0

உங்கள் போனில் நெட்வொர்க் சின்னம் இல்லாமல் இருப்பதை விட ஒரு மோசமான காட்சியை உங்களால் பார்க்க முடியாது. முக்கியமாக மிக அவசரமான நிலையில், நெட்வொர்க் மிகவும் தேவைப்படும் போது என்ற அவசர சூழ்நிலைகளில் இதுபோன்ற சிக்னல் பிரச்சனைகள் மிகவும் மோசமான ஒரு தருணமாக இருக்கும்.

எனவே தான் இந்த கட்டுரை மூலம் நாங்கள் உங்களுக்கு ஒரு சில எளிய தந்திரங்களை வழங்கி அவசர நேரத்தில் உடனடியாக சிக்னலை மேம்படுத்துவது எப்படி என்பது சார்ந்த வழிமுறைகளை வழங்குகிறோம்..!
முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்
 
 

ரீஸ்டார்ட் செய்யுங்கள்

உங்கள் ஸ்மார்ட்போனை ரீஸ்டார்ட் செய்வதென்பது எந்த நெட்வொர்க் தொடர்பான பிரச்சினைகளையும் தீர்க்க முதல் வழியாகும். இது கேட்க மிக எளிமையான ஒரு வழிமுறையாக இருப்பினும் பெரும்பாலான நேரங்களில் இதுத்தாஹ்ன் சிக்கினால் சிக்கலை தீர்க்கிறது.

ஏர்பிளேன் மோட் ஆப் செய்யுங்கள்

சில நேரங்களில், நாம் அறியாமல் ஏர்பிளேன் மோட்தனை ஆன் செய்திருக்கலாம், எனவே, சிக்கினால் கிடைக்கவில்லை என்றால் ஒருமுறை ஏர்பிளேன் மோட் ஆப் செய்யப்பட்டு உள்ளதா என்பதை சோதித்து பார்த்துக் கொள்ளவும்.

சிம் கார்ட் கழட்டி மாற்றவும்

மேற்கூறிய இரண்டு வழிமுறைகளுமே உங்களின் பிரச்சனையை சரி செய்யவில்லை எனில் உங்கள் சிம் கார்டு ஒழுங்காக செருகப்பட்டு இருகிறதா என்பதை ஒரு முறை சோதித்து பார்த்துக் கொளவ்து நல்லது. தொலைபேசியில் இருந்து சிம் அட்டை நீக்கி விட்டு ஒன்று அல்லது இரண்டு நிமிடங்கள் வரை நீங்கள் காத்திருக்க வேண்டும் பின்பு மீண்டும் நுழைத்து முயற்சித்து பார்க்கவும்.

நெட்வெர்க் ஆட்டோமாட்டிக்கலி தேர்வு செய்யவும்

இதை நிகழ்த்த செட்டிங்ஸ் > வயர்லெஸ் அண்ட் நெட்வர்க் செட்டிங்ஸ் > மொபைல் நெட்வர்க் > மொபைல் ஆப்ரேட்டர்ஸ் சென்று ஆட்டோமடிக்கலி என்பதை கிளிக் செய்யவும்.

ப்ரம்வேர் அப்டேட்

மேல் கூறப்பட்ட எந்த வழிமுறையும் வேலை செய்ய தவறினால் நீங்கள் உங்கள் மேம்படுத்தலை சோதிக்க வேண்டும். அதை நிகழ்த்தசெட்டிங்ஸ் > அபௌட் போன் > சாப்ட்வெர் அப்டேட் > செக் அப்டேட்ஸ், அங்கு ஏதேனும் அப்டேட் கிடைக்கப் பெற்றால் அதை நிகழ்த்திக் கொள்ளவும்.

கருத்துரையிடுக Disqus

 
Top