0


இந்தியாவில் விற்பனையாகும் பெரும்பான்மையான கார்கள் மேனுவல் கியர்பாக்ஸ் கொண்ட கார்களே. ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் கார்களைவிட விலை குறைவு என்பதுடன், காரை நாமே ஓட்டுகிறோம் என்ற உணர்வையும், திருப்தியையும் தருவதும் மேனுவல் கியர்பாக்ஸ் கார்கள் மீது இயற்கையாகவே ஆர்வம் இருக்கிறது.


இந்தநிலையில், மேனுவல் கியர்பாக்ஸ் பயன்படுத்தும்போது ஓட்டுனர்கள் செய்யும் சில தவறான செயல்கள், அந்த கார்களின் டிரான்ஸ்மிஷன் அமைப்பை வெகுவாக பாதிப்படையச் செய்வதோடு, பாக்கெட்டையும் பழுக்க வைத்துவிடும்.

மேனுவல் கியர்பாக்ஸ் கார்களை ஓட்டும்போது மனதில் கொள்ள வேண்டிய சில எளிய விஷயங்களை இந்த செய்தித் தொகுப்பில் காணலாம்.


தேவையான போது மட்டும்...மேனுவல் கியர்பாக்ஸ் கார்களை ஓட்டும் பலரும், ஒரு கையை ஸ்டீயரிங் வீலிலும், ஒரு கையை கியர் லிவரிலும் வைத்து ஓட்டுவதை வழக்கமாக கொண்டிருக்கின்றனர். இது இரு விதமான பிரச்னைகளுக்கு வழிவகுக்கும்.

ஸ்டீயரிங் கட்டுப்பாடுஒரு கையால் மட்டுமே ஸ்டீயரிங் வீலை பிடித்து ஓட்டுவதால் அவசர சமயத்தில் காரை கட்டுப்படுத்துவது சிரமம். இரண்டாவதாக, கியர் லிவரில் கைவத்திருக்கும்போது நம்மை அறியாமல் தரும் அழுத்தமானது கியர் லிவருடன் இணைக்கப்பட்டிருக்கும் பேரிங்குகளை பாதிக்கச் செய்யும். கியரை மாற்றிய உடனே ஸ்டீயரிங் வீலுக்கு கைகள் போய்விடுவதுதான் நல்லது.

க்ளட்ச் பிரச்னைசில ஓட்டுனர்கள் கிளட்ச்சில் எந்த நேரமும் காலை வைத்துக் கொண்டு ஓட்டுவதும் வழக்கமாக கொண்டுள்ளனர். இதுவும் தவறான செயலாகவே கூற முடியும்.

கிளட்சிற்கு பளுகியர் மாற்றம் மற்றும் பிரேக் பிடிக்கும்போது தவிர்த்து கிளட்ச்சிற்கு வேலை இல்லாத சமயத்தில் காலை டெட் பெடலிலோ அல்லது கீழே வைத்துக் கொள்வது நல்லது. நம்மை அறியாமல் தரப்படும் தேவையில்லாத அழுத்தம் காரணமாக கொஞ்சம் கொஞ்சமாக கிளட்ச் பாகங்களில் தேய்மானமும், பாதிப்புகளும் ஏற்படும்.

நியூட்ரல் கியர்சரிவான சாலைகளில் இறங்கும்போது நியூட்ரலில் வைத்து இறக்குவது மாபெரும் தவறான செயல். நியூட்ரலில் இறங்கும்போது கார் கட்டுப்பாட்டு இழந்தால் கட்டுப்படுத்துவது கடினம். எனவே, எப்போதுமே காரை கியரில் வைத்தே இறக்கவும். இதனால் மற்றொரு அனுகூலமும் உள்ளது.

அனுகூலம்கார் கியரில் வைத்து இறக்கும்போது சடன் பிரேக் அடித்து கட்டுப்படுத்த முடியும். அவ்வாறு இல்லாவிடினும், கியரில் இருந்தால் எஞ்சின் பிரேக்கிங் மூலமாகவும் நிறுத்தவும் முடியும். நியூட்ரலில் இருந்தால் இது இரண்டும் முடியாது.

ஹேண்ட்பிரேக் பயன்மலைச் சாலைகளில் மேலே ஏறும்போது காரை நிறுத்தி எடுக்கும்போது கார் பின்னால் உருளும். அதுபோன்ற சமயங்களில் ஹேண்ட்பிரேக்கை போட்டு விடவும். முதல் கியரில் வைத்து ஆக்சிலரேட்டரை சற்றே கூடுதலாக கொடுத்து கிளட்ச்சை பைட்டிங் பாயிண்ட் எனப்படும் நகரும் நிலைக்கு வரும்போது ஹேண்ட்பிரேக்கை ரிலீஸ் செய்யவும்.

