0

வருடம் முழுவதும் மீசையில் மண் ஒட்டாத குறையாய் வேலை செய்து அடித்துபிடித்து வாங்கிய சம்பளத்தின் பெரும் பகுதியை வருமான வரியாகச் செலுத்துகிறோம். வரி என்றால் கெட்டவார்த்தை என்று கூறும் பலபேர் நம் பார்த்திருப்போம்.

முறையாகச் சேமிக்கத் தெரியாதவர்கள், வருமானத்தைத் திட்டமிடாமல் செலவு செய்பவர்களே வருமான வரியைச் செலுத்துவார்கள். ஆம் உண்மை தான்.

நம்முடைய வருமானத்தைப் பல வழிகளில் சேமித்து, முதலீடு செய்து வருமானத்திற்கு முழுமையான வரி விலக்கு பெற முடியும் என்பது எத்தனை பேருக்கு தெரியும். இதற்கான வழியைத் தான் நாம் இப்போது உங்களுக்குச் சொல்ல போகிறேன்.


மாதமாதம் நீங்களும் பெறும் சம்பளத்தில் பிராவிடென்ட் பண்ட் சேமிப்பிற்காக ஒரு பகுதியை நீங்கள் வேலை செய்யும் நிறுவனம் பிடித்துக்கொள்ளும். இப்படிப் பிடித்தம் செய்யும் மொத்த தொகைக்கும் நீங்கள் வருமான வரி விலக்குப் பெறலாம். இக்கணக்கில் வைப்பு வைக்கப்படும் பணத்தில் வட்டியும் உண்டு. இது பிராவிடென்ட் பண்ட். அது என்ன தன்னார்வ பிராவிடென்ட் பண்ட் (VPF).

நீங்கள் வேலைசெய்யும் நிறுவனம் அனுமதித்தால் தன்னார்வ பிராவிடென்ட் பண்ட் வாயிலாக மாதமாதம் பிடித்தம் செய்யப்படும் தொகையை நீங்கள் அதிகரிக்கலாம். இதுவே தன்னார்வ பிராவிடென்ட் பண்ட் (VPF). இத்தொகையை நீங்கள் வருடத்திற்கு 1,50,000 ரூபாய் வரை அதிகரிக்கலாம்.
வருங்கால வைப்பு நிதி எனப்படும் பிபிஎப் திட்டத்தில் நீங்கள் முதலீடு செய்யும் முழுத்தொகையும் வருமான வரிச் சட்டம் 80சியின் கீழ் வரி விலக்குப் பெறலாம். இத்திட்டத்தில் 500 ரூபாய் முதல் 1,50,000 ரூபாய் வரை முதலீடு செய்யலாம். தற்போது இத்திட்டத்தில் செய்யப்படும் முதலீட்டுக்கு 8.10 சதவீத வட்டி. இதன் முதிர்வு காலம் 15 வருடம்.

ஆனால் இத்திட்டத்தின் மீதான வட்டி விகிதத்தை ஒவ்வொரு வருடமும் மத்திய அரசு மாற்றும்.

உங்கள் பெயரில் இருக்கும் லைப் இன்சூரன்ஸ் பாலிசிக்கு செலுத்தும் அனைத்துப் பிரீமியம் தொகையும் 80சி சட்டத்தின் கீழ் வரிவிலக்கு உண்டு. இதில் உங்கள் மனைவி மற்றும் பிள்ளைகள் மீதான பாலிசி பிரீமியம் தொகையும் சேர்க்கலாம்.

