0


பாயிஸ்டோஸ் டிஸ்க் (Phaistos Disc) - கிரீட் தீவில் பாயிஸ்டோஸ் என்ற மினோஅன் நாகரீகத்து தளத்தில் இருந்து கண்டெடுக்கப்பட்ட ஒரு களிமண் வட்டு ஆகும். இது சாத்தியமான நடுத்தர அல்லது தாமதமாக உருவான மினோஅன் நாகரீகத்தின் வெண்கல வயது (இரண்டாவது புத்தாயிரம் கி.மு.) காலத்தை சேர்ந்ததாக இருக்கலாம் என்று கணக்கீடப்பட்டுள்ளது.

சுமார் 15 செமீ விட்டம் கொண்ட இந்த வட்டின் இருபுறமும் முத்திரை சின்னங்கள் உள்ளன, பெரும்பாலான ஆராய்ச்சியாளர்களால் வரலாற்றின் முதல் 'சிடி-ரோம்' (CD-ROM) என்று அழைக்கப்படும் இந்த வட்டு தன்னுள் கொண்டுள்ள மறைமுக செய்தி தற்போது கண்டறியப்பட்டுள்ளது..!


களிமண்ணால் செய்யப்பட்ட வட்டான இந்த பாயிஸ்டோஸ் டிஸ்க் , ஜூலை 3, 1908-இல் கிரீட்டில் கண்டுபிடிக்கப்பட்டது.

1908 :

குறைந்தது 4000 ஆண்டுகள் பழமையானதாக இருக்கும் என்று நம்பப்படும் இந்த பொருளில் உள்ள கல்வெட்டு வரைபடங்களின் விளக்கம் ஒரு நூற்றாண்டு காலமாக தீர்வு காணாத மர்மமாகவே இருந்தது.

நூற்றாண்டு :

சமீபத்தில் கிரேக்க விஞ்ஞானிகள் மூலம் பெறப்பட்ட புதிய தரவானது பாயிஸ்டோஸ் டிஸ்க்கில் எழுதப்பட்டுள்ள செய்தியை கண்டறிய அனுமதிக்கிறது.

பாயிஸ்டோஸ் டிஸ்க் :

ஆய்வாளர்களின் கருத்துப்படி பாயிஸ்டோஸ் டிஸ்க்கின் ஒருபக்கத்தில் கர்ப்பிணி அன்னை தேவியும் மற்ற பக்கத்தில் மினோஅன் நாகரீகமக்களால் வழிபடப்பட்ட 'அஸ்டார்ட்டி' தேவி உருவம் உள்ளது.

கர்ப்பிணி அன்னை :

இந்த வட்டில் மொத்தம் 241 புள்ளிவிவரங்கள் உள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது.

மொத்தம் :

மொழியியல் அறிஞர், தொல்பொருள் மற்றும் கிரீட் தொழில்நுட்ப நிறுவன ஒருங்கிணைப்பாளர் ஆன ஓவன்ஸ் என்பவரின் கருத்துப்படி மினோஅன் 'அஸ்டார்ட்டி' தேவி அன்பின் ஒரு உருவமாகும்.

'அஸ்டார்ட்டி' தேவி :

இதன் மூலம் இது நிச்சயமாக மதம் சார்ந்த செய்தியை, உரையை உள்ளடக்கியுள்ளது என்பது தெரிய வருகிறது.

மதம் சார்ந்த செய்தி :

அதற்கு சான்றாக கிரீட் புனித மலைகளில் இருந்து பெறப்பட்ட மற்ற கல்வெட்டுகளில் இருந்து பிற மத வார்த்தைகளுடன் செய்யப்பட்ட ஒரு ஒப்பீடும் உள்ளது.

ஒப்பீடு :

தற்போதைய மனிதர்களை போலவே அந்த காலத்திலும் மக்கள் தங்கள் பிரச்சனைகள் மற்றும் உடல் னால கோளாறுகளுக்காக வழிபாடுகள் நிகழ்த்தியுள்ளனர் என்பதற்கு இதுவொரு சான்றாக கருதப்படுகிறது.

வழிபாடு :

கருத்துரையிடுக Disqus

 
Top