கவனிக்க..அனுபவம் வாய்ந்தவர்கள் ஆக்சிலரேட்டரை கூடுதலாக வைத்து கிளட்ச்சிலேயே வைத்து சாமர்த்தியாக மலைச்சாலைகளில் ஏற்றுவது இயல்புதான். ஆனால், நாம் இங்கு சொல்வது நிறுத்தி எடுக்கும்போது ஹேண்ட்பிரேக் யுக்தியை பயன்படுத்தவும். இல்லையெனில், கிளட்ச்சிற்கு அதிக பளூ ஏற்பட்டு கிளட்ச் லைனிங் சீக்கிரமே தேய்ந்து ஆயுள் குறைந்துபோகும்.

கியர் மாற்றம்சரியான கியரில் வைத்து காரை ஓட்டுவதற்கு பழகிக் கொள்ளுங்கள். மேலும், டாக்கோமீட்டரில் எஞ்சின் சுழல் வேகத்தை கணித்துக் கொண்டு அதற்கு ஏற்ப சீராக கியர் மாற்றுவதையும் வழக்கமாக்கிக் கொள்ளுங்கள். இந்த எளிய விஷயங்களை கடைபிடித்தால், உங்களது காரின் ஆயுளை நிச்சயம் நீடிக்கும்.

வழவழ...காரை இயக்கிக் கொண்டிருக்கும்போது உடன் வருபவர்களுடனான பேச்சு சுவாரஸ்யமாகி, சமயத்தில் கியரை மாற்றி போட்டுவிடுகின்றனர். இது காரின் டிரான்ஸ்மிஷன், எஞ்சினுக்கு நிலநடுக்கம் போன்ற உணர்வை கொடுத்து பாகங்களை சேதமாக்கும். எனவே, காரை இயக்கும்போது பேச்சு ஒருபக்கம் இருந்தாலும் கவனமாக இருக்க வேண்டியது அவசியம்.

எப்போது, எப்படி காரில் கியர் மாற்ற வேண்டும்? - வழிகாட்டு முறைகள்

வேகத்தடைகுறைவான வேகத்தில் செல்லும்போது டாப் கியரில் இயக்குவதும், வேகத்தடையில் ஏறி இறங்கும்போது 3 அல்லது டாப் கியரில் இயக்குவதும் கூட தவறான செயல்கள்தான். பாரத்திற்கு தக்கவாறு இரண்டாவது கியர் அல்லது முதல் கியரில் இயக்குவது சாலச்சிறந்தது.

There is always an ongoing debate about what kind of transmission or gearbox is better to drive Manual or Automatic. Many would opt for a manual gearbox because they feel they are more attached to the car.
So if you are one of them, here are 5 things that you should never do while driving a car with a manual gearbox.

1. Keep your hand on the wheel
Many have this habit of holding the steering wheel in one hand and holding the gear lever/ shifter with the other. You hand could only be there resting, but risk of damaging your gearbox is high, since the smallest pressure could damage the the gears.
Also, holding the steering wheel at the 9 o'clock and 3 o'clock position will give you more control of the vehicle. 
  2. Keep your left foot on the dead pedal or away from the clutch
Many have this habit of keeping their left foot on the clutch while driving never do that. Doing so is wearing away your clutch, which will need replacement sooner than expected. Also, in a situation where you need to brake immediately, your subconscious mind will tend to push in the clutch lever before the break lever, which can cause an accident.

3. There is something called a handbrake use it!
This is seen frequently in hilly areas. When the vehicle is at an incline, drivers tend to keep the clutch pedal half depressed, at the 'biting point' and use the throttle at the same time to hold the vehicle. That is a perfect way to ruin your clutch; instead, use the handbrake.

4. Always leave the vehicle in gear
There are situations when drivers think switching to neutral while going downslope is cool, or it helps save gas - wrong! The vehicle is free rolling without the help of the engine to keep it under control. Also, your brakes will overheat and before you know it, you're off the road and have stared disaster directly in the eyes. Leaving the vehicle in a lower gear while descending a hill will give you more control.

5. Keep an eye out on the RPM
Manuals give the driver full control of the engine and power band. There are no electronics that will interfere with performance, which also means that the driver has to keep an eye on the rpm meter, or the tachometer. Shifting at high rpms is good when the car is being driven with enthusiasm, but if you over-rev, you have high chances of blowing your engine. Keep an eye out and change at the right revs.

கருத்துரையிடுக Disqus

 
Top