0


இண்டர்நெட் பயன்பாடு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருக்கின்றது. இணைய வசதி இருந்தால் எல்லாச் சேவைகளையும் உட்கார்ந்த இடத்திலேயே முடித்து விடலாம் என்பதோடு இந்தியாவில் இணை சேவைக்கான கட்டணங்கள் குறைந்து வருவதும் அதிகப்படியான இணையப் பயன்பாட்டிற்கு முக்கிய காரணமாக இருக்கின்றது.

பிராட்பேன்ட் இண்டர்நெட் இணைப்பு மூலம் ஒரே நேரத்தில் பல்வேறு கருவிகளில் இண்டர்நெட் பயன்படுத்த வை-பை ரௌவுட்டர் வாங்க இருக்கின்றீர்களா.?

சந்தையில் கிடைப்பதில் மிகச் சிறந்த ரௌவுட்டர் கருவியை தேர்வு செய்யும் முன் கவனிக்க வேண்டியவை குறித்த சில தகவல்களை இங்குத் தெரிந்து கொள்ளுங்கள்..

சேவை
நீங்கள் பயன்படுத்தும் இணையச் சேவையை பொருத்து இரு வித ரௌவுட்டர்கள் சந்தையில் கிடைக்கின்றது. வீட்டுப் பயன்பாடு என்றால் ADSL வகை ரௌவுட்டர்களை வாங்கலாம். சில இண்டர்நெட் சேவை நிறுவனங்கள் இந்த ரௌவுட்டர்களை வழங்கி விடுகின்றனர். ஒரு கேபிள் நிறுவனங்கள் அல்லது மற்ற வையர்லெஸ் பிராட்பேன்ட் சேவை வழங்குபவர்களின் இணைப்புகளைப் பயன்படுத்தினால் non-ADSL வகை ரௌவுட்டர்களை வாங்கலாம்.

ஆன்டெனா
முடிந்த வரை கூடுதல் ஆன்டெனா இருக்கும் ரௌவுட்டர்களை தேர்வு செய்வது நல்லது. இவ்வகை ரௌவுட்டர்கள் இணைய இணைப்பு வீடு முழுக்க வழங்கும். இதனால் சீரான இணைய வேகம் பெற முடியும்.
டூயல்-பேன்ட்
பொதுவாக அனைத்து வித ரௌவுட்டர்களும் 2.4GHz பேன்ட் மூலம் வேலை செய்யும். இண்டர்நெட் இணைப்பு கோளாறுகளை தவிர்க்க 5GHz பேன்ட் பயன்படுத்தும் ரௌவுட்டர்களை தேர்வு செய்ய வேண்டும். இதனால் தடையற்ற இண்டர்நெட் இணைப்பு கிடைக்கும்.

யுஎஸ்பி போர்ட்
யுஎஸ்பி போர்ட் வசதி கொண்ட ரௌவுட்டர் இருந்தால் பிளாஷ் டிரைவ், ஹார்டு டிஸ்க் அல்லது ப்ரின்டர் போன்றவற்றை இணைக்க முடியும். முடிந்த வரை யுஎஸ்பி வசதி இருக்கும் ரௌவுட்டர்களை கவனமாக தேர்வு செய்வது பல்வேறு இதர பயன்களை வழங்கும்.

பாதுகாப்பு
சந்தையில் வெவ்வேறு பாதுகாப்பு ப்ரோடோகால் கொண்ட வை-பை ரௌவுட்டர்கள் கிடைக்கின்றன. WEp, WPA மற்றும் WPA2 போன்ற ரௌவுட்டர்களில் WPA2 தலைசிறந்ததாக இருக்கின்றது. ஒரு வேலை உங்கள் வீட்டில் குழந்தைகளும் இண்டர்நெட் பயன்படுத்தினால் பேரன்டல் கண்ட்ரோல் வசதி கொண்ட ரௌவுட்டர்களை வாங்குவது சிறந்தது.

வேகம்
ஒவ்வொரு ரௌவுட்டர் கருவியும் 300 Mbps, 900 Mbps அல்லது 1900 Mbps போன்ற வேகங்களை இயக்கும் வசதி கொண்டிருக்கின்றன. வேகமான இணைய வசதி வழங்கும் ரௌவுட்டர்கள் இணடர்நெட் வேகத்தைத் தீர்மானிக்கின்றன என்பதால் உங்களுக்கு பொருத்தமான வேகம் கொண்ட ரௌவுட்டரை தேர்வு செய்யலாம்.

கருத்துரையிடுக Disqus

 
Top