மின்சாரம் பாயும் பொம்மை போன்று நமக்கு அறிமுகமானவை தான் ரோபோக்கள்.
ஆனால் இன்று அவை மனித இனத்தை அழிக்குமளவு வல்லமை பெற்று எந்திரன் சிட்டி
பாணியில் வில்லன்களாக உருவெடுத்துள்ளன.
நமக்கு நாமே வில்லன் என்பதை உறுதி செய்யும் வகையில் உலகெங்கிலும் இருக்கும் பல்வேறு ஆராய்ச்சியாளர்கள் உருவாக்கிய ரோபோக்கள் திறன் பெற்றுள்ளன. அந்த வகையில் உலகின் தலைசிறந்த அபாயகரமான ரோபோக்களை ஸ்லைடர்களில் பாருங்கள்..
மார்டைன் ராத்பிலாட் என்பவர் உருவாக்கிய இந்த ரோபோ 2010 ஆம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டதாகும். தன் மனைவியைத் தழுவி வடிவமைக்கப்பட்ட பினா48 செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தினை விளக்கும் தலைசிறந்த எடுத்துக்காட்டாக விளங்குகின்றது. பயனர்களுடன் சரளமாக உரையாடுவதோடு இண்டர்நெட் பயன்படுத்தும் திறனும் பெற்றுள்ளது.
பினா48 (Bina48)
ஐக்கிய
ராஜ்ஜியத்தைச் சேர்ந்த ஜேம்ஸ் ஆகெர் என்பவர் உருவாக்கிய இந்த ரோபோ கொசு
போன்றிருக்கும் பூச்சுகளை அழிக்கும் நோக்கில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த
ரோபோ தான் பிடிக்கும் உயிரினங்களின் சதையை கொண்டு சக்தியூட்டிக் கொள்ளும்.
ஒரு வேலை மனிதர்களைத் தவறாக பூச்சியாகக் கருதினால் மரணம் நிச்சயம்.
ரோபோஃபிளை கேட்சர் (RoboFly Catcher)
பிரென்ச்
நாட்டைச் சேர்ந்த கலை நிறுவனம் சார்பில் வடிவமைக்கப்பட்ட ஸ்பைடர் ரோபோட்
40 அடி உயரம் மற்றும் 37 டன் எடை கொண்டதாகும். லிவர்பூல் நகரத்தின்
கலைத்திறமையை வெளிப்படுத்தும் விதமாக வடிவமைக்கப்பட்ட ஸ்பைடர் ரோபோட் பொது
இடத்தில் நிறுவப்பட்டது. பஞ்ச பூதங்களை கொண்டு பொது மக்களை அச்சுறுத்திய
ஸ்பைடர் ரோபோட் பல்வேறு குற்றச்சாட்டு எழுந்ததைத் தொடர்ந்து நிறுவப்பட்ட
சில வாரங்களில் எடுக்கப்பட்டு விட்டது.
லா மெஷின் ஸ்பைடர் ரோபோட் (La Machine spider robots)
மனநலம்
குன்றிய குழந்தைகளுக்குப் பாடம் கற்பிக்கும் திறன் கொண்டிருக்கும் என்ஏஒ
ரோபோட் செயலிகளை இயக்குவது, வாய்ஸ் கமாண்ட் மூலம் கேள்விகளுக்கு பதில்
அளிப்பது, நடனம் போன்ற திறன் கொண்டிருந்தது. இந்த ரோபோட் கொண்டிருக்கும்
திறன்கள் பின்னாளில் மனித ஆசிரியர்களுக்கு மாற்றாக வந்திடுமோ என்ற அச்சம்
எழுகின்றது.
என்ஏஒ (NAO)
நியூ யார்க் நகரைச் சேர்ந்த ஜார்டன் வொல்ஃப்சன் தயாரித்த இந்த ரோபோ பெயரிடப்படாத நடனம் ஆடும் திறன் கொண்டதாகும்.இதன் முகம் பார்ப்பவர்களை அச்சத்தில் ஆழ்த்துவதோடு நடனம் ஆடும் போது முக பாவனைகளை துல்லியமாக வழங்கும்.
