0

உங்கள் வருமான வரியைத் தாக்கல் செய்வதற்கான சரியான தருணம் இது. வரி தாக்கல் செய்வதற்கான கடைசி நாள் 2016, ஜூலை 31 ஆக இருந்தாலும் கடைசி நிமிடம் வரை காலத்தை கடத்தாமல் இப்போதே வரி தாக்கல் செய்வது நல்லது.

வருமான வரித் துறை வரி செலுத்துபவர்களுக்கு ITR கோப்புகள், டிடிஎஸ், ஃபார்ம் பதிவிறக்குதல், பணத்தைத் திருப்புதல், சலான்கள் என பலவற்றை இணையச் சேவையாக வழங்கி வருகிறது.

எனினும், இதில் உள்ள தொழில்நுட்ப சவால்களினால் இந்த சேவைகளைப் பயன்படுத்துவதில் சில சவால்களைக் நீங்கள் சந்திக்கலாம்.

எனவே நாம் இங்கு வருமான வரி இணை தளம் மூலமாக எப்படித் 'இலவசமாக' தாக்கல் செய்வது, 26AS ஃபார்மை காண்பது, வருமான வரி கால்குலேடர், இணைய வழி வரி செலுத்துதல், உங்கள் தவணைகளை சரிபார்த்தல், வருமான வரி தாக்கலை இணையம் வாயிலாகச் செய்தல், வருமான வரி தாக்கல் செய்யும் ஃபார்மகளை பதிவிறக்குதல் மற்றும் இது தொடர்பான ஃபார்ம்கள், பணம் திருப்பி பெருத்தல் நிலையைச் சரிபார்த்தல், இணைய வழி சரிபார்த்தல், திருத்துதல் போன்ற பல சேவைகள் பற்றியே நாம் இங்குப் பார்ப்போம்.


உங்கள் டிடிஎஸ் (TDS) சான்றிதழ்களை சேகரித்துக் கொள்க, அதில் நீங்கள் காண்பிக்க வேண்டிய கட்டாய தடையங்கள் அணைத்தும் குறிப்பிட்டு இருக்க வேண்டியது அவசியம்.

ஒரு வேலை டிஜிட்டல் முறையில் பதிவு செய்யப்பட்ட டிடிஎஸ் சான்றிதழ்களாக இருந்தால் அதில் சரி பார்க்கப்பட்டதற்கான செக் மார்க்குக்கள் இருக்கிறதா என்பதைச் சரிபார்க்கவும். அவ்வாறு டிஜிட்டல் மார்க்குக்கள் இல்லை என்றால் உங்களிடம் இருந்த வாங்கப்பட்ட டிடிஎஸ் தொகையை அரசாங்கத்திற்குச் செலுத்தியுள்ளனரா என்பதைச் சரிபார்க்கவும்.
சம்பளம் வாங்கும் ஊழியர்களாக்க இருந்தால் ஃபார்ம் 16 , சேவை வழங்குநராக இருந்தால் ஃபார்ம் 16A ஆகியவை டிடிஎஸ் சான்றிதழ்கள் ஆகும்.

ஃபார்ம் 26AS-ஐ பதிவிறக்கி உங்களுக்குப் பிடித்தம் செய்யப்பட்டுள்ள டிடிஎஸ் சான்றிதழில் குறிப்பிடப்பட்டுள்ள வரி தொகையை சரிபார்க்கவும்.

உங்கள் டிடிஎஸ் சான்றிதழில் உள்ள எல்லா வருமானமும் ஃபார்ம்26AS-இல் காணப்பட வேண்டு.

ஃபார்ம்26AS-ஐ இணையம் மூலமாக பதிவிறக்கி கொள்ளலாம். இதை நீங்கள் பதிவிறக்க இந்த இணைப்பை கிளிக் செய்க.

ஒருவேலை ஃபார்ம்26AS-இல் குறிப்பிட்ட தொகைக்கும் டிடிஎஸ் சான்றிதழில் உள்ள தொகைக்கும் ஏதேனும் மாறுதல் இருந்தால் டிடிஎஸ் பிடித்தம் செய்தவரிடம் விசாரித்து சரிபார்த்துக் கொள்வது நல்லது.

உங்கள் வருமானத்தில் வரி செலுத்த வேண்டிய அனைத்தையும் கணக்கிடப்பட்டுளதா என்பதை உறுதிசேய்து கொள்க.

நீங்கள் செலுத்த வேண்டிய நிதி ஆண்டின் வரியைப் பொருத்தமான வரிகளுடன் கணக்கிடுக.

