0
நாம் கஷ்டப்பட்டுச் சம்பாதித்த பணத்தை நல்ல முறையில், நல்ல துறையில் முதலீடு செய்தால்தான் பாதுகாப்பாகவும் இருக்கும், நமக்கு ஒவ்வொரு வருடமும் ஒரு குறிப்பிட்ட சதவீதம் வருமானம் தரும் வகையிலும் இருக்கும்.
எப்போதும் முதலீடு செய்யும் போது விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். அதிக வட்டி தருவதாகக் கூறும் போலி நிறுவனங்களில் முதலீடு செய்து முதலீட்டை இழக்கும் நிலை ஏற்படக் கூடாது.

ஒவ்வொரு முதலீட்டிலும் ஒவ்வொரு வகையான வட்டி விகிதங்கள் வகுக்கப்பட்டிருக்கும். அதற்குப் பல்வேறு காரணங்களும் இருக்கும் நிலையில் எந்தெந்த வகையில் முதலீடு செய்ய வேண்டும், பாதுகாப்பான முதலீடுகள் எவை எவை என்பதை நாம் தற்போது பார்ப்போம்.

கீழே குறிப்பிட்டவற்றில் ஒவ்வொன்றிலும் நீங்கள் தலா ஒரு லட்சம் முதலீடு செய்தால் உங்கள் முதலீடு பாதுகாப்பாக இருப்பது மட்டுமின்றி விதவிதமான வட்டி விகிதங்களைப் பெற்று மகிழலாம். சரி சந்தையில் தற்போது இருக்கும் பல்வேறு விதமான முதலீட்டுத் திட்டத்திற்கு எவ்வளவு லாபம் கிடைக்கிறது என்பதைத் தான் நாம் இப்போது பார்க்கப்போகிறோம்.
 

ஒரு வருட வங்கி ஃபிக்சட் டெபாசிட்:

வட்டி விகிதம்: 8%
வருடாந்தர வருமானம்: 8.24%
30.9% வரிப்பிடித்தம் போக உங்களுக்குக் கிடைக்கும் வருட வருமானம் ரூ.5,696 (5.7%)

டெபிட் இன்கம் ஃபண்ட்:

ஹிஸ்டரிக்கல் ரிட்டர்ன்: 9.07%
வருடாந்தர ரிட்டர்ன்: 9.07%
20% வரிப்பிடித்தம் போகக் கிடைக்கும் ரிட்டன்: 8.8% (8,796 ரூபாய்)

ஈக்குடிட்டி ஃபண்ட்: (நீண்டகால முதலீடு)

ஹிஸ்டாரிக்கல் ரிட்டர்ன்ஸ்: 12.7%
வருடாந்திர ரிட்டர்ன்: 12.7%
டாக்ஸ்ஃப்ரீ ரிட்டர்ஸ்: 12.7% (ரூ.12,700)
ஐந்து வருட முதலீட்டில் சராசரி வருமானம் கிடைக்கும். எதிர்காலத்தில் இத்தொகை மாறுபடலாம்.

மேலும் வட்டி வருமானத்திற்கு முதலீட்டுக்கு ஏற்ப வரிச் சலுகையும் உண்டு.

ஈபிஎப்: ( EPF )

வட்டி விகிதம் : 8.8%
வருடாந்திர ரிட்டர்ன்: 8.8%
ரிட்டர்ன்: 8.8% (ரூ.8,800) 80C பெனிபிட்டுக்கு பின்னர் 12.74% கிடைக்கும்

பிபிஎப்: (PPF)

வட்டி விகிதம் : 8.1%
வருடாந்திர ரிட்டர்ன்: 8.1%
ரிட்டர்ன்: 8.1% (ரூ.8,100) 80C பெனிபிட்டுக்கு பின்னர் 11.72% கிடைக்கும்
தற்போது காலாண்டுக்கு ஒருமுறை வட்டி விகிதம் கணக்கிடப்பட்டு வருகிறது. எதிர்காலத்தில் இது மாறவும் வாய்ப்பு உள்ளது.

ELSS ஃபண்ட்ஸ்:

ஹிஸ்டாரிக்கல் ரிட்டர்ன்: 15.8%
வருடாந்திர ரிட்டர்ன்: 15.8%
ரிட்டர்ன்: 15.8% (ரூ. 15,800); 22.87% 80C பெனிபிட்டுக்கு பின்னர்
சராசரியாக 5 வருட முதலீடு நல்லது.
ரிட்டர்யர்டுமண்ட் மற்றும் இன்சூரன்ஸ் குறித்த ஆப்ஷன்கள்


தேசிய ஒய்வூதிய திட்டம் (NPS)

ஹிஸ்டாரிக்கல் ரிட்டர்ன்ஸ்: 11.62%
வருடாந்திர ரிட்டர்ன்: 11.62%
ரிட்டர்ன்: 11.62% (ரூ. 11,620); 16.82% 80C பெனிபிட்டுக்கு பின்னர்
ஐந்து வருட கேட்டகிரியில் சராசரி வருமானம். 50% ஈக்குடிட்டியிலும், 25% கார்ப்பரெட் மற்றும் அரசு நிறுவனங்களிலும் முதலீடு.

யூலிப் (ULIPS)

ஹிஸ்டாரிக்கல் ரிட்டர்ன்ஸ்: 14.92%
வருடாந்திர ரிட்டன்: 14.92%
ரிட்டர்ன்: 14.92% (ரூ. 14,920); 21.59% 80C பெனிபிட்டுக்கு பின்னர்
இதுவொரு 15 வருட பாலிசி. முதல் வருடம் பிரிமியம் அலோகேஷன் கட்டணம் 20% ஆகவும், அதன் பின்னர் ஒவ்வொரு வருடமும் 5% கட்ட வேண்டும். மேலும் அட்மின் கட்டணம் ரூ.500 மற்றும் ரூ.3000 இன்சூரன்ஸூக்காகச் செலவாகும்

எண்டோமெண்ட் திட்டங்கள்: (ENDOWMENT PLANS)

ஹிஸ்டாரிக்கல் ரிட்டர்ன்ஸ்: 3.27%
வருடாந்திர ரிட்டன்: 3.27%
ரிட்டர்ன்: 3.27% (ரூ. 3,270); 4.73% 80C பெனிபிட்டுக்கு பின்னர்
இதுவொரு 15 வருட பாலிசி. 4% வருடாந்திர போனஸ் உண்டு. வருடாந்திர கட்டணமாக ரூ.3000 ஆகும். மேலும் போனஸ் வட்டி விகிதம் எதிர்காலத்தில் 3% ,முதல் 4% வரை குறைய வாய்ப்பு உள்ளது.


கருத்துரையிடுக Disqus

 
Top