0


ஆரம்பக் காலத்தில் எம்ஜிஆர் திரைப்படத்தின் 'அண்டாக்கா கசம் ஆபுக்கா கசம்' என்ற வசனம் தான் நாம் கேள்விப்பட்ட முதல் பாஸ்வேர்டு எனலாம். அங்குத் தொடங்கிய பாஸ்வேர்டு மோகம் பல்வேறு காரணங்களால் நம்மை விட்டு நிரந்தரமாக நீங்காத ஒன்றாக மாறியுள்ளது.

நாம் வாழும் டிஜிட்டல் உலகில் எத்தனை பாஸ்வேர்டுகளை கடந்து வருகின்றோம். காலையில் கண் விழிக்கும் ஸ்மார்ட்போன்களில் துவங்கி, அலுவலகங்களில் ஆன் செய்யும் கம்ப்யூட்டரில் இருந்து இன்னும் ஒரு நாள் முழுக்க எத்தனை இடத்தில் பாஸ்வேர்டுகள் தேவைப்படுகின்றன என்பதைச் சிந்தித்தால் கூட ஒரு நாள் பத்தாது.

இப்போ அது பிரச்சனையில்லை, இன்று நமக்கு அதிகம் பழகிப்போன பாஸ்வேர்டுகளை முழுமையாக மாற்ற பல்வேறு புதிய தொழில்நுட்பங்கள் களம் கண்டுள்ளன..


இது நமக்குப் பல காலமாக அறிமுகமானது தான் என்றாலும், இனி இவை டிஜிட்டல் கருவிகளில் மிக முக்கிய தரவுகளை பாதுகாக்க இருக்கின்றன. கைரேகை ஸ்கேனர் கொண்ட ஸ்மார்ட்போன்களும் வெளியாகத் துவங்கி விட்டன என்பதும் குறிப்பிடத்தக்கது.
கைரேகை
பயனர்களின் குரல் மூலம் தரவுகளை பாதுகாக்கும் வழிமுறை வெளிநாடுகளில் புதிதாக பயன்பாட்டிற்கு வந்திருக்கின்றது. அந்த வகையில் ஐக்கிய ராஜ்ஜியத்தில் எச்எஸ்பிசி வாடிக்கையாளர்கள் தங்களது ஆன்லைன் கணக்குகளை பாதுகாக்க 'வாய்ஸ் பிரின்ட்' பயன்படுத்த முடியும்.
குரல்
1980களில் கண்டுபிடிக்கப்பட்ட இந்த வழிமுறையில் பயனர்களின் கண்களுக்குப் பின்புறம் இருக்கும் பிரத்தியேக இரத்த ஓட்ட முறையைச் சார்ந்து இயங்கும். இந்த வழிமுறை கொண்ட ஸ்மார்ட்போன்கள் தயாரிப்பில் இருக்கின்றன.
ரெட்டினா
டொரன்டோவை சேர்ந்த பயோநிம் எனும் நிறுவனம் ரிஸ்ட்பேன்ட் கருவிகளில் இசிஜி சென்சார் பொருத்தி ஒரே சமயத்தில் கட்டணங்களைப் பெறும் நிறுவனம் மற்றும் இசிஜி சென்சார் மூலம் சரியான பயனாளிகளைக் கண்டறியும்.
இதயத் துடிப்பு
இந்தத் தொழில்நுட்பம் ஒருவரின் முக அமைப்பை ஸ்கேன் செய்து அதன் மூலம் சரியான பயனர்களைக் கண்டறிகின்றது. ஃபின்லாந்தை சேர்ந்த நிறுவனம் தயாரித்த ஃபேஷியல் பயோமெட்ரிக் முறை பண பரிமாற்றங்களில் பயன்படுத்தப்படுகின்றது.
ஃபேஷியல் பயோமெட்ரிக்
கூகுள் நிறுவனம் பணியாற்றி வரும் இந்த வழிமுறையில் ஒருவரின் ஃபேஷியல் பயோமெட்ரிக், குரல் அமைப்பு மற்றும் திரையில் எவ்வாறு ஸ்வைப் செய்கின்றார் என பல்வேறு முறைகளை ஸ்கேன் செய்யும். இந்த வழிமுறை தொடர்ந்து சோதனை செய்யப்பட்டு வருகின்றது.

கருத்துரையிடுக Disqus

 
Top