0


சமீபத்தில் பேஸ்புக்கிற்கு சொந்தமான வாட்ஸ்ஆப்பில் கிப் (GIF) அனுப்பும் திறன், வீடியோ அழைப்பு, டூடுல் ஆதரவு, மற்றும் சில வரவிருக்கும் அம்சங்கள் சார்ந்த செய்திகள் வெளியாகின. அப்படியாக, வரவிருக்கும் புது அம்சங்கள் ஒருபக்கம் இருக்க மறுபக்கம் ஏற்கனவே இருக்கும் சில வாட்ஸ்ஆப் அம்சங்கள் நமக்கு சில வகையான இடையூறுகளையும் சிக்கல்களையும் வழங்குகிறது என்பதை பெரும்பாலோனோர்கள் ஏற்றுக்கொள்வார்கள். அவற்றில் ஒன்று தான் 'டைப்பிங்...' ஸ்டேட்டஸ்..!
பெரும்பாலான வாட்ஸ்ஆப் பயனர்களுக்கு இடையூறாக திகழும் வாட்ஸ்ஆப் டைப்பிங் ஸ்டேட்டஸை மறைப்பது எப்படி என்பதை பற்றிய தொகுப்பே இது..!


வழிமுறை #01
டைப்பிங் செய்யும் போது உங்கள் போனை ஏர்பிளேன் மோட்டில் வைக்கலாம்.

நீண்ட பதில் :

இந்த யோசனை வினோதமாக இருப்பதாக நீங்கள் நினைக்கலாம், ஆனால் நீங்கள் இதை நிகழ்த்தும் போது அது பயனுள்ளதாக தெரியும். நீங்கள் பல செய்திகளை அனுப்ப முயல்கிறீர்கள் அல்லது ஒரு நீண்ட பதிலை டைப் செய்கிறீர்கள் என்றால் ஏர்பிளேன் மோடில் உங்கள் தொலைபேசி வைக்கவும் அல்லது உங்கள் மொபைலின் இண்டர்நெட்டை ஆப் செய்து விடவும்.

தவிர்க்க வைக்க முடியும் :

உங்கள் தொலைபேசி ஏர்பிளேன் மோடில் இருக்கும் போது, ஒரு சிறிய கடிகாரம் போன்ற அடையாளம் உங்கள் ஸ்க்ரீனில் காணப்படும், விரைவில் நீங்கள் அதை அணைத்து (ஆஃப்) விடவும், நீங்கள் டைப் செய்த செய்திகள் அனுப்பப்படும். இந்த வழிமுறை கொண்டு நீங்கள் டைப்பிங் செய்வதை பிறர் பார்ப்பதை தவிர்க்க வைக்க முடியும்.

வழிமுறை #02
ஜிபிவாட்ஸ்ஆப் (GBWhatsApp) பயன்பாடு : ஜிபிவாட்ஸ்ஆப் என்றால் என்ன உங்களுக்குள் கேள்வி எழும்பினால் இதோ அதற்கான விடை..!

மறைக்கப்பட்டுள்ள அம்சங்கள் :

ஜிபிவாட்ஸ்ஆப் என்பது ஆண்டராய்டு கருவிகளுக்கான ஒரு வாட்ஸ் ஆப் மாட் (Whatsapp mod) ஆகும் . இதனை கொண்டு வாட்ஸ்ஆப்பில் மறைக்கப்பட்டுள்ள பல அம்சங்களை நீங்கள் வெளிக்கொண்டு வரலாம். ஆகா அதன் ஏபிகே-வை பதிவிறக்கம் செய்து இன்ஸ்டால் செய்யவும் (பின்னர் கீழ்வரும் செயல்முறைகளை நிகழ்த்தவும்)

செயல்முறை#01 :
உங்கள் வாட்ஸ்ஆப் அக்கவுண்ட் சார்ந்த விடயங்கள் சரிபார்த்துக் கொள்ளவும் பின் வாட்ஸ்ஆப் மெனு சென்று மேலுள்ள மூன்று புள்ளிகளை கிளிக் செய்து ப்ரைவஸி-க்குள் நுழையவும்.

செயல்முறை#02 :
பின்னர் அது மற்றொரு பாப்-அவுட் டாப்-க்குள் செல்லும், அங்கு ரைட்டிங் ஸ்டேட்டஸ் என்ற ஆப்ஷனை நீங்கள் காண்பீர்கள், அதை செலெக்ட் செய்யவும்.

செயல்முறை#03 :
பின்னர் அதன் மூலம் ஹைட் பார் காண்டாக்ட்ஸ் மற்றும் ஹைட் பார் க்ரூப்ஸ் என்ற இரண்டு ஆப்ஷன்களை நீங்கள் பெறுவீர்கள். அதில் தேவையானதை நீங்கள் தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம்.

கருத்துரையிடுக Disqus

 
Top