0


கணினி - 20ஆம் நூற்றாண்டில் தொடங்கி இன்றுவரையிலாக ஒரு நீண்ட வரலாற்றை கொண்ட வெற்றிமிக்க ஒரு கருவியாகும். இயந்திர கண்டுபிடிப்பு மற்றும் கணித கோட்பாடுகள் என தொடங்கி நவீன கணினி கருத்துக்கள் வரையிலாக முன்னேற்றத்தின் ஒரு பங்காக கணினி திகழ்கிறது..!

சரி அப்படியான அறிவியல் உள்ளடக்கம் பெற்ற கணினி இயற்கையை சந்தித்தால் எப்படி இருக்கும்..? அதாவது உங்கள் கம்ப்யூட்டர் ஆர்கானிக்காக உருவாக்கம் பெற்றால் அதாவது கனிம வளத்தினால் உருவாக்கம் பெற்றால் எப்படி இருக்கும்..? விரைவில் அது சாத்தியமாகப் போகிறது..!


லோமோனோசோவ் எமெஸ்யூ ஆராய்ச்சியாளர்கள், டிரெஸ்டெனில் உள்ள பாலிமர் ஆராய்ச்சி நிறுவனத்தின் சக ஜெர்மன் ஆராய்ச்சியாளர்களுடன் இணைந்து மூலக்கூறு ஒன்றை கண்டறிந்துள்ளனர்.
மூலக்கூறு :
ஆராய்ச்சியாளர்களின் கருதுப்படி கண்டறியப்பட்டுள்ள மூலக்கூறானது கரிம மின்னணு (organic electronics) வளர்ச்சிக்கு உத்வேகம் கொடுக்க முடியும் என்று நம்பப்படுகிறது.
கரிம மின்னணு :
கடந்த 30 ஆண்டுகளாக அறிமுகத்தில் உள்ள அறிவியல் மூலக்கூறு ஒன்றின் ([[3]ரேடியலீனின் வழித்தோன்றல்) மூலம் கரிம குறைக்கடத்திகள் (organic semiconductors) உருவாக்க முடியும் என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
குறைக்கடத்திகள் :
இதன் மூலம் கரிம மின்னணு வளர்ச்சிக்கு, குறிப்பாக கரிம ஒளி டையோடுகளின் புனைதல் (fabrication of organic light emitting diodes) மற்றும் புதிய வகைப்பட்ட கரிம சூரிய மின்கலங்கள் ( new classes of organic solar cells) ஆகியவைகளில் முக்கிய பங்களிப்பு கிடைக்கும்.
வளர்ச்சி :
இதனை தொடர்ந்து குறைந்த மூலக்கூறு எடை மாசுப்பொருள் கொண்ட புதிய வகை கரிம குறைக்கடத்திகளை உருவாக்க ஆராய்ச்சியாளர் முடிவு செய்துள்ளனர்.
முடிவு :
இந்த கரிம மின்னணு வளர்ச்சி சார்ந்த ஆய்வு முடிவுகள் மற்றும் தகவல்கள் வாராந்திர அறிவியல் இதழான அட்வான்ஸ்டு மெட்டிரியல்ஸில் (Advanced Materials) வெளியிடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
அட்வான்ஸ்டு மெட்டிரியல் :

கருத்துரையிடுக Disqus

 
Top