0

உலக அளவில் வெற்றி பெற்றவர்களின் இளமைக்காலங்கள் எப்படி இருந்தது என்பதும், அவர்கள் இளமையில் போட்ட விதைதான் இன்று விருட்சமாக வளர்ந்துள்ளது என்பதும் அவரவர்களின் வாழ்க்கை வரலாற்றுப் புத்தகத்தை படித்துப் பார்த்தால் தெரிந்து கொள்ளலாம்.

இந்நிலையில் தங்களுடைய இளமைக் காலத்தில் உலகின் ஐந்து பெரிய மனிதர்கள் என்ன செய்தார்கள் என்பதைப் பார்ப்போமா?

Image result for warren buffett quotes
உலகின் வெற்றிகரமான முதலீட்டாளர், பங்கு வர்த்தக மேதை, தொழிலதிபர் என்ற பெருமையை பெற்ற அமெரிக்காவைச் சேர்ந்த வாரன் பஃபெட், பங்குவர்த்தக வருடாந்திர கூட்டம் ஒன்றில் பேசியபோது, 'நல்ல நண்பர்களைச் சம்பாதிப்பது மற்றும் சக ஊழியர்களிடம் இணைந்து பணியாற்றும் வல்லமை ஆகிய இரண்டும் ஒருவருடைய வாழ்வில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும்.

மனித தன்மையுடன் கூடிய பணிவு மற்றும் கட்டுப்பாடு ஆகியவை ஒரு வெற்றிகரமான மனிதனாக மாற்றுகிறதோ இல்லையோ, ஒரு நல்ல மனிதனாகக் கண்டிப்பாக மாற்றும்

 Image result for apple ceo steve jobs
ஆப்பிள் நிறுவனத்தைத் தோற்றுவித்த ஸ்டீவ் ஜாப்ஸ் அவர்களின் வாழ்க்கை வரலாற்றை எழுதிய வால்ட்டர் இசாக்சன் என்பவர், ஸ்டீவ் ஜாப்ஸ் இறப்பதற்கு ஒருசில நாட்களுக்கு முன் கூறியதை நினைவு கூர்கிறார்.
நாம் எல்லோரும் நம்முடைய உணர்வுகளைப் பெரிதுபடுத்தியே பேசி வருகிறோம். ஆனால் நாம் அனைவருமே வரலாற்று ஓட்டத்தின் ஒரு அங்கம் மட்டுமே. நமக்குப் பின்னால் இன்னும் பல வரலாறுகள் எழுதப்படவுள்ளன.
வரலாற்றில் நீங்கள் ஒரு உன்னதமான காரியம் செய்தால் அதனால் உங்களைச் சேர்ந்தவர்கள் அல்லது உங்களை சாராதவர்கள் அதிகபட்சம் 40 வருடங்கள் பயன் அடைவார்கள். ஆனால் அதற்குப் பின்னர் நீங்கள் செய்த உன்னதமான விஷயம் சாதாரணமாகிவிடும்.

 Image result for katie couric
அமெரிக்காவின் மிகப்பெரிய மென்பொருள் எஞ்சினியர், தொழிலதிபரான இவருக்குப் பிரபல எழுத்தாளர் கெட்டி கொரிக் கூறிய அறிவுரை இதுதான்: எதையுமே சரி என்ற பாசிட்டிவ் நோக்கத்துடன் பார்க்க வேண்டும்.
புதிய நாட்டிற்கு அழைப்பு வந்தாலோ, புதிய நண்பர்கள் கிடைத்தாலோ, புதிய விஷயங்களைக் கற்கும் வாய்ப்பு கிடைத்தாலோ, முதன்முதலில் வேலைக் கிடைத்தாலோ, அதன்பின்னர் அதைவிடச் சிறந்த வேலைக் கிடைத்தாலோ, நல்ல மனைவி கிடைத்தாலோ உடனே சரி என்று சொல்ல வேண்டும். இந்தச் சரி என்ற ஒரே ஒரு வார்த்தை ஒரு மனிதனை உச்சத்திற்கு அழைத்துச் செல்லும்

 Image result for billgates
பில்கேட்ஸை பற்றித் தெரியாதவர்கள் உலகில் இருக்க முடியாது. மைக்ரோசாப்ட் அதிபரான பில்கேட்ஸ் ஒரு தொலைக்காட்சி பேட்டியில் கூறியபோது, ''வாரன் பஃபெட் அவர்கள் கடைப்பிடிக்கும் எளிமை மற்றும் அவர் கூறிய சிறந்த அறிவுரைகள் தான் தன்னை இந்த நிலைக்குக் கொண்டு வந்து நிறுத்தியுள்ளதாகக் கூறியுள்ளார். வாரன் பஃபெட் அவர்களின் வாழ்க்கையில் எளிமை, எளிமை எளிமையைத்தவிர வேறு ஒன்றும் இல்லை' என்று கூறியுள்ளார்.

Image result for facebook ceo
ஒரு பிரச்சனையை பற்றி அவரிடம் பேசினால் அந்தப் பிரச்சனையின் ஆணிவேரை எப்படிக் களைவது என்ற ரகசியத்தை அவர் தெரிந்து வைத்திருப்பார். பிரச்சனையை எளிதாக, பதட்டமின்றி அணுகுவதே நம்மை வெகு காலத்திற்கு வெற்றிகரமாக அழைத்துச் செல்லும்
அமெரிக்காவைச் சேர்ந்த இவர் ஃபேஸ்புக் சமூக வலைத்தளத்தின் சி.இ.ஒ ஆக பணிபுரிகின்றார். நீண்ட கால செயல் ஒன்றையும் குறுகிய கால செயல் ஒன்றையும் செய்யும்போது ஏற்படும் வேறுபாடு குறித்து மிக அழகாக விளக்குகிறார்.

நம்முடைய நீண்ட கால செயல் மிகப்பெரியதாகவும், மிகப்பெரிய கனவாகவும் இருக்கும். அதே நேரத்தில் குறுகிய கால செயலுக்கு அவ்வப்போது நாம் நம் சக்தியை உபயோகித்துக் கொண்டே இருக்க வேண்டும். குறுகிய கால செயல்களைச் செய்யும்போது ஏற்படும் பயத்தை அவ்வப்போது போக்கினால் நம்முடைய பெரிய கனவை நிறைவேற்ற எந்தவித பயமும் நமக்கு ஏற்படாது.
மேற்கண்ட ஐந்து உலகின் மிகப்பெரிய மேதைகளின் கூற்றுக்களை வாழ்க்கையில் பின்பற்றும் ஒவ்வொருவரும் அவர்களைப் போல உலக அளவில் மதிக்கத்தக்க நபராக மாறும் வாய்ப்பு உள்ளது.

கருத்துரையிடுக Disqus

 
Top