0
 
தொழிநுட்பம் வளர்ந்து கொண்டே செல்லும் இந்த கால கட்டத்தில் அனைத்துமே கணனி யூகமாக்கப்பட்டு தொழிநுட்பத்துடன் மனிதன் பின்னிப்பிணைந்து விட்டதை யாராலும் தவிர்க்க முடியாது. இன்று சமூகத்தில் காணப்படும் எந்த துறையை எடுத்தாலும் தொழிநுட்பத்தை பங்கு இமாலயமாக காணப்படுகின்றமை நான் கண்கூடாக பார்ப்போகும் விடயமாகி விட்டது. இது நாம் அன்றாடம் பயன்படுத்தும் ஸ்மார்ட் போன் முதல் எம்முடைய வேலையை இலகுபடுத்த உதவும் அனைத்து விடயங்களுக்கும் பொருந்தும்.

ஆகவே இன்றைய பதிவிலே தொழிநுட்பத்துடன் சம்மந்தப்பட்ட க்ளோவுட் கம்பியூட்டிங் என்றால் என்ன என்பது பற்றி பார்ப்போம்.


க்ளோவுட் கம்பியூட்டிங் என்றால் என்ன?

நாம் உதாரணமாக எம்முடைய போனை எடுத்துக்கொள்வோம். எமது போனில் நாம் எமது தனிப்பட்ட போட்டோ வீடியோக்கள் அல்லது வேறு ஏதேனும் முக்கியமான பைல்-களை போன் மெமரியில் சேமித்து வைத்து இருப்போம். ஆனால் அந்த அனைத்து பைல்-களையும் எமது போன் எமது கையில் இருந்தால் மட்டுமே பார்க்க முடியும். அப்படியெல்லாம் நாம் எமது போனை வீட்டில் வைத்து விட்டு வந்தாலோ அல்லது எமது போன் தொலைந்து போனாலோ குறித்த போனில் இருக்கும் பைல்-களை பார்க்க முடியாது.

ஆனால் க்ளோவுட் கம்ப்யூட்டிங் முறை மூலம் எமது போனில் நாம் சேமித்து வைத்து இருக்கும் பைல்-களை உலகின் எந்த மூலையில் இருந்தும் இணையத்தை பயன்படுத்தி பார்வையிட முடியும்.

அதாவது எமது குறித்த பைல்-கள் அனைத்தையும் க்ளோவுட் கம்ப்யூட்டிங் வசதியை தரும் சேவை ஒன்றில் அப்லோட் செய்து வைப்பதன் மூலம் எம்மால் குறித்த பைல்-களை உலகின் எந்த மூலையில் இருந்தும் இன்டர்நெட் இணைப்பு ஒரு இருக்கும் பட்சத்தில் பார்வையிட முடியும்.

இதட்கு மிகச்சிறந்த உதாரணமாக எமது ஜீமெயில் கணக்கு இலவசமாக வழங்கும் கூகுள் ட்ரைவ்-ஐ குறிப்பிடலாம்.
க்லவுட் கம்ப்யூட்டிங் பயன்படும் சந்தர்ப்பங்கள் எவை?

இன்று எமது சூழலில் காணப்படும் பெரும்பாலான நிறுவனங்கள் தமது அனைத்து பியாபார கணக்கு வழக்குகளையும் பெரும்பாலும் க்ளோவுட் கம்ப்யூட்டிங் முறை மூலம் தான் கட்டுப்படுத்திக்கொண்டு இருக்கின்றன. இதட்கு மிக முக்கிய காரணம், இந்த முறை மூலம் தமது நிறுவனத்தின் கிளைகள் இருக்குமேயானால் அவைகளை இலகுவாக இணைத்துக்கொள்ள முடியும் என்பதும் அதே போல் மிகவும் பாதுகாப்பானது என்பதுமாகும்.

சிறந்த க்ளோவுட் கம்ப்யூட்டிங் சேவையை வழங்கும் நிறுவனங்கள் எவை?

தற்போது க்ளோவுட் கம்ப்யூட்டிங் சேவையை பல்வேறு நிறுவனங்கள் வழங்கி வருகின்றன. ஆனால் இவற்றிலே குறிப்பிட்டு காட்டும்படியாக உள்ள சில நம்பகத்தன்மை வாய்த்த நிறுவனங்களை கீலே பரிந்துரைத்துள்ளேன்.

Microsoft Azure
Amazon Web Services
Google Cloud Platform

மேலே குறிப்பிட்ட நம்பகத்தன்மையான க்ளோவுட் கம்ப்யூட்டிங் சேவைகள் தவிர மேலும் பல தனியார் நிறுவனங்கள் க்ளோவுட் கம்ப்யூட்டிங் சேவையை வழங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

கருத்துரையிடுக Disqus

 
Top