அனிமாட்ரோனிக் ( Animatronic)
மனிதர்களைப்
போல் இயங்கும் இந்த ரோபோ படிகளில் ஏறுவது, இறங்குவது மட்டுமின்றி ஓடும்
திறன் கொண்ட முதல் ரோபோவும் இது தான் என்பதும் குறிப்பிடத்தக்கது.
ஏஎஸ்ஐஎம்ஒ (ASIMO)
4
அடி உயரம் கொண்ட இந்த ரோபோ இரண்டு வயதுக் குழந்தை போன்றதாகும்.
குழந்தைகளைப் போன்ற குரல் கொண்டிருக்கும் சிபி2 முழுவதும் குழந்தையை போல்
உங்களைப் பின் தொடர்ந்து கேள்விகளை கேட்கும்.
சிபி2 (CB2)
ஆபத்துக்
காலங்களில் பொது இடத்தில் மரணித்தவர்களின் உடல்களை அப்புறப்படுத்தும்
நோக்கில் இந்த ரோபோ வடிவமைக்கப்பட்டுள்ளது. இதில் அச்சம் கொள்ள வேண்டிய
விடயம் ஒரு வேலை மயக்கத்தில் இருந்தாலும் உங்களை இந்த ரோபோ விழுங்கி
விடும்.
ரோபோகியூ (Robokiyu)
இயற்கை
பேரழிவுகளின் போது மக்களைக் காப்பாற்றும் நோக்கில் ஜப்பான் நாட்டில்
வடிவமைக்கப்பட்ட ரோபோ இது. டி52 சிக்கலான இடங்களில் அதிக எடை கொண்டவற்றை
அப்புறப்படுத்தி வழியமைக்கும்.
டி52 என்ரியு (T52 Enryu)
50
அடி நீளம் கொண்ட இந்த ரோபோ போ என்ற மிகப்பெரிய பாம்பின் நினைவாக
வடிவமைக்கப்பட்டதாகும். ரோபோ சண்டைகளில் பயன்படுத்தும் நோக்கில் இது
வடிவமைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
டைட்டனோபோ (Titanoboa)
நமக்கு நாமே வில்லன் என்பதை உறுதி செய்யும் வகையில் உலகெங்கிலும் இருக்கும் பல்வேறு ஆராய்ச்சியாளர்கள் உருவாக்கிய ரோபோக்கள் திறன் பெற்றுள்ளன. அந்த வகையில் உலகின் தலைசிறந்த அபாயகரமான ரோபோக்களை ஸ்லைடர்களில் பாருங்கள்..
மார்டைன் ராத்பிலாட் என்பவர் உருவாக்கிய இந்த ரோபோ 2010 ஆம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டதாகும். தன் மனைவியைத் தழுவி வடிவமைக்கப்பட்ட பினா48 செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தினை விளக்கும் தலைசிறந்த எடுத்துக்காட்டாக விளங்குகின்றது. பயனர்களுடன் சரளமாக உரையாடுவதோடு இண்டர்நெட் பயன்படுத்தும் திறனும் பெற்றுள்ளது.
பினா48 (Bina48)
ரோபோஃபிளை கேட்சர் (RoboFly Catcher)
லா மெஷின் ஸ்பைடர் ரோபோட் (La Machine spider robots)
என்ஏஒ (NAO)
அனிமாட்ரோனிக் ( Animatronic)
ஏஎஸ்ஐஎம்ஒ (ASIMO)
சிபி2 (CB2)
ரோபோகியூ (Robokiyu)
டி52 என்ரியு (T52 Enryu)
டைட்டனோபோ (Titanoboa)
கருத்துரையிடுக Facebook Disqus