0

நீங்கள், ஒரு நுகர்வோர் எனில் ஒரு பிராண்ட்- இன் தயாரிப்புப் பொருட்கள், அல்லது சேவையின் தரம் பற்றி உங்களுக்கு ஏதேனும் குறைபாடுகள் இருந்தால், நீங்கள் ஒரு நுகர்வோர் புகார் தாக்கல் செய்து அதைச் சரி செய்ய முடியும்.

ஒரு குறிப்பிட்ட பிரச்சினையைப் பொறுத்து ஒரு நுகர்வோர் பல்வேறு வகையான புகார்களைத் தாக்கல் செய்ய இயலும். ஒரு நுகர்வோருக்குப் பிரச்சனைகள் இருந்தால், அவர் அந்தப் பிரச்சனை சம்பந்தப்பட்ட தேவையான ஆவணங்களுடன் ஒரு நுகர்வோர் நீதிமன்றம் சென்று அவருடைய பிரச்சனைகளைப் பதிவு செய்யலாம். இது தான் தற்பொழுது இருக்கும் நடைமுறை.

இதற்கு மாற்றாக, நுகர்வோராகிய நீங்கள் ஒரு நுகர்வோர் புகாரை இணைய மூலமும் பதிவிட இயலும்.

இணைய மூலம் உங்களுடைய பிரச்சனைகளைப் பதிவிடப் பின்வரும் வழிமுறைகளைப் பின்பற்ற வேண்டும்.

அரசாங்கம், நுகர்வோர் ஆன்லைன் ஆதார மற்றும் அதிகாரமளித்தல் மையம் (http://consumerhelpline.gov.in/) என அழைக்கப்படும் ஒரு வலைத்தளத்தை நடத்தி வருகின்றது. இது ஒரு நுகர்வோர் புகார் மற்றும் குறைகளை நிவர்த்திச் செய்யும் மையம் ஆகும்.

இது நுகர்வோர் ஒருங்கிணைப்புக் கவுன்சிலால் நடத்தப்படுகின்றது. இதற்கு இந்திய அரசின் நுகர்வோர் விவகாரங்கள் துறை ஆதரவு வழங்குகின்றது.
புகார் கொடுக்க விரும்பும் நுகர்வோர், முதலில் இந்தத் தளத்தில் தங்களைப் பதிவு செய்து கொள்ள வேண்டும். அந்த வலைத்தளத்தில் உள்ள ஆன்லைன் பதிவு படிவத்தில் நுகர்வோரின் பெயர், மின்னஞ்சல், முகவரி மற்றும் தொலைப்பேசி எண் போன்ற விபரங்களைப் பதிவு செய்ய வேண்டும். அதன் பிறகு அவருக்கு உரியப் பயனாளர் ஐடி மற்றும் கடவுச்சொல் உருவாக்கப்படும்.

ஒரு நுகர்வோர், இந்தியாவில் பதிவு செய்யப்பட்ட எந்தவொரு பிராண்ட் அல்லது சேவைக்கும் எதிராகப் புகார் தெரிவிக்க இயலும். ஆன்லைன் புகார் அமைப்பு வலைத்தளத்தில் பல்வேறு துறைகள், பிராண்டுகள், மற்றும் சேவைகளை உள்ளடக்கிய ஒரு மெனு உள்ளது. அதைப் பயன்படுத்தி ஒரு நுகர்வோர் தன்னுடைய புகாரைப் பதிவு செய்யலாம்.

புகாரின் தன்மை, அந்தப் புகாருடன் சம்பந்தப்பட்டவர்கள் பற்றிய விபரங்கள் மற்றும் அதை உறுதிப்படுத்தும் ஆவணங்கள் ஆகியவற்றை அந்தத் தளத்தில் பதிவேற்ற வேண்டும். புகாரின் விளைவுகள் மற்றும் நுகர்வோர் கோரும் நிவாரணம் போன்றவற்றையும் அந்தத் தளத்திலேயே பதிவிடலாம்.
புகார் சமர்ப்பிக்கப்பட்ட பின் அந்தப் புகாருக்கு உரிய எண் மின்னணு முறையில் உருவாக்கப்பட்டு அந்தப் புகாருக்கு ஒதுக்கப்படும். அந்தப் புகார் தீர்க்கப்படும் வரை, புகாருக்கு உரிய எண்ணைப் பயன்படுத்தி அந்தப் புகாரின் நிலையைக் கண்காணிக்க இயலும்.

கருத்துரையிடுக Disqus

 
Top