கள் மட்டுமே பயன்படுத்தப்படுவதாக அறிவித்துள்ளது.
ஆபத்து
போக்கிமான் கோ விளையாட அன்லிமிடெட் டேட்டா அவசியம் தேவைப்படும். கேம் முழுக்க ஜிபிஎஸ் சார்ந்த தகவல்களைப் பரிமாற்றம் செய்ய வேண்டும் என்பதால் அதிகப்படியான டேட்டா பயன்படுத்தப்படும். மேலும் இந்தக் கேம் போனின் கேமரா பயன்படுத்துவதால் பேட்டரியும் சீக்கிரம் தீர்ந்து போகக்கூடும்.

கருத்துரையிடுக Disqus

 
Top