0

இருபதாம் நூற்றாண்டு மிக முக்கியமான அறிவியலாளரான ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் ஒரு குறிப்பிடத்தக்க பயன்பாட்டுக் கணிதத் திறமைகள் கொண்ட ஒரு கோட்பாட்டு இயற்பியல் அறிஞரும் ஆவார். இவரின் புகழ்பெற்ற சார்புக் கோட்பாட்டை முன்வைத்ததுடன், குவாண்டம் எந்திரவியல், புள்ளியியற் எந்திரவியல் (statistical mechanics) மற்றும் அண்டவியல் ஆகிய துறைகளிலும் குறிப்பிடத்தக்க பங்களிப்புகளைச் செய்துள்ளார்..!

ஐன்ஸ்டீன் என்றதுமே நம்மில் பெரும்பாலானோர்களுக்கு அவரின் மிகவும் புகழ்பெற்ற ஒரு புகைப்படம் நிச்சயமாக நினைவிற்கு வரும். அந்த புகைப்படத்தில் அவர் தனது நாக்கை வெளியே நீட்டியபடி ஒரு கோமாளித்தனமான முகத்துடன் தோன்றுவார். நம்பினால் நம்புங்கள் அவர் ஏன் நாக்கை வெளியே நீட்டினார் என்பதற்கு ஏகப்பட்ட கதைகள் உண்டு..!
ஆனால் அவர் உண்மையில் எதற்காக தனது நாக்கை வெளியே நீட்டி 'போஸ்' கொடுத்தார் என்று தெரியுமா.??


1951-ஆம் ஆண்டு மார்ச் 1ஆம் தேதி இரவன்று ஐன்ஸ்டீனின் 72-வது பிறந்த நாள் நினைவாக, நண்பர்கள் மற்றும் சக பிரின்ஸ்டன் கிளப் நபர்கள் ஒரு கொண்டாட்ட நிகழ்ச்சியில் சந்தித்தனர்.
72-வது பிறந்த நாள் :
அந்த கொண்டாட்டத்தில் ஏகப்பட்ட களிப்புகள் நிகழும் என்பதால் பத்திரிகை காரர்களும், புகைப்படகலைஞர்களும் கூட்டம் கூட்டமாய் வந்திருந்தனர்.
புகைப்படகலைஞர்கள் :
ஒருபக்கம் இரவு முழுக்க பிறந்த நாள் கொண்டாட்டம் ஐன்ஸ்டீன் மிகவும் சோர்வாகி போயிருந்த போதிலும் அனைத்து புகைப்படகாரர்களுக்கும் பொறுமையாக போஸ் கொடுத்து கொண்டிருந்துள்ளார்.
பொறுமையாக போஸ் :
இறுதியில் ஐன்ஸ்டீனின் நண்பர் ஒருவர் அவரது வீட்டில் தனது வீட்டிற்கு காரில் சென்று விடலாம் என்று காரில் ஏறி வெளியேறும் நேரத்தில் ஒரு செய்தி புகைப்படக்காரரான ஆர்ட் சஸ்ஸீ என்பவர் ஐன்ஸ்டீனை அணுகியுள்ளார்.
ஆர்ட் சஸ்ஸீ :
காரில் இருந்த ஐன்ஸ்டீனை பார்த்து 'இன்னும் ஒரே ஒரு புகைப்படம், ப்ரோபஸர் சிரியுங்கள், உங்கள் பிறந்தநாள் புகைப்படம் அல்லவா ப்ரோபஸர்..? என்று சத்தமாக கூறியுள்ளார்..!
ப்ரோபஸர் சிரியுங்கள் :
அதற்கு உடனே தனது தலையை திருப்பிய ஐன்ஸ்ஸ்டீன், தனது நாக்கை வெளியே நீட்டிய படி போஸ் கொடுக்க அதை அப்படியே பதிவு செய்தார் ஆர்ட் சஸ்ஸீ..!
 
பதிவு :
பின்னர் அந்த புகைப்படம் மிகவும் பிடித்து போக அதன் ஒன்பது பிரிண்ட் வேண்டுமென்று கேட்டு வாங்கி கொண்டார் வாழ்த்து அட்டைகளை அலங்கரிக்க அந்த புகைப்படம் பயன்படுத்தியும் கொண்டார்..!
ஒன்பது பிரிண்ட் :
இதுதான் ஒரு கலாச்சார அடையாளமாக திகழும் பிரபல ஐன்ஸ்டீன் புகைப்படத்தின் நிஜ கதை..!
நிஜ கதை :
  
It was Einstein’s birthday and he was being hounded by photographers. He stuck his tongue out in exasperation trying to ruin the photo. Of course, his plan backfired. Since the scientist had such a reputation for being quirky, the photo was just seen as another example of his irascible charm, and it’s become one of the most famous pictures of Einstein ever taken.

கருத்துரையிடுக Disqus

 
Top