0

வீட்டுக் கடன் வாங்கும்பொழுது மிதவை வட்டி அல்லது நிலையான வட்டி என்று இரண்டு விதமாக வாங்கலாம்.

நிலையான வட்டி என்பது பெயருக்கேற்றார் போல் வீட்டுக் கடன் செலுத்தக் கூடிய மொத்த காலம் வரை மாறாது. இதனை ஒரு எடுத்துக்காட்டுடன் பார்ப்போம்.

இப்பொழுது ஒரு தனி நபர் நிலையான வீட்டுக் கடனில் 10 சதவீத வட்டி விகிதத்தில் பணத்தை கடனாகப் பெறும்போது அவரது மாதாந்திர தவனை ரூ. 10,500 என்றால் அவரது கடன் காலம் முடியும் வரை ரூ.10,500 கட்ட வேண்டும்.


மறுபுறம் வீட்டுக் கடன் மீதான மாறும் வட்டி விதமானது ஒரே கொள்கையில் செயல்படாது. வங்கியின் சந்தை மதிப்பைப் பொறுத்து இதன் தவணையின் வட்டி வீதம் மேலும் கீழுமாக மாறிக்கொண்டே இருக்கும். பிரதான கடன் வீதம் உயரும் போது தவனை மேலும் மேலே போகலாம்.

ஆனால், மேலும் அல்லது கீழும் மாறும் வட்டி விகிதத்தை எது நிர்னயிக்கும்
இந்திய ரிசர்வ் வங்கியின் கடன் கொள்கை இருபுறமும் நகரும் வட்டி வீதத்தை நகர்த்தும் முக்கிய காரணியாகும்.

பணவீக்கம் உயர்வதாக இந்திய ரிசர்வ் வங்கி எண்னும் போது ரெப்போ விகிதத்தை உயர்த்தும். ரெப்போ விகதம் என்பதே ஆர்பிஐ வங்கிகளுக்குக் கொடுக்கும் வட்டி விகிதமாகும். இது விகிதத்தை உயர்த்தும் போது, வங்கிக்கான பணத் தேவை அதிகரிக்கும் எனவே வட்டி விகிதம் உயரும்.
பல முறை இது நடக்கும் ஆனால் எப்போதுமே அல்ல. மற்றொரு புறம் இந்திய ரிசர்வ் வங்கி பணவீக்கம் குறைவதாக எண்னும் போது பொருளாதாரத்தை உயர்த்துவதற்காக வட்டி விகிதத்தைக் குறைக்கும். இதுவே உங்கள் வீட்டுக் கடன் வட்டி விகிதம் குறையும் நேரமாகும்.

மாறும் வீட்டுக் கடன் விகிதத்தினால், இது மட்டுமே தான் வீட்டுக் கடன் தவணையை குறைக்கும் என்பது இல்லை என்பதை மீண்டும் ஒரு முறை உங்களுக்கு நினைவுபடுத்துகிறோம். ஆர்பிஐ-ன் ரெப்போ விகிதத்தைப் பொறுத்து வங்கிகள் வட்டி விகிதத்தை மாற்றாமலும் இருக்கலாம்.
அதுபோலவே வட்டி விகிதத்தை முடிவு செய்யும் முன் வங்கிகள் அதன் சொந்த பொருத்தமில்லா சொத்துக் கடன் பொறுப்பை ஆராய்வது மற்றொரு முக்கிய அம்சமாகும்.

மேலும், வட்டி விகிதத்தை மாற்றும் முன் இன்னும் பிற காரணங்கள் உள்ளன. எடுத்துக்காட்டாக, 150 ரெப்போ புள்ளிகளை ஆர்பிஐ குறைத்திருந்தாலும் கடந்த பல காலாண்டுகளில், வங்கிகள் அதே போன்று வட்டியைக் குறைக்காமல் இருக்கின்றன. இது ஏன் என்றால் செயல்படா சொத்துக்களுடன் சேர்க்காமல் இருப்பது அவர்கள் முடிவின் மீது எடையை உயர்த்தக்கூடும்.
எனவே, இது எப்போதும் ரெப்போ விகிதம் மட்டும் அல்ல, உங்கள் வீட்டின் கடன் தவனை மற்றும் இந்தியாவின் மாறும் வீட்டு கடன் வட்டி விகிதத்தின் ஒரே காரணமாக இருக்கலாம்.

கருத்துரையிடுக Disqus

 
Top