0

இணைய அணுகளுக்காக ஒருடேட்டா கார்ட் அல்லது யூஎஸ்பி டாங்கில் பயன்படுத்தும் பயனாளிகள் எந்த விதமான நெட்வொர்க் குறுக்கீடுகளும் இன்றி உயர்ந்த சமிக்ஞை வலிமையை அனுபவிக்க முடியும். இருப்பினும் சில சமயம் கிராமிய பகுதிகளில் வாழும் அல்லது மிகவும் நெரிசலான பகுதிகளில் உள்ள பெரும்பாலோனோர்கள் உயர் தரவு தொகுப்புகளை பயன்படுத்தும் போதும் குறைந்த இணைய அதிர்வெண் பற்றிய புகார்களை அளிக்கின்றனர்.
அப்படியாக, உங்கள் வீட்டு மற்றும் சமையலறை பொருட்களை பயன்படுத்தி உங்கள் சொந்த டாங்கில் டேட்டா கார்டில் சிக்கனலை அதிகரிப்பது எப்படி என்பதை பற்றிய தொகுப்பே இது..!


தேவையான பொருட்கள் :
உங்கள் சமையலறையில் கிடைக்கப்பெறும் ஒரு உலோக சல்லடை மற்றும் ஒரு அலுமினிய தாள்.

பின்னர் ஒரு சிறிய கேமரா ட்ரைபாட் மற்றும் ஒரு யூஸ்பி நீட்டிப்பு கேபிள். 
சல்லடையின் கீழே துளை :

உங்கள் யூஎஸ்பி நீட்டிப்பு கேபிள் பொருந்தும் வண்ணம் ஒரு கட்டர் மூலம் சல்லடையின் கீழே ஒரு துளையை போடவும். ஆக நீங்கள் புகைப்படத்தில் தோன்றுவது போல டாங்கில் உடன் யூஎஸ்பியை இணைத்துக்கொள்ளலாம்.

ஸ்டான்ட் :
அடுத்து, உங்கள் கணினி அல்லது லேப்டாப்பில் இந்த யூஎஸ்பி நீட்டிப்பு கேபிள் கொண்டு உங்கள் 3ஜி டாங்கிலை இணைக்கவும் மறுபக்கம் உங்களின் மினி கேமரா ட்ரை பாட் ஆனது ஒரு ஸ்டான்ட் போல செயல்படும்.

மினி செயற்கைக்கோள் டிஷ் :

இப்போது, அலுமினிய தாள் கொண்டு சல்லடையை முற்றிலும் அணைத்து பக்கங்களிலும் மூடி மறைக்கவும். இப்போது அது ஒரு மினி செயற்கைக்கோள் டிஷ் ஆண்டெனா போன்று இருக்க வேண்டும்.

நல்ல சமிக்ஞை :
அவ்வளவுதான். ஒரு நல்ல சமிக்ஞை கிடைக்கும் வரை சல்லடை நிலையை நகர்த்துக்கொண்டே இருங்கள். இதை நிகழ்த்த சுமார் 150 ரூபாய் செலவு செய்தால் போதும், இதே முறையை பயனப்டுத்தி 4ஜி, எல்டிஇ டாங்கிள்களின் சிக்னல் வலிமையையும் அதிகரிக்கலாம்.

கருத்துரையிடுக Disqus

 
Top