0

இலவசமாகக் கிடைக்கும் எதுவும் இலவசம் கிடையாது என்பது மட்டுமே உண்மை. இது கூகுள் பிளே ஸ்டோருக்கும் பொருந்தும். ஆம் கூகுள் பிளே ஸ்டோரில் நீங்கள் பதிவிறக்கம் செய்யும் இலவச செயலிகள் அனைத்திற்கும் விளம்பரங்களின் வாயிலாகக் குறிப்பிட்ட நிறுவனங்கள் பணம் சம்பாதித்து வருகின்றன.

குறிப்பிட்ட செயலிகளை ஸ்மார்ட்போனில் பயன்படுத்தும் போது அதிகப்படியான விளம்பரங்களின் இடையூறு நம்மை எரிச்சலூட்டும். இங்கு இந்த எரிச்சலைத் தவிர்த்து விளம்பரங்களை முடக்குவது எப்படி என்பதைத் தான் இங்குத் தொகுத்திருக்கின்றோம்..


ஒபெரா
ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போனில் ஒபெரா (Opera) பிரவுஸரை பயன்படுத்தலாம்.
இந்த பிரவுஸரில் பில்ட்-இன் ஆட் பிளாக்கர் இருப்பதால் விளம்பரங்கள் தடுக்கப்படுகின்றன. 
 
ஒரு வேலை பிரவுஸரை மாற்ற முடியாது என்றால் தொடர்ந்து படித்து உங்களுக்கு ஏற்ற வழிமுறையினை பின்பற்றுங்கள்.

பிரவுஸர் செட்டிங்ஸ்

மற்றொரு எளிய வழிமுறை பிரவுஸர் செட்டிங்ஸ் மாற்றுவது தான். இதற்கு Settings > Advanced Settings > Pop-ups சென்று அவற்றை disable செய்யலாம்.

டேட்டா சேவர்
கூகுள் க்ரோம் பிரவுஸரில் டேட்டா சேவர் மோட் பயன்படுத்தும் போது விளம்பரங்களை பிளாக் செய்ய முடியும். இந்த ஆப்ஷன் குறிப்பிட்ட இணையப்பக்கங்களை கம்ப்ரெஸ் செய்வதால் சீரான இண்டர்நெட் வேகம் பெற முடியும்.

ஆட் பிளாக்கர்

ஆண்ட்ராய்டு பிரவுஸர்களில் ஆட் பிளாக்கர் எக்ஸ்டென்ஷன் சேவைகளைப் பயன்படுத்தலாம். கூகுள் பிளே ஸ்டோரில் இந்தச் சேவையை வழங்கும் பல்வேறு செயலிகள் கிடைக்கின்றன.

பிராக்ஸி செட்டிங்ஸ்
முன்பு குறிப்பிட்ட வழிமுறைகளில் ஏதேனும் தொல்லை ஏற்பட்டால் ஆண்ட்ராய்டு கருவியின் பிராக்ஸி செட்டிங்ஸ்களை மாற்றியமைக்கலாம்.
இதற்கு ஆட் பிளாக் பிளஸ் செயலியை இன்ஸ்டால் செய்ய வேண்டும். இதற்கு Settings > Security ஆப்ஷன்களுக்குச் சென்று Unknown sources ஆப்ஷனை எனேபிள் செய்ய வேண்டும்.

பின் கூகுள் க்ரோம் ஓபன் செய்து ஆட் பிளாக் பிளஸ் செயலியை டவுன்லோடு செய்ய வேண்டும்.

அடுத்து File Manager > downloads சென்று செயலியினை இன்ஸ்டால் செய்ய வேண்டும்.

இனி ஆட் பிளாக் பிளஸ் செயலியை செட்டப் செய்ய வேண்டும். இதற்கு செயலியின் வலது புறத்தின் மேல் பக்கம் இருக்கும் 'Configure' ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும். பிராக்ஸி கான்பிகிரேஷனை குறித்து வைத்துக் கொண்டு வை-பை செட்டிங்ஸ் சென்று மாடிஃபை நெட்வர்க் ஆப்ஷனை கிளிக் செய்து பிராக்ஸி செட்டிங்ஸ் ஆப்ஷனில் ஆட் பிளாக் பிளஸ் செயலி வழங்கிய பிராக்ஸி தகவல்களை பதிவு செய்ய வேண்டும்.

இந்த வழிமுறைகளை சரியாக பின்பற்றியிருந்தால் உங்களது ஸ்மார்ட்போனில் விளம்பரங்களின் தொல்லை ஏற்படாது.

கருத்துரையிடுக Disqus

 
Top