ஆனால் தாய், தந்தை மற்றும் மாமனார் மற்றும் மாமியார் பெயரில் இருக்கும் இன்சூரன்ஸுக்கு நீங்கள் செலுத்தும் தொகைக்கு விரி விலக்கு இல்லை.
வரி சேமிப்புக்கெனப் பிரத்தியேகமாக உருவாக்கப்பட்ட முதலீட்டுத் திட்டம் தான் இந்தப் பங்கு இணைப்புச் சேமிப்புத் திட்டம் (ELSS). இத்திட்டத்தில் முதலீடு செய்யப்படும் மொத்த தொகைக்கும் வருமான வரி விலக்கு அளிக்கிறது மத்திய அரசு. இதுவும் 80சி சட்டத்தின் கீழ் வருகிறது.
நீங்கள் வாங்கிய வீட்டுக் கடனுக்கு மாதமாதம் செலுத்த வேண்டிய மாத தவணை தொகையில் அசல் மற்றும் வட்டி தொகை ஆகிய அனைத்துக்கும் நாம் வருமான வரி விலக்குப் பெறலாம்.

இதில் முக்கியமாக அசல் தொகை 80சி சட்டத்தின் கீழும், வட்டியைச் சட்டம் 24 மற்றும் 80EE கீழ் வரி விலக்கு பெற முடியும். அதிகப்படியான தொகை ஒரு வருடத்திற்கு 50,000 ரூபாய்

உங்கள் பெண் குழந்தைக்கு 18 வயதுக்குக் குறைவாக உள்ளதா. இப்படியென்றால் உங்கள் பெண் குழந்தையின் பெயரில் சுகன்யா சம்ரிந்தி கணக்கு துவங்கி அதில் முதலீடு செய்யும் அனைத்துத் தொகைக்கும் வரி விலக்குப் பெறுங்கள்.

இக்கணக்கில் 15 வருடம் வைப்புச் செய்ய வேண்டும். உங்கள் பெண் குழந்தையின் 21 வயதில் இத்திட்டம் முதிர்வு பெறும். இத்திட்டத்தில் நீங்கள் ஒரு வருடத்திற்கு 1,000 ரூபாய் முதல் 1,50,000 ரூபாய் வரை முதலீடு செய்யலாம். இத்திட்டத்தில் முதலீடு செய்யப்படும் தொகைக்கு வட்டியும் உண்டு. 2015-16ஆம் நிதியாண்டுக்கு 9.2 சதவீதம் வட்டி.

இத்திட்டத்தில் பெறப்படும் வட்டி வருமானத்திற்கும் வரிவிலக்கு உண்டு.
NSC என்பது வரி சேமிப்புக்காக மத்திய அரசு உருவாக்கிய முதலீட்டுத் திட்டம். இத்திட்டத்தில் குறைந்தபட்சம் 100 ரூபாயில் இருந்து முதலீடு செய்யலாம்.
இதில் முதலீடு செய்யப்படும் அனைத்துத் தொகையும் 80சி சட்டத்தின் கீழ் வரி விலக்கு பெற உள்ளது. இத்திட்டத்தின் முதிர்வு காலம் 5 ஆண்டுகள். 6 மாதத்திற்கு ஒரு முறை இத்திட்டத்தில் வட்டி வருமானம் சேர்க்கப்படும். ஆனால் வட்டி வருமானத்திற்கு வரி உண்டு.

இன்பரா பாண்டுகள் என அழைக்கப்படும் இன்பராஸ்டக்சர் பத்திரங்கள் கட்டுமான நிறுவனங்கள் வெளியிடும். இப்படி வெளியிடும் அனைத்து நிறுவனங்களும் தனியார் நிறுவனங்களே. இதில் முதலீடு செய்யப்படும் தொகைக்கு 80சி சட்டத்தின் கீழ் வருமான வரி விலக்கு அளிக்கப்படுகிறது.
5 வருடம் முதிர்வு காலம் கொண்ட அனைத்து வங்கி வைப்பு நிதியில் முதலீட்டுச் செய்யும் மொத்த தொகைக்கும் வரி விலக்கு உண்டு. ஆனால் இதில் கிடைக்கப்பெறும் வட்டி வருமானத்திற்கு நாம் வரி செலுத்த வேண்டும்.
அதேபோல் மூத்த குடிமக்கள் பெயரில் வைப்புச் செய்யப்படும் அனைத்து வைப்பு நிதி தொகைக்கும் வருமான வரி விலக்கு உண்டு. மூத்த குடிமக்கள் என்றால் 55 வயதுக்கும் மேல் 60 வயதுக்குள்.

