பெரும்பாலான புதிய தாய்மார்கள் அவஸ்தைப்படும் ஒன்று தான் குழந்தைகளை
தூங்க வைக்க முடியாமல் இருப்பது. அதிலும் 4 வயதிற்குட்பட்ட குழந்தைகளை
வைத்திருந்தால், அந்த குழந்தைகளின் அம்மாக்கள் படும்பாடு இருக்கிறதே, அதைச்
சொல்லி மாளாது. அந்த அளவில் குழந்தைகள் சேட்டைகளை செய்வார்கள்.
குறிப்பாக
இந்த வயதிற்குட்பட்ட குழந்தைகள் தூங்க வைப்பது என்பது மிகவும் பெரிய
வேலையாக இருக்கும். அதற்கு வழிகளே இல்லையா என்று பல தாய்மார்களும்
ஏங்குவார்கள். அத்தகையவர்களுக்கு அனுபவமுள்ள தாய்மார்கள் கூறிய சில
ட்ரிக்ஸ்களை கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
3
குழந்தைகளுக்குத் தாயான சாடியா ஆசிஸ், அவரது குழந்தைகள் அழாமல் விரைவில்
தூங்குவதற்கு வேக்யூம் கிளீனரைப் பயன்படுத்தியதாக கூறுகிறார்.
மேலும் அவர் தன் குழந்தைகள் தூங்குவதற்கு அழும் போது,
வேக்யூம் கிளீனரை போட்டால், 5 நிமிடத்தில் தூங்கிவிடுவதாக கூறுகிறார்.
முயற்சித்து தான் பாருங்களேன்.
குழந்தைகளுக்கு
தூக்கத்தை வரவழைக்கும் ஓர் மற்றொரு பொருள் தான் ஹேர் ட்ரையர்.
அதுமட்டுமின்றி, இந்த ட்ரிக்ஸ் சத்தியமாக உண்மை எனவும் நிறைய தாய்மார்கள்
கூறுகின்றனர். எனவே ஹேர் ட்ரையரை ஆன் செய்து விடுங்கள். இதனால் அதிலிருந்து
வெளிவரும் சப்தத்தால், உங்கள் குழந்தை விரைவில் உறங்கிவிடும்.
உங்கள்
குழந்தை ஒருவேளை தூங்காமல் இருந்தால், போரடிக்கும் புத்தகங்களைப்
படியுங்கள். பெரியவர்களுக்கே இந்த ட்ரிக்ஸ் உதவும் போது, குழந்தைகளுக்கு
உதவாதா என்ன? எனவே இதை முயற்சித்துப் பாருங்கள்.
குழந்தையின்
மூக்கு மற்றும் தலைப் பகுதியில் மசாஜ் செய்து விடுவதன் மூலம், குழந்தை
நன்கு தூங்கும். அதுவும் இருட்டான அறையில் குழந்தையுடன் படுத்துக் கொண்டே
இந்த முறையை முயற்சித்துப் பாருங்கள்.
சொன்னால்
நம்பமாட்டீர்கள், குறைந்தது 4 தாய்மார்கள், தங்களது குழந்தை டிவி
பார்த்துக் கொண்டே தூங்கிவிடுவதாக கூறுகின்றனர். அது எப்படியென்று
தெரியவில்லை, ஆனால் நிச்சயம் குழந்தைகள் தூங்கிவிடுகின்றனராம்.
Dailyhunt
கருத்துரையிடுக Facebook Disqus