0

முதன்முதலில் விமானம் செய்யலாம் அதனை கொண்டு பறக்கலாம் என்று சொன்னவரை பார்த்து நிச்சயம் இந்த உலகம் கேலிச்சிரிப்பு செய்திருக்கும். அப்படியாக, அறிவியலோ தொழில்நுட்பமோ எதுவாக இருப்பினும் ஒரு பெரிய யோசனையானது எப்போது வெற்றி அடையும், நிஜமாகும் என்று ஆராய்ந்தால், அந்த யோசனையை நம்பி பணத்தை அள்ளிக் கொடுக்கும் மக்களிடம் சென்றடைந்தால் மட்டுமே அவைகள் நிஜமாகும்..!

அப்படியாக சமீபத்தில் சில ஆராய்ச்சியாளர்கள் மற்றும் விஞ்ஞானிகளுக்கு நாசா போன்ற மிகப்பெரிய நிறுவனத்திடம் தங்களின் சிறந்த யோசனைகளை வழங்கும் வாய்ப்பு கிடைத்தது. அவைகளில் சில யோசனைகள் அறிவியல் புனைகதை திரைப்படத்தை நம் கற்பனைக்குள் ஓட விடுகிறது என்றே கூற வேண்டும். அப்படியான யோசனைகளையும் நாசாவிடம் 'சிக்கிக்கொண்ட' அடுத்தகட்ட முன்னேற்ற விஞ்ஞானிகளையும் கீழ்வரும் ஸ்லைடர்களில் காணலாம்..!

வேற லெவல் ஐடியா #01

ராக்கெட் லேப் - எலெக்ட்ரான் ராக்கெட்

ராக்கெட் பிராண்ட் :
எலக்ட்ரான் ராக்கெட் -உலகில் வேறு எந்த ராக்கெட் பிராண்ட்டை விடவும் வேகமாகமானது, மலிவானது. உடன் அடிக்கடி செயற்கைகோள் ஏவுதலை நிகழ்த்த முடியும்.

வேற லெவல் ஐடியா #02
சைட் ஸ்லீப்பிங் சீட்ஸ் (Side Slipping seats)

விமான பயண முறை :
சைட் ஸ்லீப் பிங் சீட்கள் வருங்கால விமான பயண முறையை விரிவுபடுத்த அனுமதிக்கும்..!

வேற லெவல் ஐடியா #03
க்வல்ஸேல் - விமானத்தின் மூளை (Qelzal)

ஸ்டீல்த் பண்பு :
டார்பாவின் நிதியுதவி பெரும் கவல்ஸேல் "மூளைபோல் செயல்படும்" கணினி பார்வை மற்றும் வழிகாட்டல் அமைப்புகள் கொண்ட மிக நெருக்கமான ஸ்டீல்த் பண்புகளை கொண்ட விமானத்தை வடிவமைக்கும் யோசனையை வழங்கியுள்ளது.

வேற லெவல் ஐடியா #04
செங்குத்தாக டெக் ஆப் மற்றும் லாண்டிங் செய்யும் பிஸ்னஸ் ஜெட் (business jet)

எக்ஸ்டிஐ
கார்பன் ஃபைபர் மற்றும் எப்பொட்சிப்பிசின் மூலம் கட்டமைக்கப்பட்ட இந்த எக்ஸ்டிஐ (XTi) விமானமானது ஒரு ஹெலிகாப்டர் போன்று செயல்படும்.

வேற லெவல் ஐடியா #05
சிறுகோள் சுரங்கம் (mine asteroids)

உற்பத்தி :
ஸ்வாப் சாதனங்ககளை பயன்படுத்தி நீர் எரிபொருள் எதிர்வினை மூலம் ஹைட்ரஜனை உற்பத்தி செய்யும் யோசனையை வழங்கியுள்ளது ஸ்பெக்ட்ரோனிக் (Spektronic)

வேற லெவல் ஐடியா #06
நாட்டிலஸ் (Natilus) உலகின் முதல் "கார்கோ ட்ரோன் "

பே-லோட் :
சரக்குகளை கொண்டு சேர்க்கும் ட்ரோன்கள் பயன் பாட்டில் உள்ளன ஆனால் இவ்வகை ட்ரோன்கள் 300 மைல் வேகத்தில் 200,000 பவுண்டு பே-லோட்களை நீருக்கடியில் கொண்டு செல்லும் வலிமை யுடையதாய் உருவாக இருக்கிறது.

வேற லெவல் ஐடியா #07
ஜெர்ம்பால்கன் (Germfalcon) ரோபோ

திறன் :
புற-ஊதா ஒளியைப் பயன்படுத்தி விமானங்களில் உள்ள 99.99% பாக்டீரியாக்களை கொல்லும் திறன் கொண்டது.

கருத்துரையிடுக Disqus

 
Top