0

வாடிக்கையாளர்கள் கருத்து

ஸ்மார்ட்போன்களை ஏழை முதல் பணக்காரர்கள் வரை அனைவரும் இப்போது பயன்படுத்த துவங்கிவிட்டனர். ஆனால் அனைவரும் எப்போதும் இண்டெர்னெட் பேக்குகளை ரீசார்ஜ் செய்வதில்லை.

 பல்லாரியை சேர்ந்த சயித் காதர் பாட்ஷா என்ற 23 வயதை உடை டி கடை உரிமையாளர் தனது வியாபாரத்தை அதிகரிக்க புதிய முயற்சியைச் செய்துள்ளார்.



அதன் மூலம் இவருடைய டீ கடையில் தேநீர் அருந்த வரும் அனைவருக்கும் 5 ரூபாய் விலை உடை ஒரு டீ கப்புடன் 30 நிமிடத்திற்கான இண்டெர்னெட் தரவை இலவசமாக வழங்கி வருகிறார்.
முதலீடு

முதலீடு

இதற்கு இவர் செய்த முதலீடு 3000 ரூபாய் கொடுத்து வாங்கிய ஒரு வைஃபை ரௌவுட்டர் மற்றும் இண்டெர்னெட் இணைப்பிற்காக 1700 ரூபாய்.

சரி, இவர் எப்படி 5 ரூபாய்க்கு ‘டீ மற்றும் இணையதள' சேவையை வழங்குகிறார் என்று இங்குப் பார்ப்போம்.

வேகம்

இத்திட்டத்தை இவர் வழங்குவதற்கான காரணம் மாதத்திற்கு 1000 ரூபாய் தங்களது செலவுக்காக வைத்திருக்கும் மாணவர்கள் தரவு ரீசார்ஜ்களை தவிர்த்து 1 முதல் 2 எம்பிபிஎஸ் வேகத்தில் வரம்பற்ற இண்ட்டெர்னெட் இணைப்பைப் பயன்படுத்தி கொள்ளலாம் என்பதற்காகவும் இதனால் தனது வியாபாரமும் அதிகரிக்கும் என்று சயித் முடிவு செய்துள்ளார்.

வியாபார இலக்கு

செப்டம்பர் மாதம் முதல் இந்த புதிய திட்டத்தைச் செயலுக்கு இவர் கொண்டு வந்ததன் மூலம் ஒரு நாளைக்கு 100 கப்புகள் டி விற்று வந்த இவரின் வியாபாரம் அப்படியே 4 மடங்கு அதிகரித்துள்ளது.

செயல்படுத்தும் முறை

இவரது டீ கடையில் தேநீர் அருந்த வரும் அனைவருக்கும் இந்த கூப்பன் அளிக்கப்படும். கூப்பனில் கொடுக்கப்பட்டுள்ள குறியீட்டை பயன்படுத்தி உள்நுழைந்த உடன் இணையத்தைப் பயன்படுத்த துவங்கலாம், 30 நிமிடத்தில் தானாகவே இணைய இணைப்பு துண்டிக்கப்படும். ஆனால் அந்த கூப்பன் ஒரு நாளைக்கு மட்டுமே.

சமுக பொறுப்பு

சயித் பாட்ஷாவை பொருத்த வரை ஒரே நேரத்தில் 10 முதல் 15 நபர்கள் வரை நல்ல வேகத்தில் இணையதளத்தைப் பயப்படுத்த முடியும் என்று கூறுகிறார். இதன் முக்கிய நோக்கம் மாணவர்கள் இதைப் பயன்படுத்தி பயன் பெற வேண்டும் என்பதும் மேலும் தனது வியாபாரம் அதிகரிக்க வேண்டும் என்பது மட்டுமே ஆகும்.

ஸ்மார்ட்போன்களை ஏழை முதல் பணக்காரர்கள் வரை அனைவரும் இப்போது பயன்படுத்த துவங்கிவிட்டனர். ஆனால் அனைவரும் எப்போதும் இண்டெர்னெட் பேக்குகளை ரீசார்ஜ் செய்து பயன்படுத்துவதும் இல்லை. அவர்கள் இங்கு வந்து டீ குடிக்கும் நேரத்தில் இணைத்தையும் பயன்படுத்தி மகிழலாம் என்கிறார்.

  வாடிக்கையாளர்கள் கருத்து
இவரது கடையின் வாடிக்கையாளரிடம் இது பற்றி கருத்து கேட்ட போது இந்தச் சிறிய நகரத்தில் இணையதள மையங்களும் மிகக் குறைவு. இவர் இங்கு அளிக்கும் இந்த இணையதள சேவையின் மூலம் மின்னஞ்சல், சமுக வலைத் தளங்கள் போன்றவற்றைச் சரிபார்ப்பது எளிதாக உள்ளது சயதின் எண்ணமும் வெற்றிபெற்று உள்ளது என்று கூறுகின்றனர்.

கருத்துரையிடுக Disqus

 
Top