விரிவான கால்குலேட்டர்: incometaxindiaefiling (வரி கால்குலேட்டர்)
பின்னர் நீங்கள் செலுத்த வேண்டிய வரி, திரும்பப்பெறக்கூடிய வரிகளைக் கணக்கிடுக. டிடிஎஸ், டிசிஎஸ், முன்கூடியே செலுத்திய வரி போன்ற வற்றைப் பயன்படுத்தி பிரிவு 234A, 234B, 23C மற்றும் இது போன்றவையில் இருந்து வரியாக பெற்றுக் கொள்ளப்படும். பிறகு வரும் மீதத் தொகையை வரியாகச் செலுத்தினால் போது.

வரியை செக் அல்லது இணையம் வழியாக ITNS 280 சலானைப் பயன்படுத்தி செலுத்தலாம்.
உங்கள் நிலுவை தொகையை பார்ப்பதற்கான இணைப்பிற்கு இங்கு கிளிக் செய்க.

உங்கள் வரியைச் செலுத்தியவுடன், வருமான விவரங்களைத் தாக்கல் செய்யவும். தனிநபர் வருமான வரியைத் தாக்கல் செய்வதற்கான கடைசி தேதி பொதுவாக நீங்கள் வரியைச் செலுத்திய அந்த வருடத்தின் ஜூலை 31 ஆம் தேதிக்குள் செலுத்தியாக வேண்டும்.

வரி செலுத்திய விவரங்களை இணைக்க இந்த இணைய தளத்தில் செய்யலாம்.
 
வருமான வரியைத் தாக்கல் செய்ய, வருமான வரித்துறையின் இணைய தளத்தில் பயனர் ஐடி, கடவுச்சொல், பிறந்த தேதி மற்றும் கேப்ட்சா குறியீடு குறியீடுகளை பயன்படுத்தி உள்நுழைக.

நீங்கள் இந்த தளத்தில் உள்நுழைந்த உடன் எனது கணக்கு போன்ற வீவரங்களைக் காண்பீர்கள்.

அதுவே நீங்கள் புதிய பயனராக இருந்தால் முதலில் நீங்கள் இணையதளத்தில் பதிவு செய்து உங்களுக்கான கணக்கை வேண்டும்.
உங்களுக்கு ITR-1 அல்லது ITR-4S ஆகிய ஃபார்ம் பொருத்தமானவையாக இருந்தால் நீங்கள் எளிதாக மின்னணு முறையில் உங்கள் ITR ஃபார்ம்களை பதிவேற்றலாம்.

அதுவே உங்களுக்கான ஃபார்ம்கள் ITR-2A, ITR-2, ITR-3 மற்றும் ITR4 ஆக இருந்தால் உங்களுக்கான கீழே கொடுக்கப்பட்ட இணையத்தில் இருந்து எக்செல் அல்லது ஜாவா பயன்பாடாக பதிவிறக்கம் செய்ய வேண்டும்.ஃபார்மை பதிவிறக்கியப் பிறகு உங்கள் தனிப்பட்ட விவரங்கள், வருமான விவரங்கள் மற்றும் பிற விவரங்களை நிரப்ப வேண்டும்.
ஃபார்மை முழுமையாக நிரப்பியப் பிறகு, முழுமையாக நிரப்பிய ஃபார்மை அதே இணைய தளத்தில் பதிவேற்ற வேண்டும்.

வரி தாக்கல் செய்வது சரிபார்ப்பு முறை இல்லாமல் நிறைவடையாது. வரி தாக்கல் செய்தவுடன் பயனர் அதை சரிபார்த்து உறுதி செய்தல் வேண்டும்.
இணையச் சரிபார்ப்பு முறை இரண்டு வழியாகச் செய்யலாம். ஒன்று இணையம் வாயிலான ITR மற்றொன்று கைமுறை சரிபார்ப்பு.

இணையதள வங்கி பயன்படுத்துதல், உங்கள் ஆதார் அட்டையுடன் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணுக்கு வருமான வரித்துறையில் இருந்து அனுப்பப்படும் மின்னணு சரிபார்ப்பு குறியீடு பயன்படுத்தி செய்யலாம்.
அதுமட்டும் இல்லாமல் வறிதாக்கல் செய்யப்பட்ட ITR-V அக்னாலெட்ஜ்மெண்ட் காப்பியை பிரிண்ட் செய்து, அதில் கையொப்பம் இட்டு அக்னாலெட்ஜ்மெண்ட்டில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு அஞ்சல் வழியாக அனுப்ப வேண்டும்.

உங்கள் அக்னாலெட்ஜ்மெண்ட்டினை வருமான வரித்துறை பெற்றவுடன் உங்களுக்கு ஒரு உறுதிப்படுத்தல் மின்னஞ்சல் அனுப்பப்படும். இந்த மின்னஞ்சல் வருமான வரித்துறை இணையதளத்தில் நீங்கள் பதிவு செய்துள்ள மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்படும்.

கருத்துரையிடுக Disqus

 
Top