மேலும் தபால் நிலையத்தில் 5 வருட வங்கி வைப்புநிதி போலவே போஸ்ட் ஆபீஸ் டைப் டெப்பாசிட் என்ற திட்டம் உள்ளது. இதுவும் வங்கி வைப்பு நிதி போலச் செயல்படுபவை.

NABARD வங்கி வெளியிடும் இந்த ஊரகப் பத்திரத்தில் முதலீடு செய்யப்படும் மொத்த தொகைக்கும் வருமான வரி விலக்கு உண்டு.

ஒரே முதலீட்டுத் திட்டத்தில் காப்பீடு மற்றும் பங்கு முதலீட்டு ஆதாயமும் அளிக்கும் ஒரு திட்டம் தான் இந்த யூலிப் திட்டம். இத்திட்டத்தில் முதலீடு செய்யும் திட்டத்திற்கு வருமான வரி விலக்கு உண்டு.

உங்கள் பிள்ளைகளின் கல்விக்காகச் செலவிடப்படும் மொத்த தொகைக்கும் வருமான வரி விலக்கு உண்டு. இதனால் பிள்ளைகளை நன்றாகப் படிக்க வையுங்கள்.

மேலே குறிப்பிட்டுள்ள அனைத்து முதலீடுகளும் சட்டம் 80சி அல்லது 80C கீழ் வரிவிலக்குப் பெறலாம். 80சி தவிரப் பிற சட்டங்கள் மூலம் வரி விலக்கு பெறுவது எப்படி என்பதையே நாம் இப்போது பார்க்கப்போகிறோம்.
உங்கள் குடும்பத்திற்கு மருத்துவப் பாதுகாப்பு காப்பீடு எடுத்திருந்தால், 15,000 முதல் 60,000 ருபாய் வரையிலான தொகைக்கு வரி விலக்குப் பெறலாம்.

இந்தத் தள்ளுபடியை பெற வேண்டுமானால் தனி நபர் அல்லது ஹிந்து அன்-டிவைடெட் பேமிலி (HUF) வகையைச் சேர்ந்தவராக இருக்க வேண்டும்.
இந்தப் பிரிவின் கீழ் தனி நபர் அல்லது ஹிந்து அன்-டிவைடெட் பேமிலி வகையைச் சேர்ந்தவர் தன்னை நம்பி வாழும் உடல் ஊனமுற்றவருக்காகக் கட்டும் இன்ஷூரன்ஸ் ப்ரீமியம் பணத்திற்கு வரி விலக்கு அளிக்கப்படுகிறது. உடல் ஊனமுற்றவருக்காக அதிகபட்சமாக 75,000 ரூபாய் முதல் 1.25 லட்சம் ரூபாய் வரை வரி விலக்கு அளிக்கப்படும். இந்த வரி விலக்கு கிடைக்க அவரை நம்பியுள்ள அந்த ஊனமுற்றவர், அவரின் பெற்றோராகவோ, உடன் பிறந்தவராகவோ, கணவன்/மனைவியாகவோ அல்லது குழந்தையாகவோ இருக்க வேண்டும்.

இதன் மூலம் வருமான வரி விலக்கு பெற நீங்கள் பார்ம் 10-1A சமர்ப்பிக்க வேண்டும்.

உங்கள் குடும்பத்தாருக்கு ஏற்படும் மருத்துவச் செலவுகளுக்கு இந்தப் பிரிவின் கீழ் வரி விலக்கு அளிக்கப்படும். தனி நபர் அல்லது ஹிந்து அன்-டிவைடெட் பேமிலி வகையைச் சேர்ந்தவருக்கு இந்தப் பிரிவின் கீழ் 40,000 ரூபாய் வரை அல்லது நீங்கள் செலவு செய்த தொகை, இவையில் எது குறைவாக இருக்கிறதோ அதற்கு வரி விலக்கு அளிக்கப்படும். மூத்த குடிமகன்களுக்கு 60,000 ரூபாய் வரை வரிவிலக்கு அளிக்கப்படும்.

80 வயது தாண்டியவர்களுக்கு 80,000 ரூபாய் வரைக்கும் வருமான வரி விலக்கு அளிக்கப்படுகிறது.

உங்கள் மேல் படிப்பு அல்லது உங்களை நம்பியுள்ளவர்களின் மேல் படிப்புக்காக வாங்கிய கல்வி கடனுக்காகக் கட்டப்படும் வட்டிக்கு இந்தப் பிரிவின் கீழ் வரிவிலக்கு கிடைக்கும். இந்த வரி விலக்கை அதிகபட்சமாக 8 வருடம் வரை பெறலாம். அல்லது அதற்கு முன்பாக நீங்கள் வட்டியை முழுவதும் கட்டி விட்டால் அது வரைக்கும் வரிவிலக்கு அளிக்கப்படும். ஆனால் பகுதி நேரப் படிப்புக்கு வாங்கிய கல்விக் கடனுக்காகக் கட்டும் வட்டிக்கு வரி விலக்குக் கிடையாது.

அற நிறுவனம், அறக்கட்டளை மற்றும் தகுதி பெற்ற கல்வி நிறுவனங்களுக்கு நீங்கள் செய்யாத நன்கொடைகளுக்கு 80G-யின் கீழ் வரி விலக்குப் பெறலாம். இத்தொகை உங்களது மொத்த வருமானத்தில் 10 சதவீதத்தைத் தாண்டக்கூடாது.

தங்களின் நிறுவனத்திடம் இருந்து வீட்டு வாடகை (HRA) கிடைக்கவில்லை என்றால், இந்தப் பிரிவின் கீழ் தாங்கள் கட்டும் வீட்டு வாடகைக்கு வரிவிலக்கைப் பெறலாம்.

இந்தப் பிரிவின் கீழ், நீங்கள் கட்டும் வாடகை தொகை அதிகபட்சமாக மொத்த வருமானத்தில் 25% , அல்லது மாதம் 5,000 ரூபாய் அல்லது மொத்த வருமானத்தில் 10 சதவீதத்திற்குக் குறைவாகக் கொடுக்கும் வாடகை, இதில் எது குறைவாக இருக்கிறதோ, அதற்கு வரிவிலக்கு கிடைக்கும்.

வாக்காளர் ட்ரஸ்ட் அல்லது அரசியல் கட்சிக்கு நிதி அளிக்கும் இந்திய நிறுவனங்களைத் தவிர அனைத்து வரி விதிப்புக்குரியவர்களுக்கும் இந்தப் பிரிவின் கீழ் வரி விலக்கு கிடைக்கும்.

ஆராய்ச்சி நிறுவனங்கள் அல்லது அமைப்பு வழங்கி நன்கொடையை 80GGA சட்டத்தின் கீழ் வருமான வரி விலக்குப் பெறலாம்.

தனி நபர் அல்லது ஹிந்து அன்-டிவைடெட் பேமிலி வகையைச் சேர்ந்தவர் தான் சேமித்த பணத்தில் ஈட்டிய வட்டி தொகைக்கு இந்தப் பிரிவின் கீழ் ஒரு வருடத்திற்கு அதிகப்படியாக 10,000 ரூபாய் வரை வரிவிலக்கு கிடைக்கும். நிரந்தர வைப்பு நிதி அல்லது டெர்ம் வைப்பு நிதிக்கு வரி விலக்கு அளிக்கப்படாது.

நீங்கள் புத்தகம் எழுதி அதற்காகக் கிடைக்கும் வருமானத்தை 80QQB சட்டத்தின் வரி விலக்குப் பெறலாம். அதேபோல் உங்கள் பெயரில் ஏதேனும் Patent இருந்தால் அதற்காகக் கிடைக்கும் ராயல்டி தொகைக்கும் 80RRB சட்டத்தின் கீழ் நீங்கள் வரி விலக்குப் பெறலாம்.

இரண்டுக்கும் அதிகபட்ச தொகை 3,00,00 ரூபாய்.

கருத்துரையிடுக Disqus

 
Top