0

ஆணுக்கும் பெண்ணுக்கும் உள்ள வித்தியாசம் என்னவென்று கேட்டால், பலரும் மார்பகம் மற்றும் பிறப்புறுப்புக்களைத் தான் கூறுவார்கள்.

அதைத் தவிர வேறு என்ன வேறுபாடு என்று கேட்டால், உடை, தலைமுடி, நடை என்று கூறுவார்கள்.

இவை அனைத்தும் நம் கண்களுக்கு புலப்படும் வெளிப்படையான வேறுபாடுகள்.
ஆனால் அதையும் தாண்டி, ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையே உள்ள உடல் வித்தியாசங்களை நிபுணர்கள் பட்டியலிட்டுள்ளனர்.

அவற்றில் சிலவற்றை நீங்கள் தெரிந்து கொள்வதற்காக பட்டியலிட்டுள்ளது.

அதைப் படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

இடுப்புப் பகுதி
ஆண்களை விட பெண்களின் இடுப்புப்பகுதி பெரியது. மேலும் இது குழந்தைப் பிறப்பிற்காக இயற்கை பெண்களுக்கு ஏற்படுத்திய வடிவம்.

கொழுப்பு சேரும்
இடம் பொதுவாக ஆண்களுக்கு கொழுப்புக்களானது வயிற்றில் சேரும்.

அதனால் தான் பெண்களை விட ஆண்கள் தொப்பையால் கஷ்டப்படுகின்றனர். அப்படியெனில் பெண்களுக்கு கொழுப்புக்கள் எங்கு சேரும் என்று கேட்கலாம்.

பெண்களுக்கு கொழுப்புக்களானது தொடை மற்றும் இடுப்பின் பின்பகுதியில் சேரும்.

மேலும் ஆண்களை விட பெண்களின் தொடை பெரியதாக இருப்பதற்கு காரணமும் இதுவே.

இதய துடிப்பு
இதய துடிப்பு என்று வரும் போது, ஆண்களை விட பெண்களின் இதய துடிப்பு மிகவும் வேகமாக இருக்கும். அதில் ஆண்களுக்கு சராசரியாக ஒரு நிமிடத்திற்கு 72 முறை துடிக்கிறதெனில், பெண்களுக்கு 80 முறை துடிக்கும்.

செல்கள் வேறுபடும்
ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையே உள்ள செல்களும் வேறுபடும்.

இதற்கு காரணம் அவர்களின் குரோமோசோம்களுக்கு இடையே உள்ள வேறுபாடு என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள்.

இரத்த சிவப்பணுக்கள்
ஆண்களை விட பெண்களின் ரத்தத்தில் நீரின் அளவு அதிகமாக இருக்கும். இதனால் பெண்களின் உடலில் இரத்த சிவப்பணுக்கள் குறைவாக இருக்கும். இதன் காரணமாக பெண்கள் அடிக்கடி இரத்த சோகைக்கு உள்ளாகின்றன.

நுரையீரல்
ஆண்களை விட பெண்களின் நுரையீரல் சிறிதாக இருக்கும். அதில் ஆண்களின் நுரையீரலானது பெண்களின் நுரையீரலை விட 30 சதவீதம் பெரியதாக இருக்கும். இதனால் தான் ஆண்களை விட பெண்கள் எதிலும் விரைவில் சோர்வடைகின்றனர்.
தலை, தண்டுவடம், கால்கள்

அதேப் போல் பெண்களை விட ஆண்களின் தலை, தண்டுவடம் மற்றும் கால்கள் போன்றவை பெரியதாக இருக்கும்.

நோய் என்று வரும் போது பெண்களை விட ஆண்கள் தான் அதிக மரணத்தை சந்திக்கின்றனர்.

அதிலும் மார்பக புற்றுநோய், பிறப்புறுப்பு நோய், கருப்பைக் கட்டிகள் போன்றவற்றைத் தவிர, மற்ற அனைத்து நோய்களாலும் ஆண்கள் மரணத்தை தழுவுகின்றனர்.

வயிறு, சிறுநீரகம், கல்லீரல், குடல்வால்
வயிறு, சிறுநீரகம், கல்லீரல், குடல்வால் ஆகிய மூன்றும் பெண்களை விட ஆண்களுக்கு சிறிதாக இருக்கும்.

பற்கள்
பற்கள் என்று வரும் போது, ஆண்களை விட பெண்களின் பற்கள் வலிமை குறைவாக இருக்கும்.

சொல்லப்போனால் பொக்கை வாய் தாத்தாக்களை விட, பொக்கை வாய் பாட்டிகள் தான் உலகில் அதிகம்.

ஆக்ஸிஜன் அளவு
ஆண்களை விட பெண்களின் உடலில் ஆக்ஸிஜன் சற்று குறைவாக இருக்கும்.

இதற்கு காரணமும் இரத்த சிவப்பணுக்கள் குறைவாக இருப்பது தான்.

சிவப்பணுக்கள் தான் ஆக்ஸிஜனை உடலின் அனைத்து பகுதிகளுக்கும் எடுத்துச் செல்கிறது.

அது குறைவாக இருக்கும் போது, பெண்களால் கூட்டம் நிறைந்த இடங்களில் நீண்ட நேரம் இருக்க முடியாமல் மயங்கி விழுகின்றனர்.

கருத்துரையிடுக Disqus

 
Top