0
உடனடியாக பரிவத்தனையை ஏற்கலாம்
இந்திய அரசு 500 மற்றும் 1000 ரூபாய் தாள்களை செல்லாது என்று அறிவித்ததில் நல்ல பயனை அடைந்தது என்றால் பேடிஎம் மற்றும் ஃப்ரீசார்ஜ் போன்ற டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை சேவை அளிக்கும் நிறுவனங்கள் என்று கூறலாம்.

இந்த இ-வாலெட்டுகள் பணவரித்த்னை தவிரப் பல சேவைகளை வழங்கி வருகின்றன.

பேடிஎம் மற்றும் பிற வாலெட்டுகளில் நீங்கள் எந்தச் சேவைகள் எல்லாம் பெற இயலும் என்று இங்குப் பார்ப்போம்.

உடனடியாக பரிவத்தனையை ஏற்கலாம்

நீங்கள் சிறியதாக ஒரு வணிகத்தை நடத்தி வருகிறீர்கள் என்று வைத்துக்கொள்ளுங்கள் கார்டு ஸ்கானர், கணினி போன்று எந்தச் சாதனமும் இல்லாமல் மொபைல் போனைப் பயன்படுத்தி டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை செய்துகொள்ளலாம்.

டிஜிட்டல் வாலெட்டுகளில் உங்கள் மொபைல் என்னைப் பதிவு செய்து கொண்டு பணவரித்தனைகான குறியீட்டைப் பெற்றுக்கொள்ள வேண்டும். பின்னர் உங்கள் மொபைல் போனில் வாலெட்டுகளின் செயலியைப் பதிவிறக்கம் செய்து இருந்தால் போதும் பணத்தை எளிதாக அனுப்பிவிடலாம்.
நீங்கள் பணம் செலுத்த வேண்டிய வணிகரின் கணக்கு விவரங்களை உள்ளிட்டு பணத்தை அனுப்பவும் என்ற தெரிவை தேர்வு செய்வதன் மூலமாக எளிதாக பணப்பரிமாற்றம் செய்ய இயலும். இதற்கு உடனடியாக வணிகர்கள் அலர்ட் செய்திகளைப் பெறுவர்.

பேமெண்ட் வங்கி சேவை

மிகப் பிரபலமான பேடிஎம் டிஜிட்டல் வாலெட்டுகள் இந்திய ரிசர்வ் வங்கியிடம் இருந்து பேமெண்ட் வங்கி சேவைக்காக உரிமம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்த பேமெண்ட் வங்கி சேவையில் எந்த ஒரு ஆவணமும் வாடிக்கையாளர்கள் சமர்ப்பிக்காமல் 10,000 ரூபாய் வரை பணப்பரிவத்தனை செய்துகொள்ளலாம். இதுவே உங்கள் அடையாள சான்றுகள் போன்றவற்றைச் சமர்ப்பிக்கும் போது பரிவர்த்தனையின் அளவு அதிகரிக்கப்படும்.

மேலும் விரைவில் டிஜிட்டல் கிரெடிட், டெபிட் கார்டுகள், சேமிப்பு கணக்குகள் போன்ற சேவையை பெற்று பயன்பெற இயலும்.

வங்கி கணக்கில் பணத்தைச் செலுத்துதல்

டிஜிட்டல் முறையில் உங்கள் வாடிக்கையாளர்களிடம் இருந்து நீங்கள் பெறும் பணத்தை எளிதாக உங்கள் வங்கி கணக்குகளுக்கும் இந்த வாலெட்டுகள் மூலம் மாற்றிக்கொள்ளலாம். இதற்கு 1 சதவீதம் சேவை கட்டணமாக வசூலிக்கப்படும்.

புதிய பேடிஎம் வாடிக்கையாளர்கள் வங்கி கணக்கிற்கு பணத்தை அனுப்பும் போது 3 நாட்கள் வரை எடுத்துக்கொள்ளும்.

வாலெட்ஸ் ஆன் டெலிவரி

வளர்ந்து வரும் இ-காமர்ஸ் சந்தையில் பலர் கடைகளுக்குச் சென்று பொருட்கள் வங்குவதை குறைத்துக் கொண்டு இணையதளம் மூலமாக வங்கி வருகின்றனர்.

அப்போது அவர்கள் பயன்படுத்தும் கேஷ் ஆன் டெலிவரி சேவையை இப்போது அனைவரும் நிருத்தி உள்ள நிலையில் வாலெட்டுகள் ஆன் டெலிவரி சேவையை பயன்படுத்தத் துவங்கலாம்.

அருகில் உள்ள ஸ்டோர்கள்

டிஜிட்டல் வாலெட்டுகள் போன்ற சேவையை அனைவரும் பயன்படுத்தாத நிலையில் எங்கு எல்லாம் பயன்படுத்துகிறார்கள் என்ற விவரங்களையும் பேடிஎம் போன்று செயலிகள் அளிக்கின்றன.

இது போன்ற சேவைகளைப் பயன்படுத்தி தாங்கள் இருக்கும் பகுதியின் அருகில் உள்ள ஸ்டோர்களை கண்டறிந்து டிஜிட்டல் முறையில் பணம் செலுத்தி பொருட்களை பெற்றுக்கொள்ளலாம்.

இணையப் பரிவர்த்தனைக்கான டிஜிட்டல் கார்டுகள்

பல வாலெட்டு நிறுவனங்கள், ஐசிஐசிஐ வங்கி, எச்டிஎப்சி வங்கி போன்ற வங்கிகள் டிஜிட்டல் கார்டுகளை வழங்குகின்றனர். அதனைப் பயன்படுத்தி இது போன்று டிஜிட்டல் பரிவர்த்தனையை ஏற்றுக்கொள்ளும் ஸ்டோர்களில் பரிவர்த்தனை செய்யலாம்.

சாதாரண டெபிட், கிரெடிட் கார்டுகளை போன்று காலாவதி தேதி பொன்றவை இதிலும் உண்டு.

சிம்பிள்(Simpl)

பொருட்களை வாங்கிய பிறகு நிதானமாக பணத்தை திருப்பிச் செலுத்தலாம். இந்தச் சேவையை புக்மைஷோ, ஃபாசோஸ், ஃப்ரெஷ்மெனு போன்றவர் வழங்குகின்றனர்.

இந்தச் செயலியை உங்கள் போனில் நிறுவிய உடன் பொருட்களை வாங்கும் போது இந்த முறையில் பணத்தை பெற்றுக்கொள்ளும் ஸ்டோர்களில் சிம்பிள்(Simpl) என்ற பரிவர்த்தனை முறை தேர்வு செய்து உங்கள் வியாபாரத்தை முடித்துக்கொள்ளலாம். ஒரு முறை கடவுச்சொல், வங்கி விவரங்கள் போன்றவற்றை இதில் உள்ளிடத் தேவை இல்லை.

போஸ்ட்பெய்ட் மொபைல் பில் போன்று மாதம் 1 ஆம் தேதி மற்றும் 16 தேதி கட்டணத்தை செலுத்தினால் போதும். இதன் மூலம் அனைத்துக் கடைகளிலும் உங்கள் கணக்கு விவரங்களை அளிக்க வேண்டும் என்ற நிலை இல்லை.

கருத்துரையிடுக Disqus

 
Top