0

தற்போதைய காலத்தில் எதனுடன் வேண்டுமென்றாலும் கூட ஒருமனதாக உடன்பட முடியும், ஆனால் அது நிச்சயமாக மெதுவான இண்டர்நெட் வேகமாக இருக்கவே கூடாது ஏனெனில் அது அனைத்தை விடவும் மிக கடினமான ஒன்றாக விடயமாகும். குறிப்பாக, இரவு நேரத்தில் நாம் ஒரு டிவி ஷோ ஸ்ட்ரீம் அல்லது ஒரு பிஸியான வேலைநாளுக்கு பின் சில பாடல்களை ஆன்லைனில் கேட்க வேண்டும் என்ற பொழுதுகளில் ஏற்படும் ஸ்லோ இண்டர்நெட் ஆனது நம்மை மிக வேகமாக டென்ஷன் அடைய செய்யும்.

இண்டர்நெட் வேகம் மிக குறைவாக இருக்க பல காரணங்கள் உள்ளன. இணைய சேவை வழங்குநர் (ISP) பக்கத்தில் உள்ள பிரச்சினைகள் இருக்கலாம் அல்லது இண்டர்நெட் வேக குறைவானது உங்களிடம் உள்ள உள்ள சில பிரச்சினைகளாக கூட இருக்கலாம்.

அப்படியாக, இன்டர்நெட் வேக குறைவு ஏற்படுவதற்கான காரணங்களும் அதை தீர்ப்பதற்க்கான வலிகளும் இதோ..!


நெரிசல் (பொதுவான காரணம்) :
நீங்கள் ஒரு பகிர்வு இணைய இணைப்பை கொண்டிருந்தால் நீங்கள் நிச்சயமாக இந்த சிக்கலை எதிர்கொள்ள வேண்டும்.

தப்பிக்க வழி :

பொதுவாக, மக்கள் மாலை அல்லது இரவு நேரங்களில் தங்களுக்கு கிடைக்கும் நேரத்தில் இணையம் செய்ய, அது இணைய வேகம் மெதுவாக இருக்க வழிவகுக்கும், இந்த வகை சிக்கலில் இருந்து தப்பிக்க வழியே இல்லை.

வானிலை மாற்றம் (செயற்கைக்கோள் இணைப்பு) :
நீங்கள் ஒரு கேபிள் இணைப்பிற்கு பதிலாக ஒரு செயற்கைக்கோள் இணைப்பு பயன்படுத்தி இணையம் பெற்றால், நீங்கள் வானிலை மாற்றங்கள் கொண்ட சில பிரச்சினைகளை எதிர்கொள்ளும் வாய்ப்பு அதிகமாக இருக்கிறது.

சமிக்ஞை குறுக்கீடு :



இவ்வகையான ரிசீவர் ஆண்டெனாவில் ஏற்படும் சீதோஷ்ண நிலை மாற்றங்கள் ஆனது சமிக்ஞை குறுக்கீடு அதனை தொடர்ந்து ஏற்படும் குறைவான இணைய வேகத்தினை வழிவகுக்கும்.

ரவுட்டரின் இடத்தை மாற்றவும் :
பெரும்பாலோனோர்கள் ரவுட்டரரின் வைத்துள்ள இடத்திற்கு பெரிய அளவிலான முக்கியத்துவம் கொடுப்பதில்லை. ரவுட்டரை சரியான நிலைகளில் வைப்பதின் மூலம் ஒரு நல்ல அளவிற்கு சமிக்ஞை வலிமையை அதிகரிக்க முடியும்

உயர்ந்த புள்ளி :

எனவே, அதை ரவுட்டர் ஆனது உங்கள் கணினிக்கு மிக நெருக்கமாக அமைந்துள்ளதை உறுதிசெய்யவும். மேலும், ரவுட்டர் சமிக்ஞைகள் மிக எளிமையாக கீழே பயணம் செய்யத் தகுந்தவர்கள் எனவே தரையில் இருந்து ஒரு உயர்ந்த புள்ளியில் ரவுட்டர் வைக்கப்பட வேண்டும்.

ரவுட்டரை அப்டேட் செய்யவும் :
இது நாம் பயன்படுத்தும் சாதனங்களின் எண்ணிக்கையை பொருத்தது. சில நேரங்களில் பல சாதனங்களை ரவுட்டரில் இணைக்கப்படும் போது, அவைகளை அது கையாள முடியாமல் போகலாம்.அதன் திறனுக்கு அப்பாற்பட்ட உயர் இணைய வேகத்தினை ரவுட்டரில் இடமளிக்க முடியாது, எனவே, நீங்களாகவே ஒரு புதிய ரவுட்டரை வாங்கி விடவும்.

ப்ரவுஸர் எக்ஸ்டன்ஸன் :

உங்களின் ப்ரவுஸிங் எக்ஸ்டன்ஷன் அல்லது அட்-ஆன்கள் (add-ons) ஆகியவைகள் கூட உங்கள் ப்ரவுஸிங் வேகத்தினை சிதைக்கும் சாத்தியம் கொண்டது. ஆக தேவையில்லாத எக்ஸ்டன்ஷன்களை டிஸ்ஸேபில் செய்து விட நல்ல இண்டர்நெட் வேகத்தை அனுபவிக்க முடியும்.

கருத்துரையிடுக Disqus

 
Top