0

அன்றாடம் பயன்படுத்தும் ஆண்ட்ராய்டு போனின் மிகப்பெரிய பிரச்சனையே அதன் பேட்டரி பேக்கப் தான் எனலாம். காலையில் வெளியே செல்லும் முன் பேட்டரியை முழுமையாக சார்ஜ் செய்து வெளியே சென்றதும் மனதில் தோன்றும் முதல் விடயம் எப்படியாவது பேட்டரியை நாள் முழுக்க பயன்படுத்திட வேண்டும் என்பதே ஆகும்.


பேட்டரியை நாள் முழுக்க பயன்படுத்த பல்வேறு அம்சங்களில் கவனமாக இருக்கின்றீர்களே, உண்மையில் நீங்கள் பயன்படுத்தும் ஆப்களில் ஒரே ஆப் தான் ஒட்டுமொத்த பேட்டரியையும் தீர்த்து வருகின்றது எனத் தெரியுமா?

ஆப்ஸ்
பேட்டரியை அதிகம் உரிஞ்சும் ஆப் நாளடைவில் பேட்டரியின் ஆயுளைக் குறைக்கும். அப்படியாக ஸ்மார்ட்போனில் ஒட்டுமொத்த பேட்டரிக்கும் ஆப்பு வைக்கும் ஒற்றை ஆப் எது என்பதைக் கண்டறிவது எப்படி?

ஆபத்து
ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போனின் செட்டிங்ஸ் பவர் மேனேஞ்மென்ட் சென்றால் திரையில் ஆப்ஸ் மற்றும் அம்சங்கள் தோன்றும். இதில் எந்த ஆப் அதிக பேட்டரியை பயன்படுத்துகின்றது என்பதை அறிந்து கொள்ள முடியும்.

வழிமுறை
பேட்டரியை அதிகம் பயன்படுத்தும் ஆப் கண்டறிந்ததும் முதலில் அதன் கேச்சிக்களை அழித்து ஒரு முறை பயன்படுத்தலாம். இருந்தும் இதற்கான நிரந்தர தீர்வு செயலியை ஃபோர்ஸ்-ஸ்டாப் செய்து கருவியை ரீஸ்டார்ட் செய்வதாகும்.

அடுத்து என்ன
பின் கூகுள் பிளே ஸ்டோரில் இருந்து ஏற்கனவே ஆப்பு வைத்த செயலிக்கு மாற்றாக புதிய செயலியைப் பதிவிறக்கம் செய்து அதனை முயற்சிக்கலாம்.

மாற்றம்
மாற்றுச் செயலையை முயற்சிக்கும் அளவு பயனுள்ள ஆப் இல்லை எனில் குறிப்பிட்ட ஆப் பயன்படுத்துவதையே நிறுத்தி விடலாம். எதுவானாலும் முடிவு உங்களை பொறுத்ததே.

வேண்டாம்
ஒரு வேலை ஸ்மார்ட்போன் பேட்டரியை தீர்க்க ஆப் காரணமில்லை எனில் திரையின் பிரைட்னஸை குறைத்தாலே நல்ல தீர்வு கிடைக்கும்.

திரை
சில கருவிகளில் சூழல் வெளிச்சத்திற்கு ஏற்ப பிரைட்னஸ் தானாகத் தீர்மானிக்கும் ஆப்ஷன் வழங்கப்பட்டுள்ளன. அவை பேட்டரியை அதிகளவு சேமிக்கும்.

கருத்துரையிடுக Disqus

 
Top