பக்கத்திலிருப்பவர் கைபேசியை நோண்டிக்கொண்டிருக்கும்போது எட்டிப்பார்க்கும் நம் பார்வை நோய்க்கு பெயர்... எட்டியாசிசி...
நொடிக்கொருமுறை யாரும் அழைக்காமலே நம் கைப்பேசியை நாமே எடுத்துப்பார்க்கும் நோய்க்குப்பெயர்.... சும்மாசிசி...
அடுத்தவரின் விலை உயர்ந்த கைபேசியைப்பார்த்து, ஏங்கும் நோய்க்குப் பெயர் ஏங்யோசிசி...
பேசுவதாக பாவனை செய்யும் போக்கிற்கு... நடியாசிசி...
வாட்சாப்பில் வந்த பழைய செய்திகளை மீண்டும் மீண்டும் பார்ப்பது...
வாட்சாசிசி...
கைபேசியில் முகநூலை சம்பந்தமே இல்லாமல் ஓட்டிக்கொண்டே இருப்பது.... ஓட்டியோசிசி....
தவறிய அழைப்பைக் கொடுத்து.... அறுப்போருக்கு உள்ள நோய்...
மிஸ்ஸோசிசி.....
அடுத்தவர் தொலைபேசி தொலைந்துவிட்டது என்று தெரிந்ததும் தன்னுடைய தொலைபேசியைத் தொட்டுப் பார்ப்பது ...தொலையோசிசி....
ஸ்மார்ட் போனை தொடச்சுக்கிட்டே இருந்தா.... தொடையோ சிசி
ஆராய்ச்சி தொடர்கிறது... நோய் தீர்க்க அல்ல... நோய்க்கு பெயர் வைக்க..
கருத்துரையிடுக Facebook Disqus