0
Image result for nick vujicic quotes
ஒரு ஏழை. அவனிடம் செருப்பில்லை.தன்னிடம் செருப்பில்லையே என வருந்திய அவன். தன்னை செருப்பில்லாமல் படைத்த இறைவனை ஏசினான்.

ஒரு நாள் அவன் வீதியில் போகும் போது, இரண்டு காலுமற்ற ஒரு முடவனைக் கண்டான். தனக்கு இரண்டு கால்களும் இருப்பதை நினைத்து ஆறுதல் அடைந்தான். தனக்கு இரண்டு கால்களையும் அளித இறைவனுக்கு நன்றி செலுத்தினான்.

தனக்கு செருப்பில்லையே என்ற கவலை அவனை விட்டகழ்ந்தது

இது நீங்களும் அறிந்த ஒரு கதையே.செருப்பில்லாதவன் காலில்லாதவனை பார்த்து ஆறுதல் அடைய வேண்டும் என இந்தக் கதை நமக்கு அறிவுரை சொல்கிறது.

செருப்பில்லாதவன் காலில்லாதவனை பார்த்ததால் ஆறுதல் அடைந்தான். பார்த்திருக்காவிட்டால்?

காலில்லாதவன் ஆறுதல் அடைய யாரைப் பார்க்க வேண்டும்? கண்ணில்லாதவனையா?

கண்ணில்லாதவன் யாரை பார்த்து ஆறுதல் அடைவான்?
புரியவில்லை எனக்கு.

பிறரோடு ஒப்பிட்டு பார்த்து ஆறுதல் அடைவது தவறானது.ஒரு வகையில் தகாதது.

செருபில்லாதவன் காலில்லாதவனை பார்த்து ஆறுதல் அடைந்தால் என்றால், அவன் செருப்பில்ல்லையே என கவலைப்பட்டதே செருப்புள்ளவனை பார்த்து தானே.

செருப்பிலை என்று வ‌ருந்துப‌வ‌ன் உழைத்து செருப்பு வாங்க‌ வேண்டுமே அன்றி, காலில்லாத‌வ‌னைத் தேடி அலைய‌க் கூடாது. அது ஒரு வ‌கை குரூர‌மான‌ செய‌ல்.

ஒரு வித‌வை ஒரு சும‌ங்க‌லியை பார்த்து பெருமூச்சு விட்டாள்.
அந்த‌ வித‌வை சும‌ங்க‌லியை பார்த்து க‌வ‌லைப்ப‌ட்டாள்.

வித‌வை " என‌க்கு க‌ண‌வ‌ன் இல்லை. அத‌னால் நான் வ‌ரு த‌ப்ப‌டுகிறேன். உன‌க்கு தான் க‌ண‌வ‌ன் இருக்கிறானே. நீ எத‌ற்கு வ‌ருத்த‌ப்ப‌டுகிறாய்" என்று கேட்டாள்.
சும‌ங்க‌லி உன‌க்கு குழ‌ந்தை இருக்கிற‌து. என‌க்கில்லையே" என்று சொன்னாள்.

இது தான் ம‌னித‌ வாழ்க்கை. அது இருந்தால் இது இருக்காது. இது இருந்தால் அது இருக்காது. எல்லோருக்கும் எல்லாம் இருக்காது.

ப‌டைப்புக‌ள் எல்லாமே குறையான‌வை தான். ப‌டைத்த‌வ‌ன் ம‌ட்டுமே குறைய‌ற்ற‌வ‌ன். சொல்ல‌ப் போனால் ப‌டைப்பின் இல‌க்க‌ண‌மே குறைக‌ள் தான். இதில் தான் ப‌டைப்பில் ம‌ர்ம‌ம் அட‌ங்கியிருக்கிற‌து.

ப‌ரிமாண வ‌ள‌ர்ச்சி என்ப‌தே இன்த‌ குறைக‌ளால் ஏற்ப‌ட்ட‌து தானே. ப‌டைப்பில் குறையில்லை என்றால் ப‌ரிமாண வ‌ள‌ர்ச்சி உல‌கில் இல்லை.

குறைவுடைய‌து நிறைவ‌டைய‌ முய‌ற்சி செய்கிற‌து. இத‌னால் தான் ம‌னித‌ன் ப‌ரிமாண‌ வ‌ள‌ர்ச்சி அடைந்தான்.


"செல்வ‌த்தில் உன்னை விட‌ கீழே இருப்ப‌வ‌னை பார். அறிவில் உன்னை விட‌ மேலே இருப்ப‌வ‌னை பார்" இந்த‌ அறிவுரையும் ஒப்பிட்டு பார்க்க‌த்தான் சொல்கிற‌து.

வாழ்வ‌த‌ற்கு பொருள் வேண்டும். அதை ஈட்டுவ‌து ந‌ம‌து க‌ட‌மை.
ந‌ம்மை விட‌ கீழே இருப்ப‌வ‌ர்க‌ளைப் பார்த்து நாம் திருப்தி அடைய‌க் கூடாது.
ந‌ம்மை விட‌ கீழே உள்ள‌வ‌னுக்கு தேவைக‌ள் குறைவாக‌ இருக்க‌லாம். ந‌ம‌க்கு தேவைக‌ள் அதிக‌மாக‌ இருக்க‌லாம். ம‌ற்ற‌வ‌ர்க‌ளுட‌ன் ஒப்பிடுவ‌தை விட்டுவிட்டு ந‌ம‌க்கு என்ன‌ தேவையோ அதை தேடுவோம்.

ம‌ற்ற‌வ‌ர் துய‌ர‌த்தில் ம‌கிழ்ச்சி காண்ப‌து கொடுர‌மான‌து. தாழ் ந்திருப்ப‌வ‌ரை பார்த்து ஆறுத‌ல் அடைவ‌து குரூர‌மான‌து.

ம‌ற்ற‌வ‌ரை பார்த்து ஆறுத‌ல் அடைப‌வ‌ன் ச‌மூக‌த்தில் இருந்து த‌ன்னை பிரித்துக் கொள்கிறான். அவ‌னிட‌ம் ம‌னித‌ நேய‌த்தை எதிர்பார்க்க‌ முடியாது.
தாழ்ந்த‌வ‌ரை பார்த்து ம‌கிழ்ப‌வ‌ன், உய‌ர்ந்த‌வ‌ரை பார்த்து பொறாமை கொள்கிறான்.

இய‌ற்கை யாருக்கு எது தேவையோ அதை ப‌கிர்ந்த‌ளிதிருக்கிற‌து.

ப‌க‌லுக்கு சூரிய‌னை கொடுத்த‌ இய‌ற்கை, இர‌வுக்கு ச‌ந்திர‌னையும் ந‌ட்ச‌த்திர‌ங்க‌ளையும் கொடுத்திருக்கிறது.

ம‌யிலுக்கு அழ‌கை கொடுத்த‌ இய‌ற்கை, குயிலுக்கு குர‌லை கொடுத்திருக்கிற‌து.

ம‌லையிட‌ம் இருப்ப‌து க‌ட‌லிட‌ம் இல்லை. க‌ட‌லிட‌ம் இருப்ப‌து ம‌லையிட‌ம் இல்லை.

ஆணிட‌ம் இருப்ப‌து பெண்ணிடம் இல்லை. பெண்ணிட‌ம் இருப்ப‌து ஆணிட‌ம் இல்லை.

இது இருந்தால் அது இல்லை அது இருந்தால் இது இல்லை. இது தான் வாழ்க்கையின் நிய‌தி.

கருத்துரையிடுக Disqus

 
Top