0

அளக்க முடியாத விண்வளியை நம்மால் முடிந்தவரை அளந்து பார்த்து விட வேண்டுமென்ற மனித இனத்தின் நம்பிக்கை, பாராட்டப்பட வேண்டிய ஒன்றாகும். மனித இனத்தின் இந்த பேராவலுக்கு உதவியாய் அறிவியல்-தொழில்நுட்பம் திகழ்கிறது.

அப்படியான விண்வெளியின் எல்லைகள் இரண்டு வழிமுறைகளில் தொட்டுப் பார்க்கப்படுகிறது. ஒன்று - ஆளில்லா விண்கலங்களால், இரண்டு - புகைப்பட கேமிராக்களால்..!

அவைகள் ஸ்பேஸ் போட்டோகிராஃப் எனப்படுகின்றன, அப்படியாக இந்த வாரம் பதிவு செய்யப்பட்ட 6 சிறந்த ஸ்பேஸ் புகைப்படங்களைத்தான் கீழ்வரும் ஸ்லைடர்களில் தொகுத்துள்ளோம்.


ஒரு நட்சத்திர வெடிப்பு ஏற்ப்பட்டு நட்சத்திர உலோகத்துண்டுகள் விண்ணில் பரவி சிதறுகிறது.

புகைப்படம் : நாசா, ஹப்பிள் விண்வெளி தொலைநோக்கி.
நட்சத்திர வெடிப்பு :
பூமியில் இருந்து 1400 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ள ஓரியன் நெபுலாவிற்கு அப்பால் உள்ள மூலக்கூறு மேகம் காட்சி, செவ்வகத்தில் அதன் உமிழ்வு விரிவாக காட்டப்பட்டுள்ளது.

உமிழ்வு :
உட்டா மற்றும் அரிசோனா எல்லையருகே அமைந்துள்ள அமெரிக்ககாவின் இரண்டாவது பெரிய செயற்கை தேக்கமான பவல் ஏரி புகைப்படம் : சர்வதேச விண்வெளி மையத்தில் பொருத்தப்பட்டுள்ள எர்த்கேம்.

பவல் ஏரி :
வானியலில் ஒரு சூப்பர்நோவா நட்சத்திர வெடிப்பு ஏற்படும் போது இப்படித்தான் இருக்கும். புகைப்படம் : நாசா.

சூப்பர்நோவா :
சனி கோளின் தெதைஸ் ( இடது ) மற்றும் ஹைபெரின் என்ற இரண்டு பனிக்கட்டி நிலவுகளுக்கு இடையில் 930,000 மைல்கள் இடைவெளி இருந்தாலும் பார்க்க நெருங்கிய விண்வெளி பொருட்கள் போன்றுதான் காட்சி அளிக்கின்றனர். புகைப்படம் : நாசா.

இடைவெளி :
நாசாவின் அக்வா செயற்கைக்கோள் எடுத்த இந்த புகைப்படத்தில் நீங்கள் பார்ப்பது சோபெர்நெஸ் காட்டு தீ வடக்கு கலிபோர்னியாவில் பிக்-சூர் நோக்கி பரவும் காட்சி.

சோபெர்நெஸ் :

மேலும் படிக்க :

கருத்துரையிடுக Disqus

 
Top