0

அவசர பணத் தேவையின் போது நீங்கள் சேமித்து வரும் நிரந்தர வைப்பு நிதி அல்லது பிற முதலீட்டுத் திட்டங்களில் இருந்து பாதியில் நிறுத்திவிட்டு பணம் எடுக்கும் சூழலா இதற்காகவே வங்கிகள் பல ஒவர் டிராஃப்ட் சேவை அளிக்கின்றது.

இப்படிப் பட்ட சூழல்களில் சொத்து, நிரந்தர வைப்பு நிதி, மியூச்சுவல் ஃபண்டுகள், இன்சூரன்ஸ் போன்றவற்றின் மேல் பல வங்கிகள் ஒவர் டிராஃப்ட் முறையில் கடன் அளிக்கின்றன.


இதில் சில வங்கிகள் சம்பள கணக்குகளின் மீதும் ஓவர் டிராப்ட் சேவையை அளிக்கின்றன. இதன் மூலம் கணக்கு வைத்துள்ளவர்கள் வங்கி கணக்கில் நிர்வகித்ததை விட அதிக பணத்தை கூட பெற இயலும்.

ஒவர் டிராப்ட் முறையைப் பயன்படுத்தி பணம் பெற கணக்கு வைத்துள்ளவர்கள் வங்கியில் இந்தச் சேவைக்காக தனியாக விண்ணப்பிக்க வேண்டும். சில வங்கிகள் இதற்காக ஒரு முறை கட்டணம் அல்லது செயலாக்க கட்டணம் போன்றவற்றை பெறுகின்றன.

இந்தச் சேவையின் மூலம் கணக்கு வைத்துள்ளவர்கள் கையில் பெறும் சம்பளத்தைப் பெறுவதை பொருத்து கடன் தொகையை வங்கி நிர்னையம் செய்யும். இது அதிகபட்சமாக 2 முதல் மூன்று மாத சம்பளமாக இருக்கலாம்.
உதாரணத்திற்கு எச்டிஎஃப்சி வங்கியில் வாடிக்கையாளர்களின் சுதந்திரத்திற்காக சம்பள கணக்கில் இருந்து செக்குகள், ஏடிஎம், இணையதள வங்கி சேவை போன்றவற்றைப் பயன்படுத்தி பணம் பெறலாம்.

நீங்கள் பெறும் தொகையைப் பொருத்து வட்டி நிர்னைக்கப்படும். வங்கிகள் குறைந்தபட்சம் அதிகபட்சம் என்று என சம்பள ஓவர் டிராப்ட் அளவை வங்கிகள் அளிக்கும். எச்டிஎஃப்சி வங்கி குறைந்தபட்சம் 25,000 ரூபாயில் இருந்து அதிகபட்சம் 1,00,000 வரை அளிக்கிறது.

பணத்தைத் திருப்பி அளிக்கக் கூடிய காலமும் வங்கிகளை பொறுத்தது. எஸ்பிஐ வங்கியில் 6 மாதத்திற்குள் செலுத்தி ஆக வேண்டும்.

நிரந்தர வைப்பு நிதி போன்று பிற திட்டங்கள் பயன்படுத்தி ஓவர்டிராப்ட் முறையில் பணத்தை திருப்பிச் செலுத்தும் காலம் மாறுபடலாம்.

ஆக்சிஸ் வங்கி நிரந்தர வைப்பு நிதியின் மேலே 85 சதவீதம் வரையில் கடனும் திருப்பி செலுத்த வேண்டிய காலமாக அத்திட்டத்தில் முதலீடு செய்துள்ள முதிர்ச்சி காலத்திற்குள் செலுத்த வேண்டும்.

இத்திட்டத்தின் மூலம் கடன் அளித்ததற்கான வட்டியாக ஆக்சிஸ் வங்கி நிரந்தர வைப்புநிதி திட்டத்தின் வட்டி விகிதத்தை விட 2 சதவீதம் அதிகமாக வட்டியைப் பெறும்.

கருத்துரையிடுக Disqus

 
Top