0

இந்தியாவில் பெரும்பாலான பெற்றோருக்கு தங்கள் பிள்ளைகளுக்குக் குறிப்பாக கல்லூரி செல்லும் அல்லது படித்து முடித்த மாணவர்களுக்கு க்ரெடிட் கார்டு ஒன்றைத் தருவது என்பது அவர்களைப் பாழும் கிணற்றில் தள்ளுவது போன்றது என்கிற மனோபாவம் உண்டு.

ஆனால் உண்மை என்னவென்றால் அது அதற்கு நேர் மாறான விஷயம் என்பதோடு மட்டுமல்லாமல் இளைய தலைமுறையினருக்கு தங்கள் கிரெடிட் ஸ்கொர் எனப்படும் கடன் மதிப்பீட்டினை வடிவமைத்துக் கொள்ளவும் வழிவகை செய்கிறது. அதுமட்டுமின்றி இது பல சிறப்பு அம்சங்கள் மற்றும் சலுகைகளுடனும் கிடைக்கிறது.



மாணவர்களுக்கான கிரெடிட் கார்டுகள் 18 வயது அல்லது அதற்கு மேற்பட்டவர்களுக்கு மேற்படிப்பு படிக்க ஏதுவாக வழங்கப்படுகிறது.
இதில் வசதியான விஷயம் என்னவென்றால் இதற்குண்டான ஆவணங்கள் மற்றும் வழிமுறைகள் மிகவும் எளிமையானவை. 
 இதற்குத் தேவையானது எல்லாம் உங்களுடைய வயதுச் சான்று, வீட்டு முகவரிச் சான்று மற்றும் படிப்பில் சேர்ந்ததற்கான சான்று (மாணவர் அடையாள அட்டை) ஆகியவை மட்டுமே. பொதுவாக மாணவர் க்ரெடிட் கார்டுகளில் இரு வகைகள் இந்தியா முழுவதும் கிடைக்கின்றன - ஒன்று அட்டமானக் க்ரெடிட் கார்டுகள் (செக்கியூர்ட்) அல்லது நிரந்தர வைப்பிற்கு பிணையாகத் தரப்படுவது. மற்றொன்று ஆட் ஆன் எனப்படும் இணைப்புக் க்ரெடிட் கார்டுகள்.
இந்த வகைக் கார்டுகள் வங்கியில் வைக்கப்பட்டிருக்கும் நிரந்தர வைப்புகள் மூலம் ஒரு மாணவர் பெறக்கூடிய கடன் அளவை அடிப்படையாகக் கொண்டவை.

இதன் சாதகமான அம்சம் என்னவென்றால் கடனானது வைக்கப்பட்டிருக்கும் நிரந்தர வைப்பின் மதிப்பில் 70 முதல் 85 சதவிகித அளவிற்கு மட்டுமே பெற முடியும். எனவே மற்ற க்ரெடிட் கார்டுகளை ஒப்பிடும்போது கடன் எல்லை மீறிப் போவதற்கு வாய்ப்புகள் குறைவு.

இந்த வகைக் கார்டுகள் மாணவர்களுக்கு ஒரு ஆரோக்கியமான கிரெடிட் ஸ்கொர் எனப்படும் கடன் மதிப்பீட்டினை வளர்த்துக்கொள்ளவும் உதவியாக உள்ளத்துடன் சிபில் புள்ளிகளை திறம்பட நிர்வகிக்கவும் வழிவகை செய்கிறது.

இந்த வகைக் கார்டுகள் குறைந்த சேர்க்கை கட்டணம், குறைந்த ஆண்டுக் கட்டணம் ஆகிய அம்சங்களை உள்ளடக்கியதுடன் எரிபொருள் வரிச் சலுகை, அங்காடிகளில் கேஷ் பாக் வசதி, இணையப் பரிவர்த்தனைகள் மூலம் கிடைக்கும் புள்ளிகள் மற்றும் கார்டு சொந்தக்காரரின் பிறந்த மாதத்தில் செய்யப்படும் செலவுகளுக்குக் கூடுதல் பரிசுப்புள்ளிகள் என அதிரடி சலுகைகளையும் கொண்டவை.

மிகக் குறைந்த அளவான 5000 ரூபாய் வாய்ப்பிற்கு இணையாக இந்த கார்டுகளை ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா வழங்குவதுடன் ஐசிஐசிஐ வங்கி, ஹெச்டிஎப்சி வாங்கி மற்றும் ஆக்சிஸ் வாங்கி ஆகியவையும் வாய்ப்புகளுக்கு இணையான கார்டுகளை மாணவர்களுக்கு வழங்குகிறது.

மாணவர்களுக்கு அளிக்கக்கூடிய மற்றுமொரு வகையான க்ரெடிட் கார்டுகள் இந்த ஆட் ஆன் கார்டுகள். இதில் செய்யப்படும் செலவுகளுக்குண்டான பணத்தைச் செலுத்தும் பொறுப்பு முதல் நிலை கார்டு சொந்தக்காரருக்கு அதாவது பெரும்பாலும் பெற்றோருக்கு உரியது.

எனினும் பெற்றோர் அல்லது காப்பாளர் கடன் வரம்பை நிர்ணயிக்கவும் செலவுகளை கண்காணிக்கவும் முடியும் என்றாலும் கூட நீங்கள் ஒரு மாணவராக இருந்து இது போன்ற கார்டுகள் உங்கள் பெற்றோரால் உங்களுக்குத் தரப்பட்டிருந்தால் அதை நல்ல விதமாகக் கையாண்டு கடன் மதிப்பீட்டை உயர்த்துவது அவசியம்.

உங்களுக்குத் தரப்பட்ட கடன் வரம்பில் 30 சதவிகிதத்திற்கு மிகாமல் பார்த்துக் கொள்வதுடன் உங்களுடைய நிலுவைகளை நீங்களே செலுத்தும் பழக்கத்தையும் வைத்துக் கொள்ளுங்கள். இதன் மூலம் நீங்கள் பொறுப்புடன் நடந்துகொண்டு உங்கள் கடனை நன்கு நிர்வகிக்க முடியும் என்று உங்கள் பெற்றோருக்கு காட்ட முடியும்.

கடன் உபயோகமானது நன்கு பிரபலமடைந்து விட்ட இந்தக் காலகட்டத்தில் நவீன தலைமுறையினர் இது போன்ற கார்டுகளை பற்றி நன்கு அறிந்திருப்பதோடு உபயோகப்படுத்தவும் செய்கின்றனர்.

இவர்களின் தேவையறிந்து வங்கிகள் அவர்களை இளவயதிலேயே தங்களுடைய குறிப்பிட்ட சேவைகளைக் கொண்ட கார்டுகள் மற்றும் சலுகைத் திட்டங்கள் மூலம் ஊக்குவிக்கின்றன. எனினும் மாணவர்கள் சலுகைகளில் மயங்கி விடாமல் கவனமுடன் இருக்க வேண்டியது அவசியம். இருப்பினும் உங்களுடைய தேவையை நன்கு புரிந்து கொண்டு அதைப் பொறுப்புடன் கையாள முடியும் எனும்போது மட்டுமே நீங்கள் ஒரு மாணவர் க்ரெடிட் கார்டினை வாங்குவது சிறந்ததாக அமையும்.

கருத்துரையிடுக Disqus

 
Top