0

அமெரிக்கா உண்மையில் நிலவில் தரையிறங்கியதா என்ற சர்ச்சை தொடர்ந்து நீடிக்கின்றது. இந்நிலையில் மூன் எக்ஸ்பிரஸ் என்ற தனியார் நிறுவனம் நிலவிற்கு மக்களை அழைத்துச் செல்லும் உரிமையைப் பெற்றுள்ளது. இதற்கான அனுமதியை ஐக்கிய அமெரிக்க கூட்டரசு வழங்கியது. இதைத் தொடர்ந்து தனியார் நிறுவனத்தின் விண்கலம் அடுத்த ஆண்டு வாக்கில் நிலவில் தரையிறங்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.


பூமியை விட்டு விண்வெளி செல்லும் முதல் தனியார் நிறுவனம் என்ற பெருமையை மூன் எக்ஸ்பிரஸ் நிறுவனம் பெற்றுள்ளது. இதனை மூன் எக்ஸ்பிரஸ் செய்தி குறிப்பின் மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளது.

முதல் நிறுவனம்
மூன் எக்ஸ்பிரஸ் என்பது நவீன் ஜெயின், பார்னெ பெல், பாப் ரிச்சர்ட்ஸ் ஆகியோர் இணைந்து உருவாக்கப்பட்ட நிறுவனம் ஆகும். அமெரிக்கா, சீனா மற்றும் ஐரோப்பிய விண்வெளி நிறுவனங்களைத் தொடர்ந்து நிலவில் கால் பதிக்கும் முதல் நிறுவனம் மூன் எக்ஸ்பிரஸ் என்பதும் குறிப்பிடத்தக்கது.

குழு
நிலவில் வெற்றிகரமாகத் தரையிறங்கும் பட்சத்தில் தனியார் நிறுவன நிதியுதவிடன் நிலவில் கால் பதிக்கும் முதல் நிறுவனம் என்ற பெருமையையும் மூன் எக்ஸ்பிரஸ் அடையும்.

தனியார் நிறுவனம்
பூமியின் சுற்றுப்பாதையை விட்டு வெளியேறும் அனுமதி பெற்ற முதல் தனியார் நிறுவனம் என்பதால் ஒழுங்குமுறை அமைப்புகளுக்குக் கூடுதல் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

அனுமதி
இதே போன்ற அனுமதியினை மற்ற நிறுவனங்களுக்கு வழங்க அமெரிக்கா எவ்வித ஒழுங்குமுறை கட்டமைப்புகளையும் நிர்ணயம் செய்யவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஒழுங்குமுறை கட்டமைப்பு
மூன் எக்ஸ்பிரஸ் நிறுவனம் நிலவில் தரையிறங்க ஒரு முறை மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது, இதோடு மற்ற நிறுவனம் ஏதும் இதே போன்ற திட்டத்துடன் வரும் பட்சத்தில் அனுமதி வழங்கப்பட மாட்டாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அனுமதி
நிலவில் தரையிறங்க அனுமதி கிடைக்கும் முன் அங்குக் கிடைக்கும் பொருட்களை வியாபாரம் செய்து கொள்ளும் அனுமதி வழங்கப்பட்டது என்றும் கூறப்பட்டுள்ளது.

லாபம்
விண்வெளி வளங்களை எடுத்துக் கொள்ளும் அனுமதி வழங்கப்பட்ட போதும் அவ்வாறு மேற்கொள்வது இன்று வரை சாத்தியமில்லாத ஒன்று என்பதும் குறிப்பிடத்தக்கது.

விண்வெளி
மூன் எக்ஸ்பிரஸ் நிறுவனத்திற்கு அனுமதி வழங்கப்பட்டதைத் தொடர்ந்து ஸ்பேஸ் எக்ஸ் மற்றும் பிக்லோ ஏரோஸ்பேஸ் போன்ற நிறுவனங்கள் செவ்வாய் கிரகத்தில் விண்வெளி விடுதிகளைக் கட்டமைக்க அனுமதி கோரலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது.

நிறுவனங்கள்
நிலவில் தரையிறங்கும் அனுமதி வழங்கப்பட்ட நிலையில் மூன் எக்ஸ்பிரஸ் நிறுவனம் தனது திட்டத்தில் வெற்றி காண வாழ்த்துவோம்.

கருத்துரையிடுக Disqus

 
Top