0

உங்களுடைய ஆர்டரின் இறுதி தொகையானது ரூ.499/-க்குள் இருந்தால் உங்கள் ஆர்டரை நிகழ்த்தி டெலிவரி செய்ய அமேசான் ரூ.40/- டெலிவரி சார்ஜ் ஆக வசூலிக்கப்படும்.

நீங்கள் அந்த கூடுதல் கட்டணத்தை தவிர்க்க ஒரு வழி இருக்கிறது என்றால் கூறினால் நம்புவீர்களா.? முற்றிலுமாக கூடுதல் கட்டணம் இல்லாமல் ஆக்கி விட வழி இல்லை என்கிற போதிலும் நீங்கள் அதை சற்று குறைத்து பணத்தின் சில பகுதியை சேமிக்க முடியும்.

அப்படியாக, நீங்கள் ரூ.499/-க்கு அமேசானில் பொருட்களை வாங்கினாலும் கூடுதல் ஷிப்பிங் கட்டணம் செலுத்தாமல் இருப்பது எப்படி என்பதை பற்றிய தொகுப்பே இது.



ஆர்டர் செய்யவும்
நீங்கள் வாங்க உத்தேசித்துள்ள ஒரு தயாரிப்பை தேர்ந்தெடுக்கவும்.
இந்த தந்திரத்தை பயன்படுத்த வழக்கம் போல் நீங்கள் முதலில் விரும்பும் ஒரு பொருளை ஆர்டர் செய்ய வேண்டும் பின்பு அதை கார்ட்டில் சேர்க்க வேண்டும் முதன் தயாரிப்புகளின் விலை ரூ.499/-க்கு கீழே உள்ளதென்றால் ரூ.40/- கூடுதல் கட்டணமாக செலுத்த வேண்டும் என்று விநியோக சேவை தகவல் அளிக்கும். 
 
அமேசான் புல்பில்டு ப்ராடக்ட்தனை ஆட் செய்யவும் :

அந்த கூடுதல் கட்டணம் தவிர்க்க, ஒரு அமேசான் புல்பில்டு ப்ராடக்ட்தனை (Fulfilled Product) ஆட் செய்யவும். அது உங்களுக்கு தேவையான ஒரு எளிய தற்போதைய நிகழ்வுகள் சார்ந்த புத்தகமாகவோ, ஒரு அழகு பொருளாகவோ அல்லது ஒரு குளியல் சோப்பு ஆகவோ இருக்கலாம்.

இலவச டெலிவரி :
நீங்கள் ஆட் செய்யும் பொருளின் விலை ரூ.20/-க்குள் இருக்கலாம் என்பது போல தேர்வு செய்யுங்கள். அமேசான் அதன் புல்பில்ட்டு பொருட்களுக்கு ஒரு இலவச டெலிவரி வழங்கி வருகிறது என்பதால் அவைகளை தேர்வு செய்வதின் மூலம் டெலிவரிக்கான கூடுதல் கட்டணம் தானாக அகற்றப்பட்டுவிடும்.

தவறு செய்தால் :

நீங்கள் தேர்வு செய்வது ஒரு அமேசான் புல்பில்ட்டு தயாரிப்பாக மட்டுமே இருக்க வேண்டும் இதில் நீங்கள் தவறு செய்தால் ஒரு அமேசான்-புல்பில்ட்டு தயாரிப்பில்லாத ஒன்றை ஆட் செய்தால் நீங்கள் கூடுதளாக ரூ.40/- செலுத்த வேண்டியது இருக்கும்.

நிறுத்திக்கொள்ளலாம் :
புத்தகங்கள் மற்றும் அழகு பொருட்களுக்கான இலவச விநியோக விருப்பத்தை அமேசான் எப்போது வேண்டுமானாலும் நிறுத்திக்கொள்ளலாம். அதன் விளைவாக, இந்த இலவச விநியோக தந்திரம் செயல்படாமல் போகலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துரையிடுக Disqus